ஜிம்னி பற்றிய வதந்திக்கு முற்றிப்புள்ளி வைத்த மாருதி சுஸுகி!! அடுத்த அறிமுகம் புதிய எஸ்-கிராஸ் தானாம்!

இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமாக மாருதி விளங்குகிறது. ஆனால் இந்திய-ஜப்பானிய கூட்டணி நிறுவனமாக விளங்கும் இது கிட்டத்தட்ட கடந்த 2 வருடங்களாக எந்தவொரு புதிய தயாரிப்பையும் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தவில்லை என்றால் நம்ப முடிகிறதா.

ஜிம்னி பற்றிய வதந்திக்கு முற்றிப்புள்ளி வைத்த மாருதி சுஸுகி!! அடுத்த அறிமுகம் புதிய எஸ்-கிராஸ் தானாம்!

மாருதி சுஸுகி பிராண்டில் இருந்து கடைசியாக 2019இல் வெளிவந்த கார் எஸ்-பிரெஸ்ஸோ ஆகும். இந்த 2021ஆம் வருடம் இறுதி வரையில் எந்தவொரு புதிய காரையும் அறிமுகப்படுத்தும் திட்டத்தில் மாருதி சுஸுகி இல்லை. 2022ஆம் துவக்கத்தில் தான் புதிய தலைமுறை செலிரியோ அறிமுகப்படுத்தப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஜிம்னி பற்றிய வதந்திக்கு முற்றிப்புள்ளி வைத்த மாருதி சுஸுகி!! அடுத்த அறிமுகம் புதிய எஸ்-கிராஸ் தானாம்!

அப்டேட் செய்யப்பட்டு வெளிவரும் புதிய செலிரியோ காரை தொடர்ந்து வரிசையாக புதிய தயாரிப்புகளை இந்த இந்திய-ஜப்பானிய நிறுவனம் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கிறோம். இந்த வகையில் இன்னும் சில ஆண்டுகளில் நம் நாட்டு சந்தையில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படும் வாகனங்களுள் ஜிம்னியும் ஒன்றாகும்.

ஜிம்னி பற்றிய வதந்திக்கு முற்றிப்புள்ளி வைத்த மாருதி சுஸுகி!! அடுத்த அறிமுகம் புதிய எஸ்-கிராஸ் தானாம்!

இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் டீசர் வீடியோ ஒன்றினை மாருதி சுஸுகி நிறுவனம் வெளியிட்டு இருந்தது. அந்த டீசரில் வாகனம் எதுவும் காண்பிக்கப்படவில்லை. பாலைவனம் போன்ற மணற்பரப்பு மட்டும் காட்டப்பட்டு, அதன் மீது 'யார் என்று கண்டுப்பிடியுங்கள்' என குறிப்பிடப்பட்டு இருந்தது.

ஜிம்னி பற்றிய வதந்திக்கு முற்றிப்புள்ளி வைத்த மாருதி சுஸுகி!! அடுத்த அறிமுகம் புதிய எஸ்-கிராஸ் தானாம்!

இதையெல்லாம் விட முக்கியமாக ஒரு வாகனம் சென்றிருப்பதற்கான டயர் தடங்கள் கொடுக்கப்பட்டு இருந்தன. இரு டயர் தடமும் நன்கு தூரமாகவே இருந்ததால், ஜிம்னியை தான் மாருதி சுஸுகி நிறுவனம் குறிப்பிடுகிறது என செய்திகள் வெளியாக துவங்கின. விற்பனையில் மஹிந்திரா தாருக்கு போட்டியான இது ஜப்பான் நாட்டு சந்தையில் பிரபலமானது என்பதை நான் கூற வேண்டிய அவசியம் இருக்காது என்றே நினைக்கிறேன்.

ஜிம்னி பற்றிய வதந்திக்கு முற்றிப்புள்ளி வைத்த மாருதி சுஸுகி!! அடுத்த அறிமுகம் புதிய எஸ்-கிராஸ் தானாம்!

இதன் நான்காம் தலைமுறை மாடல் கடந்த 2018இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள டீசர் வீடியோவில் வேறு மாதிரியாக மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது. இந்த புதிய வீடியோவில் எஸ்-கிராஸை குறிப்பிட்டுள்ளது. இதை தான் முந்தைய டீசரிலும் மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதாவது தற்போது விற்பனையில் இருக்கும் எஸ்-கிராஸ் அப்டேட் செய்யப்பட உள்ளதாம். அப்படியென்றால் ஜிம்னியை பற்றி கூறவில்லையா? என்று தான் கேட்க தோன்றுகிறது. ஜிம்னி இந்தியாவில் கடந்த 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த வகையில் 2 வருடங்கள் நிறைவடைய உள்ளதால் மாருதி சுஸுகி ஜிம்னி வாகனம் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்க துவங்கியுள்ளது.

ஜிம்னி பற்றிய வதந்திக்கு முற்றிப்புள்ளி வைத்த மாருதி சுஸுகி!! அடுத்த அறிமுகம் புதிய எஸ்-கிராஸ் தானாம்!

இந்தியாவில் விற்பனை செய்யப்படவில்லை என்றாலும், ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் தெற்கு அமெரிக்க நாடுகளுக்காக நம் நாட்டில் ஜிம்னி வாகனங்களை தயாரிக்கும் பணிகள் இந்த ஆண்டு துவக்கத்தில் துவங்கப்பட்டது. சர்வதேச விற்பனைக்கான 3-கதவு மாருதி ஜிம்னி வாகனங்கள் குருக்ராம் பகுதியில் மாருதியின் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

ஜிம்னி பற்றிய வதந்திக்கு முற்றிப்புள்ளி வைத்த மாருதி சுஸுகி!! அடுத்த அறிமுகம் புதிய எஸ்-கிராஸ் தானாம்!

நம் நாட்டில் தான் தயாரிக்கப்படுவதால், இங்கு சோதனை ஓட்டங்களையும் மாருதி சுஸுகி மேற்கொண்டு வருகிறது. ஜிம்னியின் இந்திய வருகை எப்போதோ நடக்க வேண்டியது. இணையத்தள பக்கத்திற்கு கொண்டுவரப்பட்ட ஜிம்னியின் பெயரை மாருதி சுஸுகி நிறுவனம் சில காரணங்களால் நீக்கியது.

ஜிம்னி பற்றிய வதந்திக்கு முற்றிப்புள்ளி வைத்த மாருதி சுஸுகி!! அடுத்த அறிமுகம் புதிய எஸ்-கிராஸ் தானாம்!

வாடிக்கையாளர்களிடம் இருந்து பெரிய அளவில் கவனம் கிடைக்காததால் ஜிம்னியை அறிமுகம் செய்வதை மாருதி தற்காலிகமாக நிறுத்திக்கொண்டதாக அந்த சமயத்தில் செய்திகள் வெளிவந்தன. ஆனால் தற்போது இரண்டாம் தலைமுறை மஹிந்திரா தாருக்கு கிடைத்துவரும் வரவேற்பை பார்த்து நிச்சயம் மாருதி சுஸுகி நிறுவனம் மறுப்பரிசீலனை செய்யும் என நினைக்கிறேன்.

ஜிம்னி பற்றிய வதந்திக்கு முற்றிப்புள்ளி வைத்த மாருதி சுஸுகி!! அடுத்த அறிமுகம் புதிய எஸ்-கிராஸ் தானாம்!

கடந்த 2020ஆம் ஆண்டு இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய மஹிந்திரா தாருக்கு முன்பதிவுகள் ஒரு பக்கம் குவிந்து கொண்டிருக்க, இதன் காரணமாக முன்பதிவு செய்து வாடிக்கையாளர் காத்திருக்க வேண்டிய கால அளவு மறுப்பக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த வரவேற்பு கொடுத்த தைரியத்தில் 5-கதவு தாரின் வடிவமைப்பு பணியிலும் இறங்க மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.

ஜிம்னி பற்றிய வதந்திக்கு முற்றிப்புள்ளி வைத்த மாருதி சுஸுகி!! அடுத்த அறிமுகம் புதிய எஸ்-கிராஸ் தானாம்!

இதனால் 5-கதவு மாருதி சுஸுகி ஜிம்னி எதிர்காலத்தில் விற்பனைக்கு வந்தாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை. இதை ஏன் இப்போது கூறுகிறேன் என்றால், சமீபத்தில் தான் 5-கதவு ஜிம்னி குறித்த விபரங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தன. இந்த தகவல்களின்படி 5-கதவு ஜிம்னியின் நீளம் 3,850மிமீ ஆக இருக்குமாம்.

Most Read Articles
English summary
Maruti suzuki says that was s cross teaser not jimny find here more details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X