கருப்பு நிறத்தில் கொண்டுவரப்படும் மாருதி இக்னிஸ்!! எப்படி இருக்க போகுதோ...!

மாருதி சுஸுகி அதன் இக்னிஸ் கார் மாடலை விரைவில் கருப்பு நிறத்தில் கொண்டுவர திட்டமிட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அவற்றை பற்றி விரிவாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

கருப்பு நிறத்தில் கொண்டுவரப்படும் மாருதி இக்னிஸ்!! எப்படி இருக்க போகுதோ...!

மாருதி சுஸுகி நிறுவனம் இக்னிஸ் கார் மாடலை முதன்முதலாக 2017ல் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. அதன்பின் கடந்த 2020ல் சில ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட்களை ஏற்றிருந்த இந்த காரை தான் விரைவில் புதிய நிறத்தேர்வில் மாருதி சுஸுகி நிறுவனம் வழங்கவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

கருப்பு நிறத்தில் கொண்டுவரப்படும் மாருதி இக்னிஸ்!! எப்படி இருக்க போகுதோ...!

இது தொடர்பான ஸ்பை படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளதாக கூறப்படுகின்றன. ஆனால் நமக்கு இன்னும் அந்த படம் கிடைக்க பெறவில்லை. மேலும், இந்த புதிய நிறத்தேர்வில் காரின் தோற்றத்தில் வேறெந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருப்பு நிறத்தில் கொண்டுவரப்படும் மாருதி இக்னிஸ்!! எப்படி இருக்க போகுதோ...!

மாருதி இக்னிஸ் தற்சமயம் சில்கி சில்வர், பளபளக்கும் க்ரே, முத்தின் வெள்ளை, கருப்பு நிற மேற்கூரை உடன் லூசண்ட் ஆரஞ்ச், டர்க்கைஸ் நீலம், நெக்ஸா நீலம், கருப்பு நிற மேற்கூரை உடன் நெக்ஸா நீலம் மற்றும் சில்வர் மேற்கூரை உடன் நெக்ஸா நீலம் என்ற நிறத்தேர்வுகளில் விற்பனைக்கு கிடைக்கிறது.

கருப்பு நிறத்தில் கொண்டுவரப்படும் மாருதி இக்னிஸ்!! எப்படி இருக்க போகுதோ...!

அதேநேரம் சிக்மா, டெல்டா, ஸெட்டா மற்றும் ஆல்பா என்ற நான்கு விதமான ட்ரிம் நிலைகளிலும் இக்னிஸை மாருதி நிறுவனம் சந்தைப்படுத்தி வருகிறது. இந்த நான்கு விதமான ட்ரிம்களில் முன்பக்க இருக்கைகளில் பவர் ஜன்னல்கள், சற்று சாய்வான ஸ்டேரிங் சக்கரம், மேனுவல் ஏசி & ஹீட்டர், இரு முன்பக்க காற்றுப்பைகள் மற்றும் பின்பக்க பார்க்கிங் சென்சார்கள் உள்ளிட்டவை சிறப்பம்சங்களாக வழங்கப்படுகின்றன.

கருப்பு நிறத்தில் கொண்டுவரப்படும் மாருதி இக்னிஸ்!! எப்படி இருக்க போகுதோ...!

அதேநேரம் விலை அதிகம் கொண்ட ட்ரிம்களில், கூடுதலாக ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், பின்பக்க இருக்கைகளில் ஹெட்ரெஸ்ட், சாவி இல்லா நுழைவு, என்ஜினை ஸ்டார்ட்/ ஸ்டாப் செய்ய பொத்தான், உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை போன்றவை 4 பவர் ஜன்னல்களுடன் கொடுக்கப்படுகின்றன.

கருப்பு நிறத்தில் கொண்டுவரப்படும் மாருதி இக்னிஸ்!! எப்படி இருக்க போகுதோ...!

எஸ்யூவியை போன்று தோற்றமளிக்கும் உயரமான-ஹேட்ச்பேக் காராக இக்னிஸ் வடிவமைக்கப்படுவதால் காரின் உட்புறத்திலும் நமக்கு அதிக இட வசதி கிடைக்கிறது. இக்னிஸில் 1.2 லிட்டர், நேச்சுரலி அஸ்பிரேட்டட், இன்லைன்-4 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது.

கருப்பு நிறத்தில் கொண்டுவரப்படும் மாருதி இக்னிஸ்!! எப்படி இருக்க போகுதோ...!

அதிகப்பட்சமாக 83 பிஎஸ் மற்றும் 113 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த பெட்ரோல் என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 5-ஸ்பீடு ஏஎம்டி என்ற ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன. மாருதி இக்னிஸின் எக்ஸ்ஷோரூம் விலைகள் ரூ.4.89 லட்சத்தில் இருந்து ரூ.7.30 லட்சம் வரையில் உள்ளன.

Most Read Articles

English summary
Maruti Suzuki to introduce New Black colour option for Ignis. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X