புதிய கார் மட்டுமல்ல, பழைய கார் விற்பனையிலும் அசத்தும் மாருதி சுஸுகி!

பயன்படுத்தப்பட்ட கார் விற்பனையில் புதிய மைல்கல்லை தொட்டு மாருதி சுஸுகி நிறுவனம் அசத்தி இருக்கிறது. இதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

புதிய கார் மட்டுமல்ல, பழைய கார் விற்பனையிலும் அசத்தும் மாருதி!

நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுஸுகி இந்திய கார் சந்தையில் 50 சதவீதத்தை நெருங்கிய அளவில் சந்தைப் பங்களிப்பை பெற்று இருக்கிறது. மேலும், தொடர்ந்து வேறு எந்த நிறுவனமும் எளிதில் நெருங்கி முடியாத விற்பனை எண்ணிக்கையையும் மாதம் தோறும் பதிவு செய்து வருகிறது.

புதிய கார் மட்டுமல்ல, பழைய கார் விற்பனையிலும் அசத்தும் மாருதி!

மேலும், புதிய கார் விற்பனை மட்டுமின்றி, பயன்படுத்தப்பட்ட கார் விற்பனையிலும் ஈடுபட்டு வருகிறது. இதற்காக மாருதி ட்ரூ வேல்யூ என்ற பெயரில் தனி விற்பனைப் பிரிவையும் நடத்தி வருகிறது.

புதிய கார் மட்டுமல்ல, பழைய கார் விற்பனையிலும் அசத்தும் மாருதி!

இந்த நிலையில், புதிய கார் விற்பனையில் மட்டுமின்றி, பயன்படுத்தப்பட்ட கார் விற்பனையிலும் மாருதி சுஸுகி புதிய மைல்கல்லை தொட்டு சாதனை படைத்துள்ளது.

புதிய கார் மட்டுமல்ல, பழைய கார் விற்பனையிலும் அசத்தும் மாருதி!

அதாவது, மாருதி ட்ரூ வேல்யூ நிறுவனம் துவங்கப்பட்டதில் இருந்து இதுவரை 40 லட்சம் பயன்படுத்தப்பட்ட கார்களை விற்பனை செய்து புதிய மைல்கல்லை தொட்டு சாதனை படைத்துள்ளது.

புதிய கார் மட்டுமல்ல, பழைய கார் விற்பனையிலும் அசத்தும் மாருதி!

நாடு முழுவதும் 268 நகரங்களில் 550 மாருதி ட்ரூ வேல்யூ ஷோரூம்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஷோரூம்கள் மூலமாக பயன்படுத்தப்பட்ட கார்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

புதிய கார் மட்டுமல்ல, பழைய கார் விற்பனையிலும் அசத்தும் மாருதி!

பயன்படுத்தப்பட்ட கார்களை மாருதி ட்ரூ வேல்யூ நிறுவனம் பல்வேறு தர பரிசோதனைகளுக்கு உட்படுத்தி பின்னர் விற்பனை செய்கிறது. மேலும், பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மதிப்பீடு செய்த தரச் சான்றையும் அளிக்கிறது.

புதிய கார் மட்டுமல்ல, பழைய கார் விற்பனையிலும் அசத்தும் மாருதி!

இதனால், பயன்படுத்தப்பட்ட கார்களை வாடிக்கையாளர்கள் தயக்கம் இன்றி வாங்குவதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. இந்த கார்களுக்கு ஓர் ஆண்டுக்கான வாரண்டி மற்றும் 3 இலவச சர்வீஸ்களையும் மாருதி ட்ரூ வேல்யூ வழங்குகிறது.

புதிய கார் மட்டுமல்ல, பழைய கார் விற்பனையிலும் அசத்தும் மாருதி!

கார்களை தரப் பரிசோதனை செய்வது மட்டுமின்றி, காப்பீடு, கடன் உதவி மற்றும் ஆக்சஸெரீகள் உள்ளிட்ட சேவைகளையும் மாருதி ட்ரூ வேல்யூ வழங்குகிறது. இதனால், மாருதி ட்ரூ வேல்யூ மீது வாடிக்கையாளர்களுக்கு அதிக வசதியும், நம்பிக்கையும் இருக்கிறது.

Most Read Articles

English summary
Maruti Suzuki has achieved 40 lakh mark in pre owned car sales in India.
Story first published: Thursday, February 4, 2021, 12:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X