Just In
- 2 hrs ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 3 hrs ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 4 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 5 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வெற்றி பெற முடியாது... ரஜினியை போல் பின் வாங்கியது மாருதி சுஸுகி... வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார் திட்டம் ரத்து?
மாருதி சுஸுகி வேகன் ஆர் எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் திட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த முழுமையான விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மாருதி சுஸுகி வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார் இந்திய சாலைகளில் சோதனை செய்யப்படும்போது பல முறை கேமரா கண்களில் சிக்கியுள்ளது. கடும் குளிர் நிலவும் மலை பிரதேசங்கள் உள்பட இந்தியாவின் பல்வேறு தட்பவெப்ப நிலைகளில் வேகன் ஆர் எலெக்ட்ரிக் காரை மாருதி சுஸுகி நிறுவனம் சாலை சோதனையில் ஈடுபடுத்தி வந்தது.

2020ம் ஆண்டிலேயே வேகன் ஆர் எலெக்ட்ரிக் காரை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. கொரோனா வைரஸ் பிரச்னைதான் இதற்கு காரணமாக கூறப்படுகிறது. இதன்பின் நடப்பு 2021ம் ஆண்டில் மாருதி சுஸுகி வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு கொண்டு வரப்படலாம் என தகவல்கள் வெளியாகி வந்தன.

ஆனால் இந்த எலெக்ட்ரிக் காரை எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தவர்களுக்கு தற்போது அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஆம், இந்தியாவில் வேகன் ஆர் எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் திட்டத்தை மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது கிடப்பில் போட்டுள்ளதாக ஈடி ஆட்டோ செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது வரை அதிகாரப்பூர்வமாக எந்தவிதமான அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் வேகன் ஆர் எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் திட்டத்தை மாருதி சுஸுகி நிறுவனம் நிரந்தரமாக ரத்து செய்து விட்டதா? அல்லது தற்போதைக்கு ஒத்தி வைத்துள்ளதா? என்பதும் உறுதியாக தெரியவில்லை.

வணிக ரீதியில் வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவாக இருப்பதன் காரணமாகவே மாருதி சுஸுகி நிறுவனம் வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார் திட்டத்தை தற்போது நிறுத்தி வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது வேகன் ஆர் எலெக்ட்ரிக் காரில் இறக்குமதி செய்யப்பட்ட பாகங்களை அதிகளவில் பயன்படுத்த வேண்டிய சூழல் காணப்படுகிறது.

இது உற்பத்தி செலவு அதிகரிப்பிற்கு வழிவகுத்து விடும். உற்பத்தி செலவுகள் அதிகரித்தால், பெரிய விற்பனை எண்ணிக்கையை ஈட்டி தரும் வகையில் விலையை பொருத்தமாக நிர்ணயம் செய்வது சவாலான காரியமாக மாறிவிடும். இந்திய சந்தையை பொறுத்தவரை விலை நிர்ணயம் சரியாக இல்லாவிட்டால் ஒரு கார் வணிக ரீதியில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவுதான்.

எனவே வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற சரியான விலையில் வேகன் ஆர் எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு கொண்டு வர முடியுமா? என்ற தயக்கம் மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு இருந்து வருவதாக கூறப்படுகிறது. மாருதி சுஸுகி நிறுவனத்தின் பெரும்பாலான தயாரிப்புகள் ஒவ்வொரு மாதமும் மிக பிரம்மாண்டமான விற்பனை எண்ணிக்கையை ஈட்டி வருகின்றன.

ஒரு சில கார்கள் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாதமும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விற்பனை எண்ணிக்கையை சர்வ சாதாரணமாக பதிவு செய்கின்றன. எனவே மிகவும் குறைவான விற்பனை எண்ணிக்கையைதான் ஈட்டும் என்றால், வேகன் ஆர் எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு கொண்டு வர மாருதி சுஸுகி நிறுவனம் விரும்பாது.

ஆனால் வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையிலும், மனேசரில் உள்ள மாருதி சுஸுகி நிறுவனத்தின் தொழிற்சாலைக்கு அருகே அதன் சோதனை ஓட்டம் தொடர்ச்சியாக நடந்து வருகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. எனவே இதுகுறித்து மாருதி சுஸுகி நிறுவனம் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கலாம்.