விற்பனையில் புதிய மைல்கல்லை தொட்டு அசத்திய மாருதி நெக்ஸா!

மாருதி நெக்ஸா ஷோரூம்கள் வாயிலாக விற்பனை செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கை புதிய மைல்கல்லை தொட்டு அசத்தி இருக்கிறது. அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

விற்பனையில் புதிய மைல்கல்லை தொட்டு அசத்திய மாருதி நெக்ஸா!

மாருதி தொட்டதெல்லாம் பொன்னாகும் என்ற நிலைதான் இந்திய கார் சந்தையில் இருந்து வருகிறது. கிட்டத்தட்ட 50 சதவீதத்தை நெருங்கும் அளவுக்கு சந்தை பங்களிப்பை தக்க வைத்து வருகிறது. இந்த நிலையில், அந்நிறுவனத்தின் நெக்ஸா பிரிவு விற்பனையில் புதிய மைல்கல்லை தொட்டு அசத்தி இருக்கிறது.

விற்பனையில் புதிய மைல்கல்லை தொட்டு அசத்திய மாருதி நெக்ஸா!

கடந்த 2015ம் ஆண்டு மாருதி நிறுவனம் தனது சாதாரண மற்றும் பிரிமீயம் வகை கார்களுக்காக இரண்டு பிரிவுகளை துவங்கியது. விலை குறைவான சாதாரண வகை கார்களை அரேனா ஷோரூம்கள் வாயிலாகவும், சற்றே விலை அதிகம் கொண்ட பிரிமீயம் வகை கார்களுக்காக நெக்ஸா என்ற ஷோரூம்களையும் திறந்தது.

விற்பனையில் புதிய மைல்கல்லை தொட்டு அசத்திய மாருதி நெக்ஸா!

மேலும், சற்றே கூடுதல் விலை கொண்ட தனது பிரிமீயம் கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில், பிரிமீயம் அம்சங்கள் மற்றும் பிரத்யேக கட்டமைப்புக் கொள்கையுடன் நெக்ஸா கார் ஷோரூம்கள் திறக்கப்பட்டன.

விற்பனையில் புதிய மைல்கல்லை தொட்டு அசத்திய மாருதி நெக்ஸா!

இந்த நிலையில், நெக்ஸா கார் ஷோரூம்கள் வாயிலாக விற்பனை செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கை புதிய மைல்கல்லை தொட்டு அசத்தி இருக்கிறது. அதாவது, கடந்த 2015ம் ஆண்டு முதல் இதுவரை 13 லட்சம் கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் நெக்ஸா வாயிலாக விற்பனை செய்துள்ளது.

விற்பனையில் புதிய மைல்கல்லை தொட்டு அசத்திய மாருதி நெக்ஸா!

மாருதி நெக்ஸா ஷோரூம்கள் வாயிலாக பலேனோ, சியாஸ், இக்னிஸ், எக்ஸ்எல்-6 மற்றும் எஸ் க்ராஸ் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த கார்கள் பெட்ரோல் எஞ்சின் தேர்வில் கிடைத்து வருகின்றன.

விற்பனையில் புதிய மைல்கல்லை தொட்டு அசத்திய மாருதி நெக்ஸா!

கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மாருதி எஸ் க்ராஸ் கார் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனையில் சிறப்பான எண்ணிக்கையை பதிவு செய்து வருவதாக மாருதி தெரிவித்துள்ளது. இந்த காரின் விற்பனை நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டு காலத்தில் 104 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

விற்பனையில் புதிய மைல்கல்லை தொட்டு அசத்திய மாருதி நெக்ஸா!

அதேபோன்று, கடந்த 2017ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இக்னிஸ் காரின் விற்பனை 1.4 லட்சம் யூனிட்டுகளை தொட்டு அசத்தி இருப்பதாகவும் மாருதி தெரிவித்துள்து. மேலும், கார் விற்பனையில் நாட்டின் மூன்றாவது பெரிய நிறுவனமாக நெக்ஸா உள்ளதாகவும் மாருதி பெருமிதம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து மாருதி சுஸுகி நிறுவனத்தின் பங்கு மதிப்பு 1 சதவீதம் அதிகரித்துள்ளது.

Most Read Articles

English summary
Maruti Suzuki has announced that it's NEXA unit clocked 1.3 million sales in 5 years.
Story first published: Friday, February 12, 2021, 9:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X