Just In
- 2 hrs ago
ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு!! இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா?
- 9 hrs ago
பெங்களூர்வாசிகள் கொடுத்த வெச்சவங்க!! புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது!!
- 11 hrs ago
200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா? டாப்-10 பைக்குகள் இதோ...
- 15 hrs ago
பெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு
Don't Miss!
- News
கூடுதல் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு.. பாலியல் புகாரில் சிபிசிஐடி அதிரடி
- Sports
ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்!
- Movies
இப்படியா போடுவீங்க? பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்!
- Finance
எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..!
- Lifestyle
கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்!
- Education
12-வது தேர்ச்சியா? ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விரைவில் அறிமுகம்? - புதிய எஞ்சினுடன் வருகிறது!
சக்திவாய்ந்த புதிய எஞ்சினுடன் மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்தியாவின் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் மாருதி ஸ்விஃப்ட் கார் மிகச் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. தற்போது விற்பனையில் இருக்கும் மூன்றாவது தலைமுறை மாடலானது கடந்த 2018ம் ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில், தற்போது சில புதிய மாற்றங்கள் மற்றும் புதிய பெட்ரோல் எஞ்சின் தேர்வுடன் மாருதி ஸ்விஃப்ட் கார் இந்த மாதத்திலேயே விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மாருதி ஸ்விஃப்ட் காரில் 1.2 லிட்டர் கே12எம் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 82 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வழங்கும் திறன் கொண்டதாக உள்ளது.

இந்த நிலையில், இந்த எஞ்சினுக்கு பதிலாக டிசையர் காரில் பயன்படுத்தப்படும் 1.2 லிட்டர் டியூவல்ஜெட் பெட்ரோல் எஞ்சின் மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் பயன்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

எஞ்சின் மாறினாலும், கியர்பாக்ஸ் தேர்வுகள் தற்போதைய மாடலில் இருந்து தக்க வைக்கப்பட உள்ளது. இந்த எஞ்சின் அதிக எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் வகையில் இருக்கும். ஏனெனில், தற்போதைய நிலையில், அராய் சான்று அடிப்படையில் அதிக மைலேஜ் தரும் பெட்ரோல் மாடலாக மாருதி டிசையர் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மாருதி ஸ்விஃப்ட் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் புதிய க்ரில் அமைப்பு இடம்பெறும் என்று தெரிகிறது. அதேபோன்று, இன்டீரியரில் வண்ணத் தேர்வில் மாற்றம் இருக்கலாம்.

மாருதி ஸ்விஃப்ட் கார் ரூ.5.10 லட்சம் முதல் ரூ.8.02 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய மாடல் ரூ.20,000 வரை கூடுதல் விலையில் வருவதற்கான வாய்ப்பு உள்ளது.
Via- Indian Autos Blog