இந்தியாவில் டபுள் மடங்கு அதிகரித்துள்ள பென்ஸ் கார்கள் விற்பனை!! வெறும் 3 மாதங்களில் இத்தனை கார்கள் விற்பனையா!

நடப்பு 2021ஆம் ஆண்டின் மூன்றாம் கால்பகுதியில் மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் விற்பனை இரட்டிப்பாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்த நிறுவனத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையினை பற்றி இனி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் டபுள் மடங்கு அதிகரித்துள்ள பென்ஸ் கார்கள் விற்பனை!! வெறும் 3 மாதங்களில் இத்தனை கார்கள் விற்பனையா!

இந்தியாவில் அதிகளவில் லக்சரி கார்களை விற்பனை செய்யும் நிறுவனமாக மெர்சிடிஸ்-பென்ஸ் விளங்குகிறது. இதற்கு மற்றொரு சாட்சியாக, 2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து செப்டம்பர் மாதம் வரையில் இந்திய சந்தையில் இந்த ஜெர்மன் கார் தயாரிப்பு நிறுவனத்தின் விற்பனை 79 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்தியாவில் டபுள் மடங்கு அதிகரித்துள்ள பென்ஸ் கார்கள் விற்பனை!! வெறும் 3 மாதங்களில் இத்தனை கார்கள் விற்பனையா!

கடந்த ஆண்டில் கொரோனா வைரஸினால் மார்ச் மாத மத்தியில் இருந்து பாதி மே மாதத்திற்கு ஊரடங்கு உததரவுகள் அமலில் இருந்தன. இதனால் தான் மெர்சிடிஸ் நிறுவனத்தின் விற்பனை கடந்த ஆண்டில் குறைவாக இருந்தது என்றாலும், இந்த ஆண்டிலும் கொரோனா இரண்டாவது அலை பரவியது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்தியாவில் டபுள் மடங்கு அதிகரித்துள்ள பென்ஸ் கார்கள் விற்பனை!! வெறும் 3 மாதங்களில் இத்தனை கார்கள் விற்பனையா!

ஆனால் இரண்டாவது அலையில் இருந்து இந்த நிறுவனம் விரைவாக மீண்டுவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் கடந்த ஜூலை மாதத்தில் இருந்தே பென்ஸ் கார்களின் விற்பனை அதிகரிக்க துவங்கிவிட்டது. 2021ஆம் ஆண்டின் இந்த மூன்றாம் காலாண்டில் மொத்தம் 4,101 கார்களை மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்துள்ளது.

இந்தியாவில் டபுள் மடங்கு அதிகரித்துள்ள பென்ஸ் கார்கள் விற்பனை!! வெறும் 3 மாதங்களில் இத்தனை கார்கள் விற்பனையா!

ஒரு காலாண்டில், அதாவது 3 மாதங்களில் மெர்சிடிஸ் நிறுவனம் அதிகப்படியாக விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை இதுவாகும். கடந்த ஆண்டில் இதே மூன்றாம் காலாண்டில் வெறும் 2060 கார்களையே இந்த லக்சரி கார் தயாரிப்பு நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இதில் இருந்து கொரோனா வைரஸ் இரண்டாவது அலைக்கு பிறகு லக்சரி கார்களுக்கான தேவை இந்தியாவில் அதிகரித்து இருப்பதை அறிய முடிகிறது.

இந்தியாவில் டபுள் மடங்கு அதிகரித்துள்ள பென்ஸ் கார்கள் விற்பனை!! வெறும் 3 மாதங்களில் இத்தனை கார்கள் விற்பனையா!

இந்த தேவையை மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் சரியாக பயன்படுத்தி கொண்டுள்ளது. விற்பனையில் குறுகிய காலத்தில் ஏற்பட்டுள்ள இந்த முன்னேற்றத்தினால், மெர்சிடிஸ் நிறுவனம் கடந்த 2020ஆம் ஆண்டில் விற்பனை செய்த சொகுசு கார்களின் எண்ணிக்கையை இந்த 2021ஆம் வருடத்தில் இந்த 9 மாதங்களுக்கு உள்ளாகவே எட்டியுள்ளது.

இந்தியாவில் டபுள் மடங்கு அதிகரித்துள்ள பென்ஸ் கார்கள் விற்பனை!! வெறும் 3 மாதங்களில் இத்தனை கார்கள் விற்பனையா!

குறைக்கடத்திகளுக்கு உலகளவில் தேவை ஏற்பட்டுவரும் தற்போதைய சூழலில், மெர்சிடிஸ்-பென்ஸ் இந்த அளவிற்கு சொகுசு கார்களின் விற்பனையில் முன்னேற்றத்தை கண்டிருப்பது தான் இதில் ஹைலைட்டே. தற்போதைய இந்த சூழ்நிலையை அப்படியே வரப்போகும் பண்டிகை காலத்திற்கும் தொடரவே மெர்சிடிஸ் நிறுவனம் விரும்பும்.

இந்தியாவில் டபுள் மடங்கு அதிகரித்துள்ள பென்ஸ் கார்கள் விற்பனை!! வெறும் 3 மாதங்களில் இத்தனை கார்கள் விற்பனையா!

2021ஆம் ஆண்டின் மூன்றாம் கால்பகுதியில் கார்கள் விற்பனையில் அடைந்துள்ள இந்த வளர்ச்சி குறித்து மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மார்டின் ஸ்வெங்க் கருத்து தெரிவிக்கையில், எங்கள் புதிய மற்றும் தற்போதுள்ள பெரும்பாலான தயாரிப்புகளுக்கு நாங்கள் ஒரு வலுவான ஆர்டர் வங்கியை உருவாக்கியுள்ளோம். மேலும் கார்களை சரியான நேரத்தில் வாடிக்கையாளர்களிடம் ஒப்படைக்க கடுமையாக முயற்சி செய்கிறோம்.

இந்தியாவில் டபுள் மடங்கு அதிகரித்துள்ள பென்ஸ் கார்கள் விற்பனை!! வெறும் 3 மாதங்களில் இத்தனை கார்கள் விற்பனையா!

வரவிருக்கும் பண்டிகை காலங்கள் இந்த விற்பனை வேகத்தை தொடரும் மற்றும் கூடுதல் தேவையை உருவாக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றார். இந்திய சந்தைக்கான புதிய மெர்சிடிஸ் கார்களின் வருகை வழக்கம்போல் தொடரும் என கூறியுள்ள இவர், இந்த ஆண்டின் கடைசி காலாண்டில் புதிய அறிமுகங்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் டபுள் மடங்கு அதிகரித்துள்ள பென்ஸ் கார்கள் விற்பனை!! வெறும் 3 மாதங்களில் இத்தனை கார்கள் விற்பனையா!

இதுகுறித்து மார்டின் ஸ்வெங்க் மேலும் பேசுகையில், இந்த எதிர்பாராத தேவையை பூர்த்தி செய்ய, எங்கள் விநியோகச் சங்கிலியை பாதுகாக்கவும், ஒட்டுமொத்த வாகன துறை எதிர்கொள்ளும் தற்போதைய சவால்களை தணிக்கவும் முடிந்தவரை பல கார்களை உற்பத்தி செய்ய முயற்சிப்போம். வரவிருக்கும் மாதங்களுக்கான எங்கள் விற்பனை திட்டங்களுடன் நாங்கள் எச்சரிக்கை உடனும், நம்பிக்கை உடனும் இருக்கிறோம் என கூறினார்.

இந்தியாவில் டபுள் மடங்கு அதிகரித்துள்ள பென்ஸ் கார்கள் விற்பனை!! வெறும் 3 மாதங்களில் இத்தனை கார்கள் விற்பனையா!

குறைக்கடத்திகளுக்கான உலகளாவிய பற்றாக்குறை இல்லையென்றால் இதனை காட்டிலும் (4,101 யூனிட்கள்) 20% கூடுதலாக கார்களை டெலிவிரி செய்திருப்போம் என கூறும் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் கார்களுக்கு காத்திருப்பு காலம் மாடல்களை பொறுத்து இந்தியாவில் 4-இல் இருந்து அதிகப்பட்சமாக 32 வாரங்கள் வரையில் உள்ளன. அதாவது பென்ஸ் காரை முன்பதிவு செய்து வாடிக்கையாளர்கள் காத்திருக்க வேண்டிய கால அளவு அதிகப்பட்சமாக 32 வாரங்கள் வரையில் உள்ளன.

இந்தியாவில் டபுள் மடங்கு அதிகரித்துள்ள பென்ஸ் கார்கள் விற்பனை!! வெறும் 3 மாதங்களில் இத்தனை கார்கள் விற்பனையா!

கடந்த 9 மாதங்களில் மொத்தமாக விற்பனை செய்யப்பட்ட பென்ஸ் கார்களில் கிட்டத்தட்ட 45% எஸ்-க்ளாஸ் கார்கள் என மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய மற்றும் பயன்படுத்தப்பட்ட கார் ஆன்லைன் ப்ளாட்ஃபாரங்களில் 4.1 மில்லியன் வருகையாளர்களுடன் ஏறக்குறைய 44 ஆயிரத்திற்கும் அதிகமான இணைய முதலீட்டாளர்களை மெர்சிடிஸ் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

Most Read Articles

English summary
Mercedes-Benz India leads the luxury industry | Posts a robust 99% Q3 2021 growth- one of the highest quarter in its history
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X