22 வருடங்கள் ஆகியும் குறையாத மவுசு... ஒரே மாதத்தில் இவ்வளவு வேகன் ஆர் கார்கள் விற்பனையா? அடேங்கப்பா!

மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் விற்பனை தொடர்ந்து சிறப்பாக உள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

22 வருடங்கள் ஆகியும் குறையாத மவுசு... ஒரே மாதத்தில் இவ்வளவு வேகன் ஆர் கார்கள் விற்பனையா? அடேங்கப்பா!

மாருதி சுஸுகி நிறுவனம் வேகன் ஆர் காரை இந்திய சந்தையில் கடந்த 1999ம் ஆண்டு டிசம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. விற்பனைக்கு வந்த உடனேயே இந்த டால்பாய் ஹேட்ச்பேக் இந்தியர்களின் மனங்களை கொள்ளையடித்து விட்டது. இதற்கு அதன் சரியான விலை நிர்ணயம், கேபினில் தாராளமான இட வசதி ஆகியவையே முக்கியமான காரணங்கள் ஆகும்.

22 வருடங்கள் ஆகியும் குறையாத மவுசு... ஒரே மாதத்தில் இவ்வளவு வேகன் ஆர் கார்கள் விற்பனையா? அடேங்கப்பா!

தற்போதைய தலைமுறை வேகன் ஆர் காரும் தொடர்ந்து சிறப்பான முறையில் விற்பனையாகி கொண்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் மாருதி சுஸுகி நிறுவனம் 18,656 வேகன் ஆர் கார்களை இந்திய சந்தையில் விற்பனை செய்துள்ளது. இது மிகவும் சிறப்பான விற்பனை எண்ணிக்கை என்பதில் சந்தேகமில்லை.

22 வருடங்கள் ஆகியும் குறையாத மவுசு... ஒரே மாதத்தில் இவ்வளவு வேகன் ஆர் கார்கள் விற்பனையா? அடேங்கப்பா!

ஆனால் அதற்கு முந்தைய மார்ச் மாதத்தில் மாருதி சுஸுகி நிறுவனம் இந்திய சந்தையில் 18,757 வேகன் ஆர் கார்களை விற்பனை செய்திருந்தது. அதாவது மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஏப்ரல் மாதத்தில் மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் விற்பனை 0.5 சதவீதம் அளவிற்கு குறைந்துள்ளது. இருந்தாலும் ஏப்ரல் மாதம் பதிவாகியுள்ள விற்பனை எண்ணிக்கை பிரம்மாண்டமானது என்பதில் சந்தேகமில்லை.

22 வருடங்கள் ஆகியும் குறையாத மவுசு... ஒரே மாதத்தில் இவ்வளவு வேகன் ஆர் கார்கள் விற்பனையா? அடேங்கப்பா!

மாருதி சுஸுகி நிறுவனம் வேகன் ஆர் காரில் இரண்டு வகையான இன்ஜின் தேர்வுகளை வழங்குகிறது. இதில், 1.0 லிட்டர் மூன்று-சிலிண்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 68 பிஎஸ் பவரையும், 90 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இதுதவிர 1.2 லிட்டர் நான்கு-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் தேர்வும் கிடைக்கிறது.

22 வருடங்கள் ஆகியும் குறையாத மவுசு... ஒரே மாதத்தில் இவ்வளவு வேகன் ஆர் கார்கள் விற்பனையா? அடேங்கப்பா!

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 83 பிஎஸ் பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இரண்டு இன்ஜின்கள் உடனும் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படுகிறது. மாருதி சுஸுகி நிறுவனம் வேகன் ஆர் காரில் பல்வேறு வசதிகளையும் வழங்கியுள்ளது.

22 வருடங்கள் ஆகியும் குறையாத மவுசு... ஒரே மாதத்தில் இவ்வளவு வேகன் ஆர் கார்கள் விற்பனையா? அடேங்கப்பா!

இதில், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே வசதிகளுடன் 7 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், கீலெஸ் எண்ட்ரி உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவை. பாதுகாப்பை பொறுத்தவரை, முன்பகுதியில் 2 ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், ஹை-ஸ்பீடு அலர்ட் சிஸ்டம், முன் பகுதியில் சீட் பெல்ட் ரிமைண்டர்கள் ஆகிய வசதிகள் இடம்பெற்றுள்ளன.

22 வருடங்கள் ஆகியும் குறையாத மவுசு... ஒரே மாதத்தில் இவ்வளவு வேகன் ஆர் கார்கள் விற்பனையா? அடேங்கப்பா!

இந்திய சந்தையில் ஹூண்டாய் சாண்ட்ரோ, டாடா டியாகோ உள்ளிட்ட கார்களுடன் மாருதி சுஸுகி வேகன் ஆர் போட்டியிட்டு வருகிறது. இதற்கிடையே மாருதி சுஸுகி நிறுவனம் வேகன் ஆர் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் மிக நீண்ட காலமாக ஈடுபட்டு வருகிறது.

22 வருடங்கள் ஆகியும் குறையாத மவுசு... ஒரே மாதத்தில் இவ்வளவு வேகன் ஆர் கார்கள் விற்பனையா? அடேங்கப்பா!

இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்டபோது, மாருதி சுஸுகி வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார் பலமுறை கேமரா கண்களில் சிக்கியுள்ளது. ஆனால் மாருதி சுஸுகி நிறுவனம் வேகன் ஆர் எலெக்ட்ரிக் காரை இந்திய சந்தையில் எப்போது விற்பனைக்கு கொண்டு வரும்? என்பது தொடர்பாக இன்னும் உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

More from DriveSpark

Article Published On: Thursday, May 27, 2021, 23:58 [IST]
English summary
Maruti Suzuki Wagon R April 2021 Sales Report. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+