மெர்சிடிஸ்-மேபக் சொகுசு எஸ்யூவி இந்திய அறிமுக தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு... எப்போனு தெரியுமா?
மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ் 600 4மேட்டிக் சொகுசு எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் அடுத்ததாக விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளது மேபக் மாடல் என்பதை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் சமீபத்தில் உறுதி செய்தது. ஆம், இது மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ் 600 4மேட்டிக் ஆகும். மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ் 600 4மேட்டிக் இந்தியாவில் அடுத்த வாரம் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என கூறப்பட்டது.

இந்த சூழலில், மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ் 600 4மேட்டிக் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ள தேதியை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தற்போது வீடியோ ஒன்றின் மூலமாக உறுதி செய்துள்ளது. இதன்படி வரும் ஜூன் 8ம் தேதி இந்த கார் இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ் 600 4மேட்டிக் சொகுசு எஸ்யூவி கார் ஆகும். இந்த எஸ்யூவிக்கு இந்தியாவில் தற்போது முன்பதிவு நடைபெற்று வருகிறது. மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ் 600 4மேட்டிக் சொகுசு எஸ்யூவி காரின் நீளம் 5,205 மிமீ. அகலம் 2,030 மிமீ. உயரம் 1,838 மிமீ ஆகும். அதே சமயம இந்த காரின் வீல்பேஸ் 3,135 மிமீ.

அதே நேரத்தில் மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ் 600 4மேட்டிக் சொகுசு எஸ்யூவி காரில், ஒரே ஒரு இன்ஜின் தேர்வு மட்டுமே வழங்கப்படுகிறது. இது 4.0 லிட்டர் டர்போசார்ஜ்டு வி8 பெட்ரோல் இன்ஜின் ஆகும். இதனுடன் 48 வோல்ட் மைல்டு-ஹைப்ரிட் தொழில்நுட்பமும் வழங்கப்பட்டுள்ளது. இதன் ஒட்டுமொத்த பவர் அவுட்புட் 558 ஹெச்பி மற்றும் 730 என்எம் டார்க் திறன் ஆகும்.

இந்த இன்ஜின் உடன் 9 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகிறது. மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ் 600 4மேட்டிக் சொகுசு எஸ்யூவி காரின் எடை 2.7 டன்களுக்கும் அதிகமாகும். இருப்பினும் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை இந்த எஸ்யூவி வெறும் 4.9 வினாடிகளில் எட்டி விடும் என மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் கூறுகிறது.

அதே சமயம் இந்த எஸ்யூவியின் டாப் ஸ்பீடு மணிக்கு 250 கிலோ மீட்டர்கள் ஆகும். மற்ற மெர்சிடிஸ் பென்ஸ் மாடல்களை போலவே இந்த காரின் வேகமும் இந்த வேகத்தில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பென்ட்லீ பென்டைகா, ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் உள்ளிட்ட கார்களுடன், மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ் 600 4மேட்டிக் சொகுசு எஸ்யூவி போட்டியிடும்.

இந்திய சந்தையில் மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ் 600 4மேட்டிக் சொகுசு எஸ்யூவியின் விலை 2 கோடி ரூபாய்க்கு (எக்ஸ் ஷோரூம்) நெருக்கமாக நிர்ணயம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ் 600 4மேட்டிக் சொகுசு எஸ்யூவி கார், சிபியூ வழியில் விற்பனை செய்யப்படவுள்ளது.
அதாவது முழுவதும் கட்டமைக்கப்பட்ட நிலையில் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும். இதன் காரணமாக இந்த காரின் விலை மிகவும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் செல்வந்தர்கள் மத்தியில் இந்த சொகுசு எஸ்யூவி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








