ஆரம்பமே அமர்க்களம்... மெர்சிடிஸ் மேபக் ஜிஎல்எஸ்600 எஸ்யூவியின் முதல் லாட் விற்று தீர்ந்தது!
சொகுசு கார் மார்க்கெட்டில் முதலிடத்தை தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் பல்வேறு புதிய மாடல்களை வரிசை கட்டி வருகிறது. அந்த வகையில், பெரும் கோடீஸ்வரர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மெர்சிடிஸ் மேபக் ஜிஎல்எஸ்600 எஸ்யூவியை இந்தியாவில் நேற்று விற்பனைக்கு கொண்டு வந்தது. ரூ.2.43 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சொகுசு கார் மார்க்கெட்டில் முதலிடத்தை தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் பல்வேறு புதிய மாடல்களை வரிசை கட்டி வருகிறது. அந்த வகையில், பெரும் கோடீஸ்வரர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மெர்சிடிஸ் மேபக் ஜிஎல்எஸ்600 எஸ்யூவியை இந்தியாவில் நேற்று விற்பனைக்கு கொண்டு வந்தது. ரூ.2.43 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அறிமுக நிகழ்வில் பேசிய மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் தலைவர் மார்ட்டின் ஷ்வென்க், மெர்சிடிஸ் மேபக் ஜிஎல்எஸ்600 எஸ்யூவிக்கு இதுவரை 50 பேர் புக்கிங் செய்துள்ளனர்.

இதன்படி, முதல் லாட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட அனைத்து யூனிட்டுகளுக்கும் முன்பதிவு ஏற்கப்பட்டுவிட்டது. அதாவது, இந்த ஆண்டுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அனைத்து யூனிட்டுகளுக்கும் புக்கிங் செய்யப்பட்டவிட்டது," என்று தெரிவித்துள்ளார்.

வரும் 2022ம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டிலேயே புதிய வாடிக்கையாளர்கள் இந்த எஸ்யூவியை வாங்க முடியும். அடுத்த ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட உள்ள மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ்600 எஸ்யூவி யூனிட்டுகளுக்கு முன்பதிவு ஏற்கப்படுவதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.

முதல் லாட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட யூனிட்டுகளுக்கு முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு பதிவு மூப்பு அடிப்படையில் முன்னுரிமை கொடுக்கப்பட்டு டெலிவிரிப் பணிகள் துவங்கப்பட உள்ளது. அடுத்த சில நாட்களில் முதல் லாட் யூனிட்டுகளின் டெலிவிரிப் பணிகள் துவங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதனால், இந்த எஸ்யூவியின் விலையை தெரிந்து கொண்டு வாங்க காத்திருந்த வாடிக்கையாளர்கள் இப்போது புக்கிங் செய்தாலும் கூட அடுத்த ஆண்டுதான் டெலிவிரி பெற முடியும் நிலை ஏற்பட்டுள்ளது.

புதிய மெர்சிடிஸ் மேபக் ஜிஎல்எஸ்600 எஸ்யூவியில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், 23 அலாய் வீல்கள் மற்றும் 23 அங்குல அலாய் வீல்கள், ஸ்கிட் பிளேட், ரூஃப் ரெயில்கள் என மிக மிரட்டலாகவும், பிரம்மாண்டமாகவும் இருக்கிறது.

இந்த எஸ்யூவியானது 4 சீட்டர் மற்றும் 5 சீட்டர் மாடல்களில் கிடைக்கும். பீஜ் - பழுப்பு என டியூவல் டோன் இன்டீரியர் பாகங்கள், நப்பா லெதர் அப்ஹோல்ஸ்ட்ரியுடன் கிடைக்கும். வென்டிலேட்டட் மற்றும் மசாஜ் வசதி கொண்ட இருக்கைகள், 12.3 அங்குல தொடுதிரை கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. பாதுகாப்பு அம்சங்களுக்கும் பஞ்சமில்லை.

இந்த காரில் 4.0 லிட்டர் வி8 பை- டர்போ எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 542 பிஎச்பி பவரையும், 730 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 9ஜி ட்ரோனிக் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த எஞ்சினுடன் 48 வோல்ட் இக்யூ பூஸ்ட் சிஸ்டமும் உள்ளது. இதனால், கூடுதலாக 21 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் பெற வழி உள்ளது. இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 4.9 வினாடிகளில் எட்டிவிடும். 3.25 டன் எடை கொண்ட இந்த கார் மணிக்கு 250 கிமீ வேகம் வரை தொடும் திறன் கொண்டது.


Click it and Unblock the Notifications








