ரூ.2.07 கோடி விலையில் விற்பனைக்கு வந்திருக்கிறது Benz-ன் புதிய சொகுசு கார்! அப்படி என்னங்க இருக்கு இந்த காருல?

Mercedes நிறுவனம் இந்தியாவில் AMG GLE 63 S 4MATIC+ Coupe காரை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சொகுசு காரின் விலை மற்றும் சிறப்பு வசதிகள் என்ன என்பது பற்றிய தகவலை விரிவாகப் பார்க்கலாம், வாங்க.

ரூ. 2.07 கோடி விலையில் விற்பனைக்கு வந்திருக்கின்றது Benz இன் புதிய சொகுசு கார்... அப்படி என்னதாங்க இருக்கு இந்த காருல?

Mercedes-Benz நிறுவனம் AMG எனும் பெயரில் சூப்பர் லக்சூரி கார்களை இந்தியாவில் விற்பனைச் செய்து வருகின்றன. இந்த புகழ்வாய்ந்த சொகுசு கார் மாடலிலேயே கூடுதல் தேர்வை வழங்கும் நோக்கில் ஓர் புத்தம் புதிய வேரியண்டை நிறுவனம் நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.

ரூ. 2.07 கோடி விலையில் விற்பனைக்கு வந்திருக்கின்றது Benz இன் புதிய சொகுசு கார்... அப்படி என்னதாங்க இருக்கு இந்த காருல?

AMG GLE 63 S 4MATIC+ Coupe எனும் பெயரில் அப்புதுமுக தேர்வு நாட்டில் களமிறக்கப்பட்டிருக்கின்றது. AMG கார் வரிசையில் கூடுதல் தேர்வை வழங்கும் நோக்கில் இப்புதிய தேர்வின் அறிமுகம் அமைந்துள்ளது. இது உயர் நிலை தேர்வு என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், சொகுசு மற்றும் தொழில்நுட்ப வசதிகளுக்கு சற்றும் குறைவில்லா காராக இது இருக்கிறது.

ரூ. 2.07 கோடி விலையில் விற்பனைக்கு வந்திருக்கின்றது Benz இன் புதிய சொகுசு கார்... அப்படி என்னதாங்க இருக்கு இந்த காருல?

மேலும், இதன் விலையும் சற்று அதிகமாக இருக்கின்றது. அந்தவகையில், AMG GLE 63 S 4MATIC+ Coupe-விற்கு ரூ. 2.07 கோடி என்ற விலையை Mercedes நிர்ணயித்துள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த காரில் நிறுவனத்தின் வி8 பவர்ஃபுல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ரூ. 2.07 கோடி விலையில் விற்பனைக்கு வந்திருக்கின்றது Benz இன் புதிய சொகுசு கார்... அப்படி என்னதாங்க இருக்கு இந்த காருல?

இந்த புதிய தேர்வானது ஏற்கனவே நாட்டில் விற்பனையில் இருக்கும் Mercedes-AMG GLE 53 4MATIC+ தேர்வுடன் இணைந்திருக்கின்றது. இதனை நிறுவனம் கடந்த ஆண்டே விற்பனைக்கு அறிமுகம் செய்துவிட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுவும் தற்போது விற்பனைக்கு வந்திருக்கும் AMG GLE 63 S 4MATIC+ Coupe-வைப் போல் மிக அதிக விலைக் கொண்ட தேர்வாகும்.

ரூ. 2.07 கோடி விலையில் விற்பனைக்கு வந்திருக்கின்றது Benz இன் புதிய சொகுசு கார்... அப்படி என்னதாங்க இருக்கு இந்த காருல?

தற்போது அறிமுகமாகியிருக்கும் புதிய தேர்வானது AMG மாடலில் விற்பனைக்கு வரும் 12 தேர்வாகும். இது இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் Audi RS Q8, Maserati Levante, Lamborghini Urus ஆகிய போட்டி நிறுவனங்களின் தயாரிப்பு எதிராக களமிறக்கப்பட்டிருக்கின்றது. இவை மட்டுமின்றி Coupe பிரிவில் விற்பனைக்குக் கிடைக்கும் மற்ற தயாரிப்புகளுக்கும் AMG GLE 63 S 4MATIC+ Coupe தேர்வின் வருகை போட்டியாக அமைந்துள்ளது.

ரூ. 2.07 கோடி விலையில் விற்பனைக்கு வந்திருக்கின்றது Benz இன் புதிய சொகுசு கார்... அப்படி என்னதாங்க இருக்கு இந்த காருல?

Mercedes AMG GLE 63 S 4MATIC+ Coupe காரில் 4.0 லிட்டர் டர்போசார்ஜட் வி8 எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 603 பிஎச்பி பவரை 6,500 ஆர்பிஎம்மிலும், 850 என்எம் டார்க்கை 2,500 ஆர்பிஎம் முதல் 4,500 ஆர்பிஎம் வரையில் வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த மோட்டார் 9 ஸ்பீடு ஏஎம்ஜி ஸ்பீடு ஷிஃப்ட் டிரான்ஸ்மிஷனில் இயங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

ரூ. 2.07 கோடி விலையில் விற்பனைக்கு வந்திருக்கின்றது Benz இன் புதிய சொகுசு கார்... அப்படி என்னதாங்க இருக்கு இந்த காருல?

இவையனைத்தும் சேர்ந்து காரை மிக அதிக வேகத்தில் செல்லும் வாகனமாக உருவாக்கியிருக்கின்றது. ஆம், இந்த கார் மணிக்கு உச்சபட்சமாக 280 கிமீ வேகத்தில் செல்லும் திறனைக் கொண்டது. மேலும், வெறும் 3.8 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தில் செல்லும் திறனைக் கொண்டிருக்கின்றது.

ரூ. 2.07 கோடி விலையில் விற்பனைக்கு வந்திருக்கின்றது Benz இன் புதிய சொகுசு கார்... அப்படி என்னதாங்க இருக்கு இந்த காருல?

ஆகையால், AMG மாடலிலேயே மிக அதிக வேகம் செல்லும் காராக AMG GLE 63 S 4MATIC+ Coupe காட்சியளிக்கின்றது. இதுமட்டுமின்றி இந்த தேர்வில் ஒட்டுமொத்தமாக ஏழு விதமான டிரைவிங் மோட்கள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமான திறன் வெளிப்பாட்டைக் கொண்டவை ஆகும்.

ரூ. 2.07 கோடி விலையில் விற்பனைக்கு வந்திருக்கின்றது Benz இன் புதிய சொகுசு கார்... அப்படி என்னதாங்க இருக்கு இந்த காருல?

மேலும், இந்த காரில் EQ Boost எனும் ஹைபிரிட் சிஸ்டமும் வழங்கப்பட்டிருக்கின்றது. இது 48 வோல்ட் திறனை வெளியேற்றக் கூடியது. இது தனியாக 21 பிஎச்பி மற்றும் 250 என்எம் டார்க்கை வரை வெளியேற்றும். இந்த திறன் காரின் கூடுதல் திறன் வெளியேற்றத்திற்கு உதவியாக இருக்கின்றது.

ரூ. 2.07 கோடி விலையில் விற்பனைக்கு வந்திருக்கின்றது Benz இன் புதிய சொகுசு கார்... அப்படி என்னதாங்க இருக்கு இந்த காருல?

AMG மாடலிலேயே அதிக கவர்ச்சியான காராக AMG GLE 63 S 4MATIC+ Coupe காட்சியளிக்கின்றது. பேனஅமெரிக்கனா க்ரில், இரட்டை எல்இடி டிஆர்எல்கள், இரட்டை எக்சாஸ்ட் என பல்வேறு சிறப்பு அம்சங்கள் அக்காரில் சேர்க்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, 22 இன்சிலான இலகு ரக அலாய் வீல், நப்பா லெதர் இருக்கை, ஸ்போர்ட் ஏஎம்ஜி ஸ்டியரிங் வீல், கார்பன் ஃபைபர் இன்செர்டுகள் உள்ளிட்டவையும் இதில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

ரூ. 2.07 கோடி விலையில் விற்பனைக்கு வந்திருக்கின்றது Benz இன் புதிய சொகுசு கார்... அப்படி என்னதாங்க இருக்கு இந்த காருல?

மேலும், எம்பியூஎக்ஸ் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், எக்சாஸ்டின் சத்தம், ரைடிங் உயரத்தை மாற்றியமைக்கும் வசதிகள் ஸ்டியரிங் வீலிலேயே பொத்தான் வாயிலாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இவற்றுடன், அதிக பாதுகாப்பு வசதிக்காக முகப்பு பகுதியில் அதிகளவில் ஏர் பேக், பார்வைக்கு புலப்படாத இடங்களில் வழிநடத்தும் வசதி, ஆக்டீவ் பிரேக் அசிஸ்ட், 3 ஸ்டேஜ் இஎஸ்பி, 4இடிஎஸ் டைனமிக் கன்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்டவையும் Mercedes AMG GLE 63 S 4MATIC+ Coupe தேர்வில் வழங்கப்பட்டிருக்கின்றன.

Most Read Articles
English summary
Mercedes benz amg gle 63 s 4matic plus coupe launched in india at rs 2 07 crore
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X