கோடிகளில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் மெக்லாரன் கார்கள்!! அடேங்கப்பா... மலிவான காரின் விலையே இவ்வளவா!

இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள மெக்லாரன் 720எஸ், 720எஸ் மற்றும் ஜிடி கார்களுக்கான விலைகள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

கோடிகளில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் மெக்லாரன் கார்கள்!! அடேங்கப்பா... மலிவான காரின் விலையே இவ்வளவா!

தற்சமயம் மிகுந்த பிரபலமாக விளங்கும் உலகின் சூப்பர்கார்கள் என்று பார்த்தால், அதில் நிச்சயம் மெக்லாரன் நிறுவனத்துடையதும் ஒன்று இருக்கும். இப்படிப்பட்ட உலகளவில் ரசிகர்களை கொண்டுள்ள மெக்லாரன் பிராண்ட் இந்தியாவிலும் நுழையவுள்ளதாக சமீபத்தில் நமது செய்திதளத்தில் கூட தெரிவித்திருந்தோம்.

கோடிகளில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் மெக்லாரன் கார்கள்!! அடேங்கப்பா... மலிவான காரின் விலையே இவ்வளவா!

இந்த நிலையில் தற்போது இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள சில மெக்லாரன் கார்களின் விலைகள் அதிகாரப்பூர்வமாக கிடைத்துள்ளன. நமக்கு தெரிந்தவரையில், மெக்லாரன் ஜிடி இந்தியாவில் மலிவான மெக்லாரன் காராக விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோடிகளில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் மெக்லாரன் கார்கள்!! அடேங்கப்பா... மலிவான காரின் விலையே இவ்வளவா!

மெக்லாரன் ஜிடி காரின் விலை இந்தியாவில் ரூ.3.72 கோடியாக நிர்ணயிக்கப்பட உள்ளதாக தற்போது கிடைத்துள்ள தகவல்கள் கூறுகின்றன. 0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 3.2 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய இந்த காரில் 4.0 லிட்டர், இரட்டை-டர்போசார்ஜ்டு வி8 என்ஜின் பொருத்தப்படுகிறது.

கோடிகளில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் மெக்லாரன் கார்கள்!! அடேங்கப்பா... மலிவான காரின் விலையே இவ்வளவா!

அதிகப்பட்சமாக 603 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 7-ஸ்பீடு எஸ்.எஸ்.ஜி ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது. ஏகப்பட்ட தொழிற்நுட்ப அம்சங்களை இந்த கார் பெற்றாலும், கூடுதலாக பார்க்கிங் சென்சார்கள், வாகன லிஃப்ட் உள்ளிட்டவை அடங்கிய தொகுப்பை ரூ.29.77 லட்சம் என்கிற விலையில் மெக்லாரன் நிறுவனம் வழங்குகிறது.

கோடிகளில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் மெக்லாரன் கார்கள்!! அடேங்கப்பா... மலிவான காரின் விலையே இவ்வளவா!

இதனுடன் முதலாவதாக இந்தியாவிற்கு வருகை தரவுள்ளதாக கூறப்படும் மெக்லாரன் 720எஸ் மாடலின் விலை ரூ.4.65 கோடியாக நிர்ணயிக்கப்படவுள்ளது. அதேநேரம் இதன் டாப் வேரியண்ட்டான 720எஸ் ஸ்பைடரின் விலையை ரூ.5.04 கோடியில் எதிர்பார்க்கலாம்.

கோடிகளில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் மெக்லாரன் கார்கள்!! அடேங்கப்பா... மலிவான காரின் விலையே இவ்வளவா!

கூபே ரக சூப்பர் காரான 720எஸ் மாடலில் அதிகப்பட்சமாக 700 பிஎச்பி மற்றும் 770 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய 4.0 லிட்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. 0-100kmph வேகத்தை 3 நொடிகளுக்கும் குறைவான நேரத்தில் எட்டிவிடக்கூடிய இந்த சூப்பர் காரின் அதிகப்பட்ச வேகம் 341kmph ஆகும்.

கோடிகளில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் மெக்லாரன் கார்கள்!! அடேங்கப்பா... மலிவான காரின் விலையே இவ்வளவா!

720எஸ் ஸ்பைடரிலும் இதே 4.0 லிட்டர் என்ஜின் தான் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த காரில் அதிகப்பட்சமாக மணிக்கு 325கிமீ வேகத்தில் தான் செல்ல முடியும். ஜிடி காரை போன்று இந்த கூபே கார்களுக்கும் ரூ.43.31 லட்சத்தில் ஆக்ஸஸரீகளை மெக்லாரன் நிறுவனம் வழங்குகிறது.

கோடிகளில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் மெக்லாரன் கார்கள்!! அடேங்கப்பா... மலிவான காரின் விலையே இவ்வளவா!

இந்தியாவில் ஒரே ஒரு டீலர்ஷிப் மையத்தின் மூலமாக வணிகத்தை துவங்க மெக்லாரன் திட்டமிட்டுள்ளது. இந்த முதல் இந்திய மெக்லாரன் டீலர்ஷிப் மையம் மும்பை மாநகரில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மும்பையில் பிஎம்டபிள்யூ கார்களை விற்பனை செய்துவரும் இன்ஃபினிட்டி கார்ஸ் இந்த வாய்ப்பை பெறும் என தெரிகிறது.

Most Read Articles

மேலும்... #மெக்லாரன் #mclaren
English summary
McLaren 720S, 720S Spider And GT Prices Revealed For India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X