குட்டி ரோபோவுக்காக குரல் கொடுத்த கேல் ரத்னா விருது பெற்ற வீராங்கனை! MG Astorக்கு சிறப்பு கூடிக்கிட்டே இருக்கு!

MG Astor காரில் இடம் பெற இருக்கும் குட்டி ரோபோ போன்ற தொழில்நுட்பத்திற்கான குரல் ஒலியை கேல் ரத்னா விருது பெற்ற பாரா ஒலிம்பிக் பெண் வீராங்கனை கொடுத்திருக்கின்றனர். இதுகுறித்து முக்கிய விபரங்களை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

குட்டி ரோபோவுக்காக குரல் கொடுத்த கேல் ரத்தனா விருது பெற்ற வீராங்கனை... Astor காருக்கு சிறப்பு கூடிக்கிட்டே இருக்கு!

MG Motor (எம்ஜி மோட்டார்) நிறுவனம் இந்தியாவில் Astor (ஆஸ்டர்) காம்பேக்ட் எஸ்யூவி ரக காரை மிக விரைவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இந்த காரில் இதுவரை எந்த ஒரு நிறுவனமும் அறிமுகம் செய்யாத பல்வேறு அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை நிறுவனம் வழங்க இருக்கின்றது.

குட்டி ரோபோவுக்காக குரல் கொடுத்த கேல் ரத்தனா விருது பெற்ற வீராங்கனை... Astor காருக்கு சிறப்பு கூடிக்கிட்டே இருக்கு!

மிக குறிப்பாக செயற்கை நுண்ணறிவு கொண்ட அசிஸ்டண்ட் மற்றும் அடாஸ் உள்ளிட்ட வசதிகள் இடம் பெற இருக்கின்றன. இந்த தொழில்நுட்பங்கள் சில எச்சரிக்கைகள் மற்றும் அறிவுரைகளை குரல் ஒலியாக அதன் பயனர்களுக்கு வழங்கும். அத்தகைய குரல் ஒலிக்காக ஓர் பிரபலத்தின் வாய்ஸையே எம்ஜி நிறுவனம் தற்போது பயன்படுத்தியிருக்கின்றது.

குட்டி ரோபோவுக்காக குரல் கொடுத்த கேல் ரத்தனா விருது பெற்ற வீராங்கனை... Astor காருக்கு சிறப்பு கூடிக்கிட்டே இருக்கு!

பாரா ஒலிம்பிக் மற்றும் கேல் ரத்தனா விருது பெற்ற தீபா மாலிக் அவர்களின் குரல் வடிவிலேயே அந்த குரல் ஒலி எம்ஜி ஆஸ்டர் காரில் ஒலிக்க இருக்கின்றன. இவரின் குரல் மட்டுமின்றி பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சானின் குரலும் இந்த காரில் ஒலிக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

குட்டி ரோபோவுக்காக குரல் கொடுத்த கேல் ரத்தனா விருது பெற்ற வீராங்கனை... Astor காருக்கு சிறப்பு கூடிக்கிட்டே இருக்கு!

பெண் வீராங்கனை தீபா மாலிக்-கிற்கு புகழ் சேர்க்கும் விதமாக எம்ஜி நிறுவனம் அவரின் குரலை தனது ஆவலைத் தூண்டி வரும் ஆஸ்டர் காரில் பயன்படுத்தியிருக்கின்றது. நிறுவனம் இந்த காரை மிக விரைவில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதை முன்னிட்டு சாலையில் பல பரீட்சையில் ஈடுபடுத்தி வருகின்றது.

குட்டி ரோபோவுக்காக குரல் கொடுத்த கேல் ரத்தனா விருது பெற்ற வீராங்கனை... Astor காருக்கு சிறப்பு கூடிக்கிட்டே இருக்கு!

அந்தவகையில், அண்மையில் இக்காரை மலைப் பாதையில் வைத்து பல பரீட்சையில் ஈடுபடுத்தியபோது எங்கள் கேமிராவின் கண்களில் ஆஸ்டர் சிக்கியது. இதன் வாயிலாக சில முக்கிய தகவல்கள் எங்களுக்கு கிடைத்தன. குறிப்பாக, ஆஸ்டர் கான்செப்ட் மாடலாக காட்சிப்படுத்தியபோது எப்படி இருந்ததோ அதே தோற்றத்தில் உற்பத்தி நிலைக்கு கொண்டுவரப்பட்டிருக்கும் ஆஸ்டரும் அதே மாதிரியான ஸ்டைலிலேயே இருக்கின்றது.

குட்டி ரோபோவுக்காக குரல் கொடுத்த கேல் ரத்தனா விருது பெற்ற வீராங்கனை... Astor காருக்கு சிறப்பு கூடிக்கிட்டே இருக்கு!

அதாவது, க்ரில் அமைப்பு மற்றும் காரின் பக்கவாட்டு உள்ளிட்ட பல கான்செப்ட் மாடலில் இருந்ததைப் போலவே இருக்கின்றன. இத்துடன், ஐந்து ஸ்போக் அலாய் வீல்கள் காரில் பயன்படுத்தப்பட இருப்பது தெரிய வந்திருக்கின்றது. தொடர்ந்து, இன்டிகேட்டர் வசதியுடன் கூடிய கண்ணாடிகள், மேற்கூரை பகுதியில் ரெயில்கள் உள்ளிட்டவையும் இடம் பெற்றிருந்தன.

குட்டி ரோபோவுக்காக குரல் கொடுத்த கேல் ரத்தனா விருது பெற்ற வீராங்கனை... Astor காருக்கு சிறப்பு கூடிக்கிட்டே இருக்கு!

இவற்றைக் காட்டிலும் இக்காரில் இடம் பெற இருக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வசதியே பலரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உள்ளது. இந்த தொழில்நுட்பம், செய்தியை வாசித்தல், ஜோக்குகளை கூறுதல், உரையாடல் செய்தல், மனிதர்களைப் போல பாவனைகளை வெளிப்படுத்துதல், விக்கிப்பீடியா, நேவேகிஷன், இசை, கார்குறித்த எச்சரிக்கைகளை வழங்குதல் உள்ளிட்டவற்றை செய்யும்.

குட்டி ரோபோவுக்காக குரல் கொடுத்த கேல் ரத்தனா விருது பெற்ற வீராங்கனை... Astor காருக்கு சிறப்பு கூடிக்கிட்டே இருக்கு!

இதற்கான குரல் ஒலியையே அமிதாப் பச்சன் மற்றும் தீபா மாலிக் கொடுத்திருக்கின்றனர். ஆம், இவர்களின் குரலே ரோபோவின் குரளாக ஆஸ்டர் காரில் ஒலிக்க இருக்கின்றன. இந்த பணிகள் அனைத்தும் தற்போது முடிவடையும் நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆகையால், மிக விரைவில் எம்ஜி ஆஸ்டர் கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

குட்டி ரோபோவுக்காக குரல் கொடுத்த கேல் ரத்தனா விருது பெற்ற வீராங்கனை... Astor காருக்கு சிறப்பு கூடிக்கிட்டே இருக்கு!

எம்ஜி ஆஸ்டர் காம்பேக்ட் எஸ்யூவி காரில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் ஆகிய இரண்டு விதமான எஞ்ஜின் தேர்வுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு தானியங்கி ஆகிய கியர்பாக்ஸ் தேர்வுகளும் இக்காரில் எதிர்பார்க்கப்படுகின்றது.

குட்டி ரோபோவுக்காக குரல் கொடுத்த கேல் ரத்தனா விருது பெற்ற வீராங்கனை... Astor காருக்கு சிறப்பு கூடிக்கிட்டே இருக்கு!

புதிய எம்ஜி ஆஸ்டர் காம்பேக்ட் எஸ்யூவி இந்தியாவின் பிரபலமான கார் மாடல்களில் ஒன்றான ஹூண்டாய் க்ரெட்டா தொடங்கிய பல தயாரிப்புகளுக்கு போட்டியளிக்கி இருக்கின்றது. அதேவேலையில், இது குட்டி ரோபோவிற்கு இணையான சிறப்பு அம்சங்கள் இடம் பெற இருப்பதால் க்ரெட்டாவைக் காட்டிலும் மிக தனித்துவமான வரவேற்பை இந்தியர்கள் மத்தியில் ஆஸ்டர் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles

English summary
Mg astor ai tech gets voice from paralympic athlete deepa malik
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X