இது வேறயா... பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர்ந்து வரும் நிலையில் மக்களின் தலையில் இறங்கிய அடுத்த இடி...

பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர்ந்து வரும் நிலையில் மக்களின் தலையில் அடுத்த இடி இறங்கியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இது வேறயா... பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர்ந்து வரும் நிலையில் மக்களின் தலையில் இறங்கிய அடுத்த இடி...

நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் (ஜூலை-செப்டம்பர் காலகட்டம்) கார்களின் விலையை மீண்டும் ஒரு முறை உயர்த்தவுள்ளதை மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது உறுதி செய்துள்ளது. ஆனால் மாருதி சுஸுகி கார்களின் விலை எவ்வளவு உயரவுள்ளது? என்பது உறுதியாக தெரியவில்லை. வரும் நாட்களில் மாருதி சுஸுகி நிறுவனம் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்.

இது வேறயா... பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர்ந்து வரும் நிலையில் மக்களின் தலையில் இறங்கிய அடுத்த இடி...

எனினும் கார்களை பொறுத்து விலை உயர்வு மாறுபடும் என்பது தற்போது தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் நடப்பாண்டில் மூன்றாவது முறையாக மாருதி சுஸுகி நிறுவனம் கார்களின் விலையை உயர்த்தவிருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக நடப்பாண்டில் ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில், மாருதி சுஸுகி நிறுவனம் தனது கார்களின் விலையை உயர்த்தியிருந்தது.

இது வேறயா... பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர்ந்து வரும் நிலையில் மக்களின் தலையில் இறங்கிய அடுத்த இடி...

இதை தொடர்ந்து நடப்பாண்டில் மூன்றாவது முறையாக மாருதி சுஸுகி நிறுவன கார்களின் விலை மீண்டும் உயரவுள்ளது. உற்பத்தி செலவுகள் அதிகரித்து கொண்டே வருவதால், மாருதி சுஸுகி நிறுவனம் கார்களின் விலையை உயர்த்தவுள்ளதாக தெரிகிறது. மாருதி சுஸுகி நிறுவனத்தை தொடர்ந்து மேலும் சில நிறுவனங்களும் கார்களின் விலையை உயர்த்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது வேறயா... பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர்ந்து வரும் நிலையில் மக்களின் தலையில் இறங்கிய அடுத்த இடி...

எனவே புதிய கார்களை வாங்க திட்டமிட்டுள்ளவர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏற்கனவே ஊரடங்கு காரணமாக வருவாய் இழப்பு, பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில் கார்களின் விலை மீண்டும் உயரவுள்ளது பொதுமக்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இது வேறயா... பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர்ந்து வரும் நிலையில் மக்களின் தலையில் இறங்கிய அடுத்த இடி...

இதன் காரணமாக கார்களின் விற்பனை குறையுமா? என்பது தெரியவில்லை. அதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதற்கிடையே கொரோனா வைரஸ் இரண்டாவது அலையை கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், இந்தியாவில் முன்னணி நிறுவனங்களின் வாகன உற்பத்தி பாதிக்கப்பட்டிருந்தது.

இது வேறயா... பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர்ந்து வரும் நிலையில் மக்களின் தலையில் இறங்கிய அடுத்த இடி...

ஆனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் தாக்கம் தற்போது படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. எனவே வாகன உற்பத்தியும் தற்போது மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. பண்டிகை காலத்தில் மக்கள் புதிய வாகனங்களை ஆர்வமாக வாங்குவார்கள் என்பதால், தற்போதில் இருந்தே வாகன நிறுவனங்கள் அதற்கு தயாராகி வருகின்றன.

இது வேறயா... பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர்ந்து வரும் நிலையில் மக்களின் தலையில் இறங்கிய அடுத்த இடி...

இதன் ஒரு பகுதியாக ஏராளமான புதிய வாகனங்கள் விற்பனைக்கு வருவதற்கு தயாராக இருக்கின்றன. மாருதி சுஸுகி நிறுவனத்தை பொறுத்தவரை, புதிய தலைமுறை செலிரியோ விற்பனைக்கு வரவுள்ளது. புதிய தலைமுறை செலிரியோ காரை மாருதி சுஸுகி நிறுவனம் இந்தியாவில் ஏற்கனவே சாலை சோதனைகளுக்கு உட்படுத்தி வருகிறது.

இது வேறயா... பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர்ந்து வரும் நிலையில் மக்களின் தலையில் இறங்கிய அடுத்த இடி...

அப்படி சோதனை செய்யப்படும்போது கேமராவின் கண்களில் மாருதி சுஸுகி செலிரியோ கார் பலமுறை சிக்கியுள்ளது. விரைவில் விற்பனைக்கு வரவுள்ள புதிய தலைமுறை மாருதி சுஸுகி செலிரியோ, பழைய மாடலுடன் ஒப்பிடுகையில் பல விதங்களில் மேம்பட்டிருக்கும். எனவே வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Article Published On: Monday, June 21, 2021, 17:21 [IST]
English summary
Maruti Suzuki To Hike Prices Of Cars From July: Here Are All The Details. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+