க்ரெட்டா, செல்டோஸ் ஒரு கை பார்க்க புதிய தலைமுறை எஸ் க்ராஸ் எஸ்யூவியை உருவாக்க மாருதி தீவிரம்!

முற்றிலும் புதிய தலைமுறை அம்சங்களுடன் மாருதி எஸ் க்ராஸ் கார் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

க்ரெட்டா, செல்டோஸ் ஆதிக்கத்தை ஒடுக்க புதிய தலைமுறை எஸ் க்ராஸ்... மாருதி தீவிரம்!

கடந்த 2015ம் ஆண்டு மாருதி எஸ் க்ராஸ் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தில் நிலைநிறுத்தப்பட்ட இந்த கார் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை. மேலும், இந்த காரை பின்தொடர்ந்து வந்த ஹூண்டாய் க்ரெட்டா எகிடுதகிடான வரவேற்பை பெற்றது.

க்ரெட்டா, செல்டோஸ் ஆதிக்கத்தை ஒடுக்க புதிய தலைமுறை எஸ் க்ராஸ்... மாருதி தீவிரம்!

க்ரெட்டா வரவுக்கு பிறகு மாருதி எஸ் க்ராஸ் காருக்கு இருந்த சொற்ப மார்க்கெட்டும் பறிபோனது. எஸ் க்ராஸ் எஸ்யூவியை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்க மாருதி எடுத்த முயற்சிகள் போதிய பலன் அளிக்காத நிலை தொடர்கிறது. ஃபேஸ்லிஃப்ட் மாடல் கூட எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை.

க்ரெட்டா, செல்டோஸ் ஆதிக்கத்தை ஒடுக்க புதிய தலைமுறை எஸ் க்ராஸ்... மாருதி தீவிரம்!

இதற்கு முக்கிய காரணம், இந்தியர்களை கவரும் வகையிலான டிசைன் அம்சங்களை மாருதி எஸ் க்ராஸ் பெற்றிருக்கவில்லை. அத்துடன், இது க்ராஸ்ஓவர் ரக மாடலாக வந்ததும், முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

க்ரெட்டா, செல்டோஸ் ஆதிக்கத்தை ஒடுக்க புதிய தலைமுறை எஸ் க்ராஸ்... மாருதி தீவிரம்!

இந்த நிலையில், காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் க்ரெட்டா, செல்டோஸ் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில், புதிய தலைமுறை மாடலாக எஸ் க்ராஸ் எஸ்யூவியை மாருதி உருவாக்கி வருவதாக செய்தி வெளியாகி இருக்கிறது.

க்ரெட்டா, செல்டோஸ் ஆதிக்கத்தை ஒடுக்க புதிய தலைமுறை எஸ் க்ராஸ்... மாருதி தீவிரம்!

இந்த புதிய எஸ் க்ராஸ் எஸ்யூவி YFG என்ற குறியீட்டுப் பெயரில் உருவாக்கப்பட்டு வருவதாக டீம் பிஎச்பி தள செய்தி தெரிவிக்கிறது. அதாவது, வடிவமைப்பிலும், வசதிகளிலும் முற்றிலும் புதிய மாடலாக இருக்கும் என்று தெரிகிறது.

க்ரெட்டா, செல்டோஸ் ஆதிக்கத்தை ஒடுக்க புதிய தலைமுறை எஸ் க்ராஸ்... மாருதி தீவிரம்!

புதிய தலைமுறை மாருதி எஸ் க்ராஸ் எஸ்யூவி வரும் 2023ம் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்றும் அந்த செய்தி தெரிவிக்கிறது. மாருதியிடம் இருந்து முற்றிலும் புதிய எஸ்யூவி மாடலாக வர இருப்பதால், ஆவலை ஏற்படுத்தி உள்ளது.

க்ரெட்டா, செல்டோஸ் ஆதிக்கத்தை ஒடுக்க புதிய தலைமுறை எஸ் க்ராஸ்... மாருதி தீவிரம்!

தற்போது மாருதி எஸ் க்ராஸ் எஸ்யூவியில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் 103 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

க்ரெட்டா, செல்டோஸ் ஆதிக்கத்தை ஒடுக்க புதிய தலைமுறை எஸ் க்ராஸ்... மாருதி தீவிரம்!

இந்த காரில் எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், டியூவல் டோன் அலாய் வீல்கள், ஸ்மார்ட்பிளே ஸ்டூடியோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதி, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

Most Read Articles
English summary
Maruti Suzuki launched the S-Cross in India back in 2015. Just after a couple of years, the Maruti S-Cross received a facelift. However, according to the latest report by TeamBHP, Maruti Suzuki is working on the next generation S-Cross. The next generation S-Cross is said to be codenamed YFG and is expected to be launched in 2023.
Story first published: Wednesday, January 6, 2021, 9:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X