பென்ஸ் இ53, இ63எஸ் சொகுசு கார்கள் விற்பனைக்கு அறிமுகம்! கார்களோட விலைய மட்டும் கேட்காதீங்க, ரொம்ப அதிகம்!
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் அதன் இரு ஏஎம்ஜி செரீஸ் கார்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சூப்பர் திறன்கள் கொண்ட கார்கள் பற்றிய தகவலைக் கீழே காணலாம்.

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம், இந்திய சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும் தனது தயாரிப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் முயற்சியாக புதிய சொகுசு கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது. நிறுவனம் அதன் ஏஎம்ஜி வரிசையில் விற்பனைக்குக் கிடைக்கும் கார்களிலேயே இன்னும் இரு புதிய மாடலை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

ஏஎம்ஜி இ 53 4மேட்டிக்-ப்ள்ஸ் (AMG E 53 4MATIC+) மற்றும் ஏஎம்ஜி இ 63 எஸ் 4மேட்டிக்-ப்ளஸ் (AMG E 63 S 4MATIC+) ஆகிய இரு புதிய மாடல்களையே பென்ஸ் இந்தியாவில் களமிறக்கியிருக்கின்றது. இவையிரண்டும் சிறந்த செயல்திறன்மிக்க சொகுசு கார்களாகும்.

இந்தியாவில் ஏஎம்ஜி 53 செரீஸின் வரிசையில் பென்ஸ் விற்பனைக் கொண்டு வரும் இரண்டாவதாக ஏஎம்ஜி இ 53 4மேட்டிக்-ப்ள்ஸ் அமைந்துள்ளது. இவ்விரு செடான் ரக கார்களுக்குமே மிக அதிகபட்ச விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏஎம்ஜி இ 53 4மேட்டிக்-ப்ள்ஸ்-க்கு ரூ. 1.02 கோடியும், இ 63 எஸ் 4மேட்டிக்-ப்ளஸ்-க்கு ரூ. 1.70 கோடி விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றது.

இந்த இ-க்ளாஸ் கார்களில் நிறுவனத்தின் நடு-நிலையில் இருக்கக் கூடிய மாடல்களுக்கு பயன்படுத்தப்பட கூடிய அதி திறன் கொண்ட எஞ்ஜின்களே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து, மிகவும் கவர்ச்சியான மற்றும் விரிவான வடிவமைப்பை இந்த வாகனங்களில் பென்ஸ் புகுத்தியிருக்கின்றது.

இதற்கு சான்றாக காரின் ரேடியேட்டர் க்ரில் உள்ளது. இது 12 செங்குத்தான லூவ்ரஸ் மற்றும் நட்சத்திரங்களைப் பெற்றிருக்கின்றது. இது சற்று பெரிய உருவம் கொண்டதாக இருக்கின்றது. இதேபோன்று காரின் உட்பகுதியும் பிரம்மிப்பை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு சிறப்பு வசதிகளைக் கொண்டதாக காட்சியளிக்கின்றது.

குறிப்பாக, பெரிய திரை, அதிக செயல்திறன்மிக்க ஸ்டியரிங் வீல் மற்றும் எம்பியூஎக்ஸ் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்டவை இந்த கார்களில் இடம் பெற்றிருக்கின்றன. இதேபோன்று காரின் பின்பகுதியிலும் கவர்ச்சிக்கான சில வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

அங்கு கண்களைக் கவரும் வகையில் ஃப்ளாட்டர் வால் பகுதி மின் விளக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இது பூட்லிட் பகுதியை நீண்டவாறு உள்ளது. இத்துடன், உயர் குளாஸ்ரக குரோம் பூச்சு கொண்ட பேனல்கள் பின் பகுதியில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இவையனைத்தும் சேர்ந்து புதிய கார்களுக்கு அதிக கவர்ச்சியான பின்புற தோற்றத்தை வழங்கும் வகையில் அமைந்துள்ளது.

இதில், இ 53 4மேட்டிக்-ப்ளஸ் 3.0 லிட்டர் 6 சிலிண்டர் இன்-லைன் எஞ்ஜின் மற்றும் கூடுதலாக மின்சார கம்ப்ரஸர் வசதியுடனும், இ63 எஸ் 4மேட்டிக்-ப்ளஸ் 4.0 லிட்டர் வி8 ட்வின் டர்போசார்ஜர் எஞ்ஜின் வசதியுடனும் விற்பனைக்கு வந்திருக்கின்றன.

இ 53 4மேட்டிக்-ப்ளஸ் இடம் பெற்றிருக்கும் எஞ்ஜினானது அதிகபட்சமாக 2,999 சிசி திறனையும் வெளியேற்றக் கூடியது. இது 435 எச்பி திறனை 6,100 ஆர்பிஎம்மிலும், 520 என்எம் டாார்க்கை 5,800 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும். இதன் ஹைபிரிட் சிஸ்டம் கூடுதலாக 22 பிஎஸ் மற்றும் 250 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது.

இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 250 கிமீ வேகம் ஆகும். மேலும், இது வெறும் 4.5 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டும் திறனைக் கொண்டுள்ளது.

இதேபோன்று, இ63 எஸ் 4மேட்டிக்-ப்ளஸ் மாடலில் இடம் பெற்றிருக்கும் எஞ்ஜினானது 612 எச்பி பவரை 5,750 ஆர்பிஎம்மிலும், 850 என்எம் டார்க்கை 4,500 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும் திறனைக் கொண்டுள்ளது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 300 கிமீ ஆகும். இது பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எட்ட வெறும் 3.4 செகண்டுகளே போதும்.


Click it and Unblock the Notifications








