மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி எலெக்ட்ரிக் காரின் விலை கணிசமாக அதிகரிப்பு!

மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி எலெக்ட்ரிக் சொகுசு எஸ்யூவி காரின் விலை கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி எலெக்ட்ரிக் காரின் விலை கணிசமாக அதிகரிப்பு!

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்தியாவில் விற்பனைக்கு வந்த முதலாவது சொகுசு எலெக்ட்ரிக் கார் மாடல் என்ற பெருமையுடன் இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டது.

மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி எலெக்ட்ரிக் காரின் விலை கணிசமாக அதிகரிப்பு!

மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி எலெக்ட்ரிக் காருக்கு ரூ.99.30 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டது. இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனைக்கு வந்த இந்த காருக்கு இது அறிமுகச் சலுகை விலையாகவும் தெரிவிக்கப்பட்டது.

மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி எலெக்ட்ரிக் காரின் விலை கணிசமாக அதிகரிப்பு!

இந்த நிலையில், இந்தியாவுக்காக முதல் லாட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 50 கார்கள் விற்று தீர்ந்தது. இதனால், புதிதாக முன்பதிவு செய்யப்படும் கார்களுக்கான விலையை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் அதிகரித்துள்ளது. அதாவது, அறிமுகச் சலுகை விலை முடிவுக்கு வந்துள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி எலெக்ட்ரிக் காரின் விலை கணிசமாக அதிகரிப்பு!

இதன்படி, புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி காருக்கு ரூ.1.04 கோடியாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பழைய மாடலைவிட ரூ.4.70 லட்சம் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், புதிதாக முன்பதிவு செய்வோருக்கு இனி இந்த விலையில்தான் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி கார் கிடைக்கும்.

மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி எலெக்ட்ரிக் காரின் விலை கணிசமாக அதிகரிப்பு!

தற்போது இந்த கார் சென்னை, டெல்லி, மும்பை, புனே, ஹைதராபாத் மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. நாட்டின் பிற முக்கிய நகரங்களிலும் இந்த காரை விற்பனைக்கு கொண்டு செல்வதற்கான திட்டமும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்திடம் உள்ளது. எனினும், பிற நகரங்களில் உள்ள வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலமாக புக்கிங் செய்து வழங்கப்படுகிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி எலெக்ட்ரிக் காரின் விலை கணிசமாக அதிகரிப்பு!

இதனிடையே, மேம்படுத்தப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி எஸ்யூவி அந்நிறுவனத்தின் தாய் நாடான ஜெர்மனியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது லாட்டில் முன்பதிவு செய்யும் இந்திய வாடிக்கையாளர்களுக்கு இந்த மேம்படுத்தப்பட்ட மாடல் கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. இதுவும் விலை அதிகரிக்கப்பட்டதற்கான காரணமாக இருக்கலாம் என்று தெரிகிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி எலெக்ட்ரிக் காரின் விலை கணிசமாக அதிகரிப்பு!

மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி எலெக்ட்ரிக் எஸ்யூவியில் 80kWh லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. இதன் மின் மோட்டார்கள் மற்றும் பேட்டரி இணைந்து அதிகபட்சமாக 408 எச்பி பவரையும், 765 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 0 - 100 கிமீ வேகத்தை 5.1 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 180 கிமீ வேகம் வரை செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. முழுமையாக பேட்டரியை சார்ஜ் செய்தால் 400 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும்.

Most Read Articles
English summary
German luxury car maker, Mercedes benz has increased EQC electric SUV price in India.
Story first published: Tuesday, February 23, 2021, 11:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X