சில்லறை வணிகத்திற்கான புதிய ப்ளாட்ஃபாரத்துடன் மெர்சிடிஸ்-பென்ஸ்!! நாடு முழுவதும் கார்களுக்கு இனி ஒரே விலையாம்!

உலகின் முன்னணி லக்சரி கார் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் சில்லறை வணிகத்தில் அதன் எதிர்கால திட்டங்களை அறிவித்துள்ளது. அவற்றை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

சில்லறை வணிகத்திற்கான புதிய ப்ளாட்ஃபாரத்துடன் மெர்சிடிஸ்-பென்ஸ்!! நாடு முழுவதும் கார்களுக்கு இனி ஒரே விலையாம்!

மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் கடந்த அக்.22ஆம் தேதி அதன் ‘எதிர்கால சில்லறை விற்பனை' என்ற ப்ளாட்ஃபாரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. சுருக்கமாக இதனை ROTF (Retail Of The Future) என இந்த நிறுவனம் அழைக்கிறது.

சில்லறை வணிகத்திற்கான புதிய ப்ளாட்ஃபாரத்துடன் மெர்சிடிஸ்-பென்ஸ்!! நாடு முழுவதும் கார்களுக்கு இனி ஒரே விலையாம்!

இது இந்திய சந்தையில் பிரீமியம் கார்கள் எந்த அளவிற்கு மறுவரையறை செய்யப்பட வேண்டும் என்பதற்கு மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்திற்கு ஓர் அளவீடு போன்று விளங்கவுள்ளது. இந்தியா, மெர்டிசிஸின் முதல் சிகேடி (பாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு, முழு காராக அசெம்பிள் செய்யப்படுவது) சந்தையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சில்லறை வணிகத்திற்கான புதிய ப்ளாட்ஃபாரத்துடன் மெர்சிடிஸ்-பென்ஸ்!! நாடு முழுவதும் கார்களுக்கு இனி ஒரே விலையாம்!

‘எதிர்காலத்தின் சில்லறை' ப்ளாட்ஃபாரத்தை மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் ஏற்கனவே மூன்று வெளிநாட்டு சந்தைகளில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வகையில் இந்தியா நான்காவது நாடாகும். புதிய ‘நேரடியாக வாடிக்கையாளருக்கு' மாடல் முதலாவதாக கடந்த 2021 ஜூன் மாதத்தில் அறிவிக்கப்பட்டது.

சில்லறை வணிகத்திற்கான புதிய ப்ளாட்ஃபாரத்துடன் மெர்சிடிஸ்-பென்ஸ்!! நாடு முழுவதும் கார்களுக்கு இனி ஒரே விலையாம்!

அதனை தொடர்ந்து தற்போது இதனை மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், சிஇஓ-வுமான மார்டின் ஸ்வெங்க் மற்றும் துணை தலைவர் சந்தோஷ் ஐயர் ஆகியோர் அறிமுகப்படுத்தி உள்ளனர். மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா நிறுவனம் ROTF உடன், மொத்த கார்களின் உரிமையையும் தக்க வைத்து கொள்வதாக அறிவித்துள்ளது.

சில்லறை வணிகத்திற்கான புதிய ப்ளாட்ஃபாரத்துடன் மெர்சிடிஸ்-பென்ஸ்!! நாடு முழுவதும் கார்களுக்கு இனி ஒரே விலையாம்!

பங்குகளை நியமிக்கப்பட்ட ஃப்ரான்சிஸ் பார்டனர்களின் உதவியுடன் சில்லறையாக விற்பனை செய்யவுள்ள மெர்சிடிஸ் பிராண்ட், கார்களை பற்றிய விபரங்களை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கவுள்ளதாக கூறியுள்ளது. வாடிக்கையாளர்கள் ஆர்டர்களை செயலாக்குவதற்கும், நிறைவேற்றுவதற்கும் இது பொறுப்பாகும் என்றும் மெர்சிடிஸ் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சில்லறை வணிகத்திற்கான புதிய ப்ளாட்ஃபாரத்துடன் மெர்சிடிஸ்-பென்ஸ்!! நாடு முழுவதும் கார்களுக்கு இனி ஒரே விலையாம்!

ROTFஇன் கீழ், நாடு முழுவதும் மெர்சிடிஸ் கார்களுக்கு தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட ஒரே மாதிரியான விலையே இருக்குமாம். இதனால் வாடிக்கையாளர்கள் இனி தங்கள் கொள்முதலுக்காக எந்தவிதமான தற்செயல் கட்டணங்களையும் செலுத்த வேண்டி இருக்காது என கூறப்படுகிறது.

சில்லறை வணிகத்திற்கான புதிய ப்ளாட்ஃபாரத்துடன் மெர்சிடிஸ்-பென்ஸ்!! நாடு முழுவதும் கார்களுக்கு இனி ஒரே விலையாம்!

அதேநேரம், வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பும் தயாரிப்புகளை அடையாளம் காண மெர்சிடிஸ் நிறுவனது தேசிய பங்குகளை நேரடியாக அணுகவுள்ளது. மேலும் இதற்காக முன்பதிவின் போது வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக VIN எண்ணை வழங்க இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

சில்லறை வணிகத்திற்கான புதிய ப்ளாட்ஃபாரத்துடன் மெர்சிடிஸ்-பென்ஸ்!! நாடு முழுவதும் கார்களுக்கு இனி ஒரே விலையாம்!

ரூ.50,000 என்ற தொகை உடன் ROTF ப்ளாட்ஃபாரத்தில் தங்களது பெயரை பதிவு செய்வதன் மூலம் வாடிக்கையாளர்கள் அடுத்த 4 மாதங்களுக்கு எந்தவொரு மெர்சிடிஸ்-பென்ஸ் காரையும் இலவசமாக முன்பதிவு செய்யலாமாம். அதுமட்டுமின்றி இந்த 4 மாதங்களில் டெஸ்ட் ட்ரைவ்களையும், ஆலோசனைகளையும் பெற முடியும்.

சில்லறை வணிகத்திற்கான புதிய ப்ளாட்ஃபாரத்துடன் மெர்சிடிஸ்-பென்ஸ்!! நாடு முழுவதும் கார்களுக்கு இனி ஒரே விலையாம்!

புதிய ROTF ப்ளாட்ஃபாரத்தின் வாயிலாக தங்களது பிரீமியம் கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சவுகரியம் மற்றும் நெகிழ்வுத்தன்மையை வழங்க வேண்டும் என்பது தான் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் நோக்கமாக உள்ளது. இதுகுறித்து மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மார்டின் ஸ்வெங்க் பேசுகையில், "இன்று, ஒரு வலுவான டிஜிட்டல் முதுக்கெலும்பை வெற்றிகரமாக நிறுவி, ‘சில்லறை வணிகம்'-ஐ இந்தியாவில் செயல்படுத்துவதில் பெருமை கொள்கிறோம்.

சில்லறை வணிகத்திற்கான புதிய ப்ளாட்ஃபாரத்துடன் மெர்சிடிஸ்-பென்ஸ்!! நாடு முழுவதும் கார்களுக்கு இனி ஒரே விலையாம்!

இது எங்கள் சில்லறை வணிகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கு வழிவகுக்கிறது. ROTF என்பது ஒரு தனித்துவமான வாடிக்கையாளர் மையப்படுத்தப்பட்ட வணிக மாதிரியாகும். இது எங்கள் வாடிக்கையாளர்களின் வளர்ந்துவரும் தேவைகளை பூர்த்தி செய்ய உதவும். அதேநேரம் சந்தையில் நிலவும் நிதி மற்றும் செயல்பாட்டு அபாயங்களை கணிசமாக குறைக்கும் விதமாக எங்கள் ஃப்ரான்சிஸ் கூட்டணிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

சில்லறை வணிகத்திற்கான புதிய ப்ளாட்ஃபாரத்துடன் மெர்சிடிஸ்-பென்ஸ்!! நாடு முழுவதும் கார்களுக்கு இனி ஒரே விலையாம்!

ஃப்ரான்சிஸ் பார்ட்னர்கள் இப்போது மிக சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்குவதில் மட்டுமே கவனம் செலுத்துவார்கள் என்பதால், எப்படியோ வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்க வேண்டும் என்கிற எங்களது எண்ணத்திற்கு ROTF வலுச்சேர்க்கிறது என்றார்.

சில்லறை வணிகத்திற்கான புதிய ப்ளாட்ஃபாரத்துடன் மெர்சிடிஸ்-பென்ஸ்!! நாடு முழுவதும் கார்களுக்கு இனி ஒரே விலையாம்!

இந்திய சந்தையில் இந்த புதிய சில்லறை வணிகத்திற்கான கொள்கைகளை ஏற்கனவே மெர்சிடிஸ் நிறுவனம் செயல்படுத்த துவங்கிவிட்டது. இதன் முதற்கட்டமாக, எஸ்-கிளாஸ் செடான் கார்கள் பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு முதன்முறையாக இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படும் பணிகள் துவங்கப்பட்டுள்ளதாக மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் சமீபத்தில் அறிவித்திருந்தது.

Most Read Articles

English summary
Mercedes-Benz Retail Of The Future.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X