மாருதி சுஸுகி நிறுவனம் எடுத்த திடீர் முடிவு... என்னனு தெரிஞ்சா உங்களுக்கு கார் வாங்கற ஆசையே போயிரும்!

மாருதி சுஸுகி நிறுவனம் எடுத்துள்ள முடிவால், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மாருதி சுஸுகி நிறுவனம் எடுத்த திடீர் முடிவு... என்னனு தெரிஞ்சா உங்களுக்கு கார் வாங்கற ஆசையே போயிரும்!

இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி, வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆம், மாருதி சுஸுகி நிறுவன கார்களின் விலை மீண்டும் ஒரு முறை உயரவுள்ளது. இந்த விலை உயர்வு அடுத்த மாதம் முதல் (செப்டம்பர்) அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாருதி சுஸுகி நிறுவனம் எடுத்த திடீர் முடிவு... என்னனு தெரிஞ்சா உங்களுக்கு கார் வாங்கற ஆசையே போயிரும்!

உற்பத்தி செலவுகள் அதிகரித்து வருவதன் காரணமாகவே கார்களின் விலையை உயர்த்தவுள்ளதாக மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் கார்களின் விலை எவ்வளவு உயரவுள்ளது? என்பதை மாருதி சுஸுகி நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அதே சமயம் குறிப்பிட்ட மாடல்கள் என்றில்லாமல், அனைத்து மாடல்களின் விலையும் உயரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாருதி சுஸுகி நிறுவனம் எடுத்த திடீர் முடிவு... என்னனு தெரிஞ்சா உங்களுக்கு கார் வாங்கற ஆசையே போயிரும்!

கடந்த 8 மாதங்களில், அதாவது நடப்பாண்டில், மூன்றாவது முறையாக மாருதி சுஸுகி நிறுவனம் தனது கார்களின் விலையை உயர்த்தவுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக கடந்த ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களிலும் மாருதி சுஸுகி நிறுவனம் தனது கார்களின் விலையை அதிரடியாக உயர்த்தியிருந்தது.

மாருதி சுஸுகி நிறுவனம் எடுத்த திடீர் முடிவு... என்னனு தெரிஞ்சா உங்களுக்கு கார் வாங்கற ஆசையே போயிரும்!

இதை தொடர்ந்து மூன்றாவது முறையாக வரும் செப்டம்பர் மாதம் மீண்டும் ஒரு முறை மாருதி சுஸுகி நிறுவன கார்களின் விலைகள் உயரவுள்ளன. இது புதிதாக மாருதி சுஸுகி காரை வாங்க திட்டமிட்டுள்ளவர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விலை உயர்வு காரணமாக மாருதி சுஸுகி கார்களின் விற்பனை பாதிக்கப்படுமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மாருதி சுஸுகி நிறுவனம் எடுத்த திடீர் முடிவு... என்னனு தெரிஞ்சா உங்களுக்கு கார் வாங்கற ஆசையே போயிரும்!

இந்தியாவில் பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில், இதை முன்னிட்டு கார் வாங்குவதற்கு பலர் திட்டமிட்டுள்ளனர். அவர்கள் இந்த விலை உயர்வால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனினும் பண்டிகை காலத்தில் கார் வாங்கி விட வேண்டும் என்பதில் பலரும் தீர்மானமாக இருப்பார்கள் என்பதால், விற்பனை பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் சற்று குறைவுதான்.

மாருதி சுஸுகி நிறுவனம் எடுத்த திடீர் முடிவு... என்னனு தெரிஞ்சா உங்களுக்கு கார் வாங்கற ஆசையே போயிரும்!

அதே சமயம் மாருதி சுஸுகி நிறுவனத்தை தொடர்ந்து, மற்ற முன்னணி நிறுவனங்களும் கார்களின் விலையை உயர்த்துமா? என்பது உறுதியாக தெரியவில்லை. அப்படி மற்ற நிறுவனங்களும் விலையை உயர்த்தும்பட்சத்தில், ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வால் தவித்து வரும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் பாதிப்பு ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.

மாருதி சுஸுகி நிறுவனம் எடுத்த திடீர் முடிவு... என்னனு தெரிஞ்சா உங்களுக்கு கார் வாங்கற ஆசையே போயிரும்!

கார்களுக்கான உற்பத்தி செலவு அதிகரித்து வருவதால், விலையை உயர்த்தியாக வேண்டிய கட்டாயத்தில் கார் நிறுவனங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக செமி கண்டக்டர்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை, கார் உற்பத்தியை மிக கடுமையாக பாதித்துள்ளது. இந்தியா மட்டுமின்றி உலக அளவில் தற்போது இந்த பிரச்னை அதிகரித்துள்ளது.

மாருதி சுஸுகி நிறுவனம் எடுத்த திடீர் முடிவு... என்னனு தெரிஞ்சா உங்களுக்கு கார் வாங்கற ஆசையே போயிரும்!

இதன் காரணமாகவும் கார்களின் விலையை உயர்த்தியாக வேண்டிய கட்டாயத்தில் முன்னணி நிறுவனங்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உற்பத்தி செலவு அதிகரிப்பு என்ற சுமையின் ஒரு பகுதியை, விலை உயர்வின் மூலமாக வாடிக்கையாளர்களின் தலையிலும் சற்று இறக்கி வைக்கும் நடவடிக்கையை கார் உற்பத்தி நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.

மாருதி சுஸுகி நிறுவனம் எடுத்த திடீர் முடிவு... என்னனு தெரிஞ்சா உங்களுக்கு கார் வாங்கற ஆசையே போயிரும்!

இதற்கிடையே மாருதி சுஸுகி நிறுவனம் விலை உயர்வை அறிவித்துள்ள அதே நேரத்தில், புதிய தலைமுறை செலிரியோ காரை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. புதிய தலைமுறை மாருதி சுஸுகி செலிரியோ மிக நீண்ட நாட்களாக இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

மாருதி சுஸுகி நிறுவனம் எடுத்த திடீர் முடிவு... என்னனு தெரிஞ்சா உங்களுக்கு கார் வாங்கற ஆசையே போயிரும்!

அப்போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகியுள்ளன. இதன் மூலம் புதிய தலைமுறை மாருதி சுஸுகி செலிரியோ காரின் டிசைனில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கும் தகவல் நமக்கு தெரியவந்துள்ளது. இந்த டிசைன் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மாருதி சுஸுகி நிறுவனம் எடுத்த திடீர் முடிவு... என்னனு தெரிஞ்சா உங்களுக்கு கார் வாங்கற ஆசையே போயிரும்!

புதிய தலைமுறை மாருதி சுஸுகி செலிரியோ கார் வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் புதிய தலைமுறை மாருதி சுஸுகி செலிரியோ இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்படலாம். ஆனால் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.

Most Read Articles

English summary
Maruti suzuki to raise prices in september here are all the details
Story first published: Monday, August 30, 2021, 14:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X