2021 மெர்சிடிஸ் ஜிஎல்ஏ எஸ்யூவி கார்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.42.10 லட்சமே...

2021 மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்ஏ மற்றும் ஏஎம்ஜி ஜிஎல்ஏ 35 கார்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய பென்ஸ் கார்களை பற்றிய விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

2021 மெர்சிடிஸ் ஜிஎல்ஏ எஸ்யூவி கார்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.42.10 லட்சமே...

தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 2021 மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்ஏ என்ற ஸ்டாண்டர்ட் மாடலின் செயல்திறன்மிக்க வெர்சன் தான் ஏஎம்ஜி ஜிஎல்ஏ 35 ஆகும். இதில் ஸ்டாண்டர்ட் மாடலின் விலை ரூ.42.10 லட்சமாகவும், ஏஎம்ஜி மாடலின் விலை ரூ.57.30 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2021 மெர்சிடிஸ் ஜிஎல்ஏ எஸ்யூவி கார்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.42.10 லட்சமே...

இவை அறிமுக விலைகள் தான் என்றும், இந்த ஜிஎல்ஏ கார்களின் விலைகள் வருகிற ஜூலை 1ஆம் தேதியில் இருந்து அதிரடியாக ரூ.1.5 லட்சம் வரையில் அதிகரிக்கப்பட உள்ளன என்றும் இப்போதே மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

2021 மெர்சிடிஸ் ஜிஎல்ஏ எஸ்யூவி கார்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.42.10 லட்சமே...

தோற்றத்தை பொறுத்தவரையில் 2021 மெர்சிடிஸ் ஜிஎல்ஏ கார்கள் பொனெட் மற்றும் பக்கவாட்டு பகுதிகளில் செதுக்கப்பட்ட லைன்களை கொண்டுள்ளன. மற்ற மெர்சிடிஸ் ஏ-கிளாஸ் கார்களை போன்று புதிய ஜிஎல்ஏ-வின் டாப் ட்ரிம்களும் வைரம்-பதிப்பு பேட்டர்னில் க்ரில்லை பெற்றுள்ளன.

2021 மெர்சிடிஸ் ஜிஎல்ஏ எஸ்யூவி கார்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.42.10 லட்சமே...

இந்த 2021 பென்ஸ் காரின் பின்பக்கத்தில் முற்றிலும் புதிய எல்இடி டெயில்லேம்ப்கள், பூட்-லிட், ஸ்பாய்லர் மற்றும் அகலமான காற்று ஏற்பான் உள்ளிட்டவைகளை பார்க்க முடிகிறது. 2021 ஜிஎல்ஏ காரை 18 அல்லது 19 இன்ச் அலாய் சக்கரங்களுடன் பெறலாம்.

2021 மெர்சிடிஸ் ஜிஎல்ஏ எஸ்யூவி கார்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.42.10 லட்சமே...

அதேநேரம் ஏஎம்ஜி ஜிஎல்ஏ 35 காரில் மல்டி பீம் எல்இடி ஹெட்லைட்களுடன் 19 இன்ச் சக்கரங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. உட்புறத்தில் இன்ஃபோடெயின்மெண்ட் மற்றும் இன்ஸ்ட்ரூமெண்டேஷனுக்கு என திரைகள் மூலமாக டேஸ்போர்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

2021 மெர்சிடிஸ் ஜிஎல்ஏ எஸ்யூவி கார்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.42.10 லட்சமே...

இதில் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆனது குரல் கட்டுப்பாட்டு செயல்பாடுகளுடனான பிராண்டின் நவீன எம்பக்ஸ் இடைமுக வசதியுடன் கொண்டுவரப்பட்டுள்ளது. இவற்றுடன் மற்ற சிறப்பம்சங்களாக, வயர் இல்லா சார்ஜிங், பல-செயல்பாட்டு ஸ்டேரிங் சக்கரம், பனோராமிக் சன்ரூஃப் மற்றும் மெர்சிடிஸின் முன்-பாதுகாப்பு தொகுப்பை கூறலாம்.

2021 மெர்சிடிஸ் ஜிஎல்ஏ எஸ்யூவி கார்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.42.10 லட்சமே...

செயல்திறன்மிக்க ஏஎம்ஜி ஜிஎல்ஏ 35 கார், தட்டையான-தாழ்வான ஸ்டேரிங் சக்கரம், சிவப்பு நிற தையல்களுடன் டினாமிகா (DINAMICA) நுண்ணிழைகளால் தயாரிக்கப்பட்ட கவர்களை கொண்ட இருக்கைகள், பர்ம்ஸ்டர் சவுண்ட் சிஸ்டம் மற்றும் சாவியில்லா கோ கம்பர்ட் தொகுப்பு உள்ளிட்டவற்றுடன் ஏஎம்ஜி கார்களுக்கே உண்டான கருப்பு நிற கேபினை பெற்றுள்ளது.

2021 மெர்சிடிஸ் ஜிஎல்ஏ எஸ்யூவி கார்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.42.10 லட்சமே...

அதேபோல் இந்த ஏஎம்ஜி காரில் சஸ்பென்ஷன் அமைப்பும் ஸ்டாண்டர்ட் மாடலில் இருந்து வேறுப்படுகிறது. 2021 மெர்சிடிஸ் ஜிஎல்ஏ மாடல் ஆனது ஏ-கிளாஸ் லிமௌசைனின் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களை அப்படியே பெற்றுள்ளது.

2021 மெர்சிடிஸ் ஜிஎல்ஏ எஸ்யூவி கார்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.42.10 லட்சமே...

இதில் ஒன்றான 1.3 லிட்டர் என்ஜின் அதிகப்பட்சமாக 161 பிஎச்பி மற்றும் 250 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது. அதுவே 2.0 லிட்டர் டீசல் என்ஜினின் மூலம் அதிகப்பட்சமாக 188 பிஎச்பி மற்றும் 400 என்எம் டார்க் திறனை பெற முடியும்.

2021 மெர்சிடிஸ் ஜிஎல்ஏ எஸ்யூவி கார்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.42.10 லட்சமே...

இதில் பெட்ரோல் என்ஜின் உடன் 7-ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸும், டீசல் என்ஜின் உடன் 8-ஸ்பீடு ஜி-ட்ரோனிக் ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்டரும் இணைக்கப்பட்டுள்ளது. 2021 ஏஎம்ஜி ஜிஎல்ஏ 35 காரை பொறுத்தவரையில், இதில் 2.0 லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

2021 மெர்சிடிஸ் ஜிஎல்ஏ எஸ்யூவி கார்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.42.10 லட்சமே...

8-ஸ்பீடு டிசிடி ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் உடன் இணைக்கப்பட்டுள்ள இந்த பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 302 பிஎச்பி மற்றும் 400 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. மேலும் இந்த ஏஎம்ஜி காரில் 4மேட்டிக் அனைத்து-சக்கர-ட்ரைவ் சிஸ்டமும் வழங்கப்பட்டுள்ளது.

Most Read Articles

English summary
Mercedes-Benz today debuts the all-new GLA SUV in India. The GLA will further strengthen the company’s strong SUV portfolio, starting from the GLA all the way till the formidable AMG G 63. The GLA will be available in showrooms and also on the online store in three variants, the petrol 200, diesel 220d and the 220d 4M. In addition, for the first time in India the 35 series debuts with the GLA in form of the AMG GLA 35 4M. The AMG GLA 35 4M which is a new addition to the CKD portfolio is the 13th CKD product, and also the 3rd AMG to be made in India, at Mercedes-Benz India’s Chakan production facility.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X