வாடிக்கையாளர்களுக்கு நேரடி கார் விற்பனை... மெர்சிடிஸ் பென்ஸ் அறிவிப்பு!

வெளிப்படைத்தன்மையுடன் வாடிக்கையாளர்களுக்கு நேரடி கார் விற்பனை செய்யும் திட்டத்தை அறிமுகம் செய்ய இருப்பதாக மெர்சிடிஸ் பென்ஸ் அறிவித்துள்ளது. இந்த திட்டம் ஒரே குடையின் கீழ் தனது கார் விற்பனையை கொண்டு வரும் முயற்சியாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு நேரடி கார் விற்பனை... மெர்சிடிஸ் பென்ஸ் அறிவிப்பு!

வாடிக்கையாளர்களுக்கு அதிக நன்மையை தரும் வகையிலும், டீலர்கள் பாதிக்கப்படாத வகையிலும் அனைத்து தரப்பிலும் நன்மை பெறும் வகையில் இந்த புதிய விற்பனை திட்டம் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த திட்டம் அதிக வெளிப்படைத்தன்மை கொண்ட விற்பனை சூழலை உருவாக்கும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு நேரடி கார் விற்பனை... மெர்சிடிஸ் பென்ஸ் அறிவிப்பு!

இந்த திட்டம் Retail Of The Future (ROTF) என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலமாக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் அனைத்து புதிய கார்களையும் நேரடியாக புக்கிங் செய்து வாடிக்கையாளர்கள் வாங்க முடியும்.

வாடிக்கையாளர்களுக்கு நேரடி கார் விற்பனை... மெர்சிடிஸ் பென்ஸ் அறிவிப்பு!

இருப்பில் உள்ள அனைத்து கார்களும் புக்கிங் அடிப்படையில் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படும். இந்த திட்டத்தின் மூலமாக வாடிக்கையாளர்கள் சரியான விலையில் கார்களை வாங்கும் வாய்ப்பை பெற முடியும். இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வாடிக்கையாளர்களும் ஒரே விலையில் காரை வாங்குவதற்கு இந்த திட்டம் உறுதி செய்யும்.

வாடிக்கையாளர்களுக்கு நேரடி கார் விற்பனை... மெர்சிடிஸ் பென்ஸ் அறிவிப்பு!

அதேபோன்று, டீலர்கள் பாதிக்கப்படாத வகையிலும் இந்த திட்டம் இருக்கும். அதாவது, கார் விற்பனையை அதிகரிக்கும் சூழலை உருவாக்குதல், டெலிவிரி மற்றும் வாடிக்கையாளர்கள் சேவை உள்ளிட்டப் பணிகளுக்காக டீலர்களுக்கு குறிப்பிட்ட தொகையை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் வழங்கும்.

வாடிக்கையாளர்களுக்கு நேரடி கார் விற்பனை... மெர்சிடிஸ் பென்ஸ் அறிவிப்பு!

இந்த திட்டத்தின் மூலமாக, டீலர்களில் கார் இருப்பில் தேங்குவது முற்றிலுமாக தவிர்க்கப்படும். இதனால், பொருளாதார ரீதியில் டீலர்கள் பாதிக்கப்படுவதும் தவிர்க்கப்படும். குறிப்பாக, கொரோனாவுக்கு பிந்தைய இந்த காலக்கட்டத்தில் டீலர்களுக்கான பொருளாதார பிரச்னைகளில் சிக்கித் தவிக்கும் நிலை உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில் இந்த திட்டம் அமையும்.

வாடிக்கையாளர்களுக்கு நேரடி கார் விற்பனை... மெர்சிடிஸ் பென்ஸ் அறிவிப்பு!

அதேநேரத்தில், புதிய கார்களை விற்பனை செய்வதற்கான மார்க்கெட்டிங் பணிகளை தொடர்ந்து செய்ய முடியும். ஆனால், வாடிக்கையாளர்கள் நேரடியாக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்திடம் இருந்து புக்கிங் செய்து காரை வாங்க முடியும்.

வாடிக்கையாளர்களுக்கு நேரடி கார் விற்பனை... மெர்சிடிஸ் பென்ஸ் அறிவிப்பு!

நடப்பு ஆண்டின் நான்காவது காலாண்டு காலத்தில், அதாவது, அக்டோபர் - டிசம்பர் இடையிலான காலக்கட்டத்தில் இந்த திட்டத்தை இந்தியாவில் அமலுக்கு கொண்டு வருவதற்கு மெர்சிடிஸ் பென்ஸ் திட்டமிட்டுள்ளது. அந்நிறுவனத்தின் புதிய கார்களுக்கு மட்டுமே இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

Most Read Articles

English summary
Mercedes-Benz India has introduced the 'Retail Of The Future' sales model in the Indian market. Under this new sales model, Mercedes-Benz is attempting to centralize the process of selling a car to a buyer. The new initiative makes sure that all parties involved, including the customer, the dealership, and Mercedes-Benz India are all profited.
Story first published: Wednesday, June 2, 2021, 16:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X