சி-கிளாஸ் செடான் காரின் விலையை உயர்த்தியது மெர்சிடிஸ்!! இவ்வளவு அதிகரிக்கப்படும்னு எதிர்பார்க்கல...

மெர்சிடிஸ்-பென்ஸ் சி-கிளாஸ் காரின் விலைகள் ரூ.3.14 லட்சம் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

சி-கிளாஸ் செடான் காரின் விலையை உயர்த்தியது மெர்சிடிஸ்!! இவ்வளவு அதிகரிக்கப்படும்னு எதிர்பார்க்கல...

இந்திய சந்தையில் சி-கிளாஸ் செடான் கார் மூன்று விதமான ட்ரிம் நிலைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் சி200 ப்ரொக்ரஸிவ், சி220டி ப்ரொக்ரஸிவ் மற்றும் சி300டி ஏஎம்ஜி லைன் என்பன அடங்குகின்றன.

சி-கிளாஸ் செடான் காரின் விலையை உயர்த்தியது மெர்சிடிஸ்!! இவ்வளவு அதிகரிக்கப்படும்னு எதிர்பார்க்கல...

இதில் சி200 ப்ரொக்ரஸிவ், சி220டி ப்ரொக்ரஸிவ் ட்ரிம்களின் விலைகள் மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளன. சி300டி ஏஎம்ஜி லைனின் பெயர் மெர்சிடிஸ் நிறுவனத்தின் இந்திய இணையத்தள பக்கத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது.

சி-கிளாஸ் செடான் காரின் விலையை உயர்த்தியது மெர்சிடிஸ்!! இவ்வளவு அதிகரிக்கப்படும்னு எதிர்பார்க்கல...

இதனால் சி-கிளாஸின் இந்த டாப் வேரியண்ட்டின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உடன் வழங்கப்படும் சி200 ப்ரொக்ரஸிவ் ட்ரிம்-இன் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.59,863 உயர்த்தப்பட்டுள்ளது.

சி-கிளாஸ் செடான் காரின் விலையை உயர்த்தியது மெர்சிடிஸ்!! இவ்வளவு அதிகரிக்கப்படும்னு எதிர்பார்க்கல...

அதிகப்பட்சமாக 201 பிஎச்பி மற்றும் 300 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது. அதேநேரம் சி220டி ப்ரொக்ரஸிவ் ட்ரிம்-இன் விலையில் அதிரடியாக ரூ.59,237 அதிகரிப்பு கொண்டுவரப்பட்டுள்ளது.

சி-கிளாஸ் செடான் காரின் விலையை உயர்த்தியது மெர்சிடிஸ்!! இவ்வளவு அதிகரிக்கப்படும்னு எதிர்பார்க்கல...

இந்த ட்ரிம்-இல் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 192 பிஎச்பி மற்றும் 400 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

சி-கிளாஸ் செடான் காரின் விலையை உயர்த்தியது மெர்சிடிஸ்!! இவ்வளவு அதிகரிக்கப்படும்னு எதிர்பார்க்கல...

விற்பனை நிறுத்தப்பட்டுள்ள சி300டி ட்ரிம்-இல் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு வந்தது. இந்த டீசல் என்ஜின் 245 பிஎச்பி மற்றும் 370 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக இருந்தது.

சி-கிளாஸ் செடான் காரின் விலையை உயர்த்தியது மெர்சிடிஸ்!! இவ்வளவு அதிகரிக்கப்படும்னு எதிர்பார்க்கல...

இவற்றுடன் சி-க்ளாஸ் காப்ரியோலெட் காரின் விலையையும் மெர்சிடிஸ் அதிகரித்துள்ளது. ஒரே ஒரு சி300 வேரியண்ட்டில் மட்டுமே விற்பனை செய்யப்படும் இந்த காரின் விலை அதிகப்பட்சமாக ரூ.3.14 லட்சம் வரையில் உயர்த்தப்பட்டுள்ளது.

சி-கிளாஸ் செடான் காரின் விலையை உயர்த்தியது மெர்சிடிஸ்!! இவ்வளவு அதிகரிக்கப்படும்னு எதிர்பார்க்கல...

சி-க்ளாஸ் காப்ரியோலெட் காரில் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 258 பிஎச்பி மற்றும் 370 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

சி-கிளாஸ் செடான் காரின் விலையை உயர்த்தியது மெர்சிடிஸ்!! இவ்வளவு அதிகரிக்கப்படும்னு எதிர்பார்க்கல...

மெர்சிடிஸ் நிறுவனம் அதன் சி-க்ளாஸ் செடான் காருக்கு இந்திய சந்தையில் அப்கிரேட்களை வழங்கி நீண்ட காலங்களாகிவிட்டது. ஆனால் இந்த பென்ஸ் காருக்கு போட்டியாக உள்ள ஆடி ஏ4 மற்றும் வால்வோ எஸ்60 கார்கள் சமீபத்தில் தான் அப்கிரேடை பெற்று இருந்தன.

Most Read Articles
English summary
Mercedes-Benz C-Class prices hiked by Rs 3.14 lakh; C300d AMG Line delisted
Story first published: Friday, May 21, 2021, 2:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X