நினைத்து பார்க்க முடியாத வேகத்தில் செல்லும்! நாட்டின் மிக அதி-வேக ஹேட்ச்பேக்காக அறிமுகமானது Benz AMG A 45 S!

மிக அதிக பவர்ஃபுல் எஞ்ஜினுடன் மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz) நிறுவனத்தின் புதிய ஹேட்ச்பேக் ரக கார் 'ஏஎம்ஜி ஏ 45 எஸ் 4மேட்டிக்-ப்ளஸ்' (AMG A 45 S 4MATIC+) இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த கார் பற்றிய முக்கிய விபரங்களை இந்த பதிவில் காணலாம், வாங்க.

நினைத்து பார்க்க முடியாத வேகத்தில் செல்லும்... இந்தியாவின் மிக அதிக-வேக ஹேட்ச்பேக்காக அறிமுகமானது Benz AMG A 45 S!

முன்னணி சொகுசு வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz) இந்தியாவில் புதிய ஹேட்ச்பேக் ரக கார் மாடல் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. 'ஏஎம்ஜி ஏ 45 எஸ் 4மேட்டிக்-ப்ளஸ்' (AMG A 45 S 4MATIC+) எனும் மாடலையே நிறுவனம் இந்தியாவில் களமிறக்கியிருக்கின்றது.

நினைத்து பார்க்க முடியாத வேகத்தில் செல்லும்... இந்தியாவின் மிக அதிக-வேக ஹேட்ச்பேக்காக அறிமுகமானது Benz AMG A 45 S!

இந்த காரில் மிக அதிக பவர்ஃபுல்லான எஞ்ஜினை நிறுவனம் பயன்படுத்தியுள்ளது. 2.0 லிட்டர் டர்போசார்ஜட் எஞ்ஜினை அது பயன்படுத்தியிருக்கின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 421 எச்பி திறன் வரை வெளியேற்றும். இந்த எஞ்ஜின் முழுக்க முழுக்க கைகளால் அசெம்பிள் செய்யப்பட்ட புதிய எஞ்ஜின் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஓர் ஹேட்ச்பேக் கார் இத்தகைய அதிக எஞ்ஜின் திறனுடன் இந்தியாவில் விற்பனைக்கு வருவது இதுவே முதல் முறையாகும். ஆகையால், நாட்டின் மிக அதி-வேக ஹேட்ச்பேக் ரக கார் என்ற பட்டத்தை ஏஎம்ஜி ஏ 45 எஸ் 4மேட்டிக்-ப்ளஸ் பெற்றிருக்கின்றது.

நினைத்து பார்க்க முடியாத வேகத்தில் செல்லும்... இந்தியாவின் மிக அதிக-வேக ஹேட்ச்பேக்காக அறிமுகமானது Benz AMG A 45 S!

மேலும், இதன் அறிமுகம் அதிக திறன் வெளிப்பாடு கொண்ட காரை விரும்பும் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் ஏஎம்ஜி ஏ 45 எஸ் 4மேட்டிக்-ப்ளஸ் காருக்கு அறிமுக விலையாக ரூ. 79.50 லட்சம் என்ற உச்சபட்ச விலையை நிர்ணயித்துள்ளது.

நினைத்து பார்க்க முடியாத வேகத்தில் செல்லும்... இந்தியாவின் மிக அதிக-வேக ஹேட்ச்பேக்காக அறிமுகமானது Benz AMG A 45 S!

மேலே பார்த்தது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஆன்-ரோடில் ரூ. 80 லட்சத்திற்கும் அதிகமான விலையில் அது விற்பனைக்குக் கிடைக்கும். இளம் தலைமுறையினர்களை கவரும் பொருட்டு இக்காரில் பன்முக சிறப்பு வசதிகளை மெர்சிடிஸ் பென்ஸ் வழங்கியிருக்கின்றது. குறிப்பாக, ஹேட்ச்பேக்-கின் தோற்றம் அதன் முன்னோடி மாடல்களைக் காட்டிலும் பல மடங்கு அதிக கவர்ச்சியானதாக உருவாக்கப்பட்டிருக்கின்றது.

நினைத்து பார்க்க முடியாத வேகத்தில் செல்லும்... இந்தியாவின் மிக அதிக-வேக ஹேட்ச்பேக்காக அறிமுகமானது Benz AMG A 45 S!

ஏஎம்ஜி-யை குறிப்பிடும் வகையில் ரேடியேட்டர் க்ரில், பவர்டோம்கள் கொண்ட ஏரோடைனமிக் பான்னெட், பல பீம்கள் கொண்ட எல்இடி ஹெட்லைட், பெரிய வட்ட வடிவ (90மிமீ) இரட்டை புகை வெளியேற்றும் குழாய்கள் (இரு பக்கத்திலும்), 19 இன்ச் அலாய் வீல் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டுள்ளன.

நினைத்து பார்க்க முடியாத வேகத்தில் செல்லும்... இந்தியாவின் மிக அதிக-வேக ஹேட்ச்பேக்காக அறிமுகமானது Benz AMG A 45 S!

தொடர்ந்து, பக்கெட் ஸ்டைலிலான ஸ்போர்ட் இருக்கை, இந்த இருக்கையை பிளாக் ஆர்டிகோ மேன்-மேட் லெதராலும், டைனமிகா மைக்ரோஃபைபர் தையல்களாலும் நிறுவனம் அலங்கரித்துள்ளது. இதைப் போலவே இதன் ஸ்டியரிங் வீலை, நப்பா லெதர் மற்றும் டைனமிகா மைக்ரோஃபைபரால் அலங்கரித்திருக்கின்றது, பென்ஸ். இவையனைத்தும் இளைஞர்களைக் கவரும் பொருட்டு மிகவும் நேர்த்தியாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

நினைத்து பார்க்க முடியாத வேகத்தில் செல்லும்... இந்தியாவின் மிக அதிக-வேக ஹேட்ச்பேக்காக அறிமுகமானது Benz AMG A 45 S!

இத்துடன், சில்வர் குரோம் பேக்கேஜ் எனும் கஸ்டமைசேஷன் வசதியையும் பென்ஸ் வழங்குகின்றது. இதன் வாயிலாக மற்ற வாகனத்தைக் காட்டிலும் மிகவும் தனித்துவமானதாக வாடிக்கையாளர்களால் தங்களின் ஏஎம்ஜி ஏ 45 எஸ் காரை மாற்றிக் கொள்ள முடியும். இந்த காரில் மெர்சிடிஸ் சிக்னேச்சர் சிங்கிள் யூனிட் டிஸ்பிளே, இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் இன்ஸ்ட்ரூமெண்டேஷனுக்காக இரண்டு தனித்தனி திரைகள் வழங்கப்பட்டுள்ளன. முந்தைய டச்ஸ்கிரீன் யூனிட் மற்றும் எம்பியூஎக்ஸ் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் இது வரும்.

நினைத்து பார்க்க முடியாத வேகத்தில் செல்லும்... இந்தியாவின் மிக அதிக-வேக ஹேட்ச்பேக்காக அறிமுகமானது Benz AMG A 45 S!

ஏஎம்ஜி ஏ 45 எஸ் 4மேட்டிக்-ப்ளஸ் காரில், 2.0 லிட்டர் 4 இன்-லைன் (ரோல்லர் பேரிங் ட்வின் ஸ்க்ரோல் டர்போசார்ஜர் வசதிக் கொண்டது) எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது உச்சபட்சமாக 1,991 சிசி திறனை வெளியேற்றும். முன்னதாக நாங்கள் கூறியதைப் போலவே 421 எச்பி பவரை 6,750 ஆர்பிஎம்மிலும், 500 என்எம் டார்க்கை 5,250 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும்.

நினைத்து பார்க்க முடியாத வேகத்தில் செல்லும்... இந்தியாவின் மிக அதிக-வேக ஹேட்ச்பேக்காக அறிமுகமானது Benz AMG A 45 S!

இந்த எஞ்ஜினில் ஸ்பீடுஷிஃப்ட் டிசிடி 8ஜி ட்யூவல்-க்ளட்ச் டிரான்ஸ்மிஷன் வசதி வழங்கப்படுகின்றது. இதுவே அனைத்து வீல்களுக்குமான இயங்கு திறன் கடத்தப்படுகின்றது. இது ஓர் அதிக பவர்ஃபுல் எஞ்ஜின் ஆகும். மிக தெளிவாகக் கூற வேண்டுமானால், வெறும் 3.9 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை இது எட்டிவிடும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 270 கிமீ வேகம் ஆகும்.

நினைத்து பார்க்க முடியாத வேகத்தில் செல்லும்... இந்தியாவின் மிக அதிக-வேக ஹேட்ச்பேக்காக அறிமுகமானது Benz AMG A 45 S!

இத்தகைய திறன் வெளிப்பாட்டினாலேயே இக்காரை இந்தியாவின் மிக அதிக வேகம் கொண்ட ஹேட்ச்பேக் என்று குறிப்பிடப்படுகின்றது. இந்த காரில் பாதுகாப்பு அம்சங்களாக பிளைன்ட் ஸ்பாட் அசிஸ்ட், லேன் கீப் அசிஸ்ட், அதிக பாதுகாப்பான ஏஎம்ஜி பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இத்துடன், கம்ஃபோர்ட் (Comfort), ஸ்போர்ட் (Sport), ஸ்போர்ட்-ப்ளஸ் (Sport+), ஸ்லிப்பரி (Slippery), தனிப்பட்ட (Individual) மற்றும் ரேஸ் (Race) ஆகிய ஆறு விதமான ரைடிங் மோட்களும் வழங்கப்படுகின்றன.

Most Read Articles

English summary
Mercedes benz launches most powerful luxury hatchback amg a 45 s 4matic plus in india
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X