100 வருடங்களை நிறைவு செய்யும் மெர்சிடிஸ்-மேபக் பிராண்ட்!! நினைவுக்கூறும் விதமாக 2 ஸ்பெஷல் எடிசன்கள் வெளியீடு

மெர்சிடிஸ்-மேபக் பிராண்டின் 100 வருட ஆண்டு நிறைவை முன்னிட்டு, எஸ்-கிளாஸ் மற்றும் ஜிஎல்எஸ் மாடல்களில் புதியதாக 'எடிசன் 100' என்ற பெயரில் ஸ்பெஷல் எடிசன்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த புதிய மெர்சிடிஸ் கார்களை பற்றிய கூடுதல் விபரங்களை பற்றி இனி இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

100 வருடங்களை நிறைவு செய்யும் மெர்சிடிஸ்-மேபக் பிராண்ட்!! நினைவுக்கூறும் விதமாக 2 ஸ்பெஷல் எடிசன்கள் வெளியீடு

தற்போது மெர்சிடிஸ் எஸ்-கிளாஸ் செடான் மற்றும் ஜிஎல்எஸ் எஸ்யூவி கார்களில் வழங்கப்பட்டுள்ள இந்த ஸ்பெஷல் எடிசன்கள், அவற்றின் பெயர்களுக்கு ஏற்ப வெறும் 100 யூனிட்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளன.

100 வருடங்களை நிறைவு செய்யும் மெர்சிடிஸ்-மேபக் பிராண்ட்!! நினைவுக்கூறும் விதமாக 2 ஸ்பெஷல் எடிசன்கள் வெளியீடு

எஸ்-கிளாஸ் & ஜிஎல்எஸ் 'எடிசன் 100' கார்களை நடப்பு 2021ஆம் ஆண்டின் நான்காம் கால்பகுதியில் இருந்து வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்யலாம் என மெர்சிடிஸ் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மெர்சிடிஸ் நிறுவனத்தின் லக்சரி கார்கள் பிராண்டாக விளங்கும் மேபக் முதன்முதலாக 1909இல் வில்லியம் மேபக் மற்றும் அவரது மகனால் நிறுவப்பட்டது.

100 வருடங்களை நிறைவு செய்யும் மெர்சிடிஸ்-மேபக் பிராண்ட்!! நினைவுக்கூறும் விதமாக 2 ஸ்பெஷல் எடிசன்கள் வெளியீடு

ஆனால் முதல் சோதனை காரை இந்த நிறுவனம் 1919இல் தான் தயாரித்து பார்தது. அதன்பின் இரண்டு வருடங்கள் கழித்து 1921இல், பெர்லீன் மோட்டார் கண்காட்சியில் அந்த கார் மக்களின் பார்வைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் தான் 2021ஆம் ஆண்டை இந்த பிராண்டின் 100வது ஆண்டு நிறைவாக கொண்டாடுகிறார்கள்.

100 வருடங்களை நிறைவு செய்யும் மெர்சிடிஸ்-மேபக் பிராண்ட்!! நினைவுக்கூறும் விதமாக 2 ஸ்பெஷல் எடிசன்கள் வெளியீடு

தற்போது மெர்சிடிஸ்-பென்ஸ் என அழைக்கப்படும் டைம்லர்-பென்ஸ் நிறுவனம் மேபக் பிராண்டை 1960இல் சொந்தமாக வாங்கியது. அந்த சமயத்தில், இந்த பிராண்டின் பெயர் மேபக் இல்லை. அதன்பின் கிட்டத்தட்ட 40 வருடங்கள் கழித்து 2002இல் அல்ட்ரா-லக்சரி பிராண்டாக மேபக் கொண்டுவரப்பட்டது. இந்த நேரத்தில் தான் அதன் மேபக் பெயருக்கும் மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டது.

100 வருடங்களை நிறைவு செய்யும் மெர்சிடிஸ்-மேபக் பிராண்ட்!! நினைவுக்கூறும் விதமாக 2 ஸ்பெஷல் எடிசன்கள் வெளியீடு

இருப்பினும் இந்த பிராண்டில் இருந்து பெரிய அளவில் கார்கள் விற்பனையாகாததை அடுத்து, 2013இல் தனி பிராண்டாக மேபக் தனித்துவிடப்பட்டது. அதன்பின் மீண்டும் 2015இல் டைம்லர் ஏஜி நிறுவனத்தின் மெர்சிடிஸ்-பென்ஸ் பிராண்டிற்கு துணை பிராண்டாக மேபக் கொண்டுவரப்பட்டது.

100 வருடங்களை நிறைவு செய்யும் மெர்சிடிஸ்-மேபக் பிராண்ட்!! நினைவுக்கூறும் விதமாக 2 ஸ்பெஷல் எடிசன்கள் வெளியீடு

எஸ்-கிளாஸ் மற்றும் ஜிஎல்எஸ் என்பன மெர்சிடிஸ்-மேபக் பிராண்டில் இருந்து தற்சமயம் விற்பனை செய்யப்படும் சில கார் மாடல்களாகும். இவை இரண்டிலும் தலா 100 யூனிட்கள் உருவாக்கப்பட உள்ள இந்த ஸ்பெஷல் எடிசன்களில் முன்பக்க ரேடியேட்டர் க்ரில் அமைப்பானது பிராண்ட் லோகோ உடன் முன்பை காட்டிலும் காஸ்ட்லீயான தோற்றத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

100 வருடங்களை நிறைவு செய்யும் மெர்சிடிஸ்-மேபக் பிராண்ட்!! நினைவுக்கூறும் விதமாக 2 ஸ்பெஷல் எடிசன்கள் வெளியீடு

இந்த இரு ஸ்பெஷல் எடிசன்களும் ஒரே மாதிரியாக ஹை-டெக் சில்வர்/ நாடிகல் நீலம் என்ற நிறங்களில் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அதேபோல் இவற்றின் உட்புற கேபினும், க்ரிஸ்டல் வெள்ளை/ சில்வர் க்ரே பேர்ல் நிறங்களில், லெதரால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

100 வருடங்களை நிறைவு செய்யும் மெர்சிடிஸ்-மேபக் பிராண்ட்!! நினைவுக்கூறும் விதமாக 2 ஸ்பெஷல் எடிசன்கள் வெளியீடு

வெளிப்புறத்தில் 'எடிசன் 100' லோகோ ஆனது மேபக் எஸ்-க்ளாஸ் மாடலில் C-பில்லரிலும், ஜிஎல்எஸ் மாடலில் D-பில்லரிலும் பொருத்தப்பட்டுள்ளது. உட்புறத்தில் வெவ்வேறான பாகங்களிலும், ஒளியூட்டப்பட்ட பேனல்களிலும் இந்த ஸ்பெஷல் எடிசனிற்கான லோகோ வழங்கப்பட்டுள்ளது.

100 வருடங்களை நிறைவு செய்யும் மெர்சிடிஸ்-மேபக் பிராண்ட்!! நினைவுக்கூறும் விதமாக 2 ஸ்பெஷல் எடிசன்கள் வெளியீடு

இவற்றுடன் புதிய க்ரே நிறத்தில் ஃபினிஷ் செய்யப்பட்ட சக்கரங்களை ஜிஎல்எஸ் மற்றும் எஸ்-க்ளாஸ் மாடல்களின் இந்த 'எடிசன் 100' கார்கள் பெற்றுள்ளன. எஸ்-கிளாஸ் செடான் காரை காட்டிலும் கிட்டத்தட்ட 33 செ.மீ நீளம் அதிகம் கொண்ட ஜிஎல்எஸ் எஸ்யூவி காரில் வி8 என்ஜின் பொருத்தப்படுகிறது.

100 வருடங்களை நிறைவு செய்யும் மெர்சிடிஸ்-மேபக் பிராண்ட்!! நினைவுக்கூறும் விதமாக 2 ஸ்பெஷல் எடிசன்கள் வெளியீடு

இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 557 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியது. கூடுதல் உயரத்தினால் இந்த எஸ்யூவி காரின் உட்புறத்தில் 1.10 மீட்டர் கூடுதலாக பயணிகளின் கால்களுக்கான இடவசதியும், காற்று சஸ்பென்ஷனும் கிடைக்கிறது. மறுபக்கம் மேபக் எஸ்-கிளாஸ் லக்சரி சலூனில் வி12 என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 612 எச்பி ஆற்றலை காருக்கு வழங்குகிறது.

100 வருடங்களை நிறைவு செய்யும் மெர்சிடிஸ்-மேபக் பிராண்ட்!! நினைவுக்கூறும் விதமாக 2 ஸ்பெஷல் எடிசன்கள் வெளியீடு

இந்த மேபக் செடான் காரில் வழங்கப்படும் மற்ற அம்சங்களாக, 4டி சவுண்ட் சிஸ்டம், இருக்கைகளில் ஹீட் & மசாஜ் செயல்பாடு மற்றும் இன்ஃபோடெயின்மெண்டிற்கு அதி-நவீன திரைகள் உள்ளிட்டவை அடங்குகின்றன. எஸ்-கிளாஸின் நீண்ட வீல்பேஸ் வெர்சன் உடன் ஒப்பிடுகையில் புதிய 'எடிசன் 100' 18 செ.மீ நீளமான வீல்பேஸை கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி அனைத்து-சக்கர ட்ரைவ் சிஸ்டத்தையும் முதன்முறையாக பெற்றுள்ளது.

Most Read Articles

English summary
Maybach Celebrates 100th Anniv, Reveals 'Edition 100' of S-Class & GLS SUV.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X