எம்ஜி நிறுவனம் அதிரடி... வரும் 15ம் தேதி தரமான சம்பவம் இருக்கு! இதுக்குதான் ரொம்ப நாளா காத்துகிட்டு இருக்கோம்

எம்ஜி அஸ்டர் கார் அறிமுகம் செய்யப்படும் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதனை இந்த செய்தியில் பார்க்கலாம்.

எம்ஜி நிறுவனம் அதிரடி... வரும் 15ம் தேதி தரமான சம்பவம் இருக்கு! இதுக்குதான் ரொம்ப நாளா காத்துகிட்டு இருக்கோம்

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள எம்ஜி அஸ்டர் வரும் செப்டம்பர் 15ம் தேதி பொது பார்வைக்கு கொண்டு வரப்படவுள்ளது. இது எஸ்யூவி ரக கார் ஆகும். இந்திய சந்தையில் எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் லைன்-அப்பில் ஹெக்டர் எஸ்யூவி காருக்கு கீழாக அஸ்டர் நிலைநிறுத்தப்படவுள்ளது.

எம்ஜி நிறுவனம் அதிரடி... வரும் 15ம் தேதி தரமான சம்பவம் இருக்கு! இதுக்குதான் ரொம்ப நாளா காத்துகிட்டு இருக்கோம்

அதே சமயம் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ் மற்றும் ஸ்கோடா குஷாக் உள்ளிட்ட கார்களுடன் எம்ஜி அஸ்டர் எஸ்யூவி போட்டியிடும். அஸ்டர் எஸ்யூவி காரில், எம்ஜி மோட்டார் நிறுவனம் பல்வேறு அதிநவீன வசதிகளை வழங்கியுள்ளது. எனவேதான் இந்த காருக்காக வாடிக்கையாளர்கள் பலர் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர்.

எம்ஜி நிறுவனம் அதிரடி... வரும் 15ம் தேதி தரமான சம்பவம் இருக்கு! இதுக்குதான் ரொம்ப நாளா காத்துகிட்டு இருக்கோம்

இந்திய சந்தையில் எம்ஜி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள 4வது தயாரிப்பு இதுவாகும். இதற்கு முன்பாக ஹெக்டர் மற்றும் ஹெக்டர் ப்ளஸ், இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி, க்ளோஸ்ட்டர் ஆகிய கார்களை எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த வரிசையில் அடுத்தபடியாக எம்ஜி அஸ்டர் விற்பனைக்கு வருகிறது.

எம்ஜி நிறுவனம் அதிரடி... வரும் 15ம் தேதி தரமான சம்பவம் இருக்கு! இதுக்குதான் ரொம்ப நாளா காத்துகிட்டு இருக்கோம்

வரும் செப்டம்பர் 15ம் தேதி வெளியிடப்படும் நிலையில், விலை தவிர்த்து விட்டு மற்ற அனைத்து தகவல்களும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து கூடிய விரைவில் எம்ஜி அஸ்டர் எஸ்யூவி கார் இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

எம்ஜி நிறுவனம் அதிரடி... வரும் 15ம் தேதி தரமான சம்பவம் இருக்கு! இதுக்குதான் ரொம்ப நாளா காத்துகிட்டு இருக்கோம்

இந்தியாவில் எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் எஸ்யூவி சந்தையை அஸ்டர் மேலும் வலிமையாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எம்ஜி அஸ்டர் எஸ்யூவி காரின் இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் பற்றிய தகவல்கள் எதுவும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனினும் டீலர்ஷிப்கள் மட்டத்தில் இருந்து, இது தொடர்பாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எம்ஜி நிறுவனம் அதிரடி... வரும் 15ம் தேதி தரமான சம்பவம் இருக்கு! இதுக்குதான் ரொம்ப நாளா காத்துகிட்டு இருக்கோம்

இதன்படி அஸ்டர் எஸ்யூவி காரில் டீசல் இன்ஜின் தேர்வு இருக்காது என கூறப்படுகிறது. அதற்கு மாறாக எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் பெட்ரோல் இன்ஜின்களையே அதிகம் நம்பியுள்ளது. அஸ்டர் எஸ்யூவி காரில், எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் மொத்தம் இரண்டு பெட்ரோல் இன்ஜின் தேர்வுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கவுள்ளது.

எம்ஜி நிறுவனம் அதிரடி... வரும் 15ம் தேதி தரமான சம்பவம் இருக்கு! இதுக்குதான் ரொம்ப நாளா காத்துகிட்டு இருக்கோம்

இதில், 1.3 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் ஒன்றாகும். இதுதவிர 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் தேர்வும் எம்ஜி அஸ்டர் எஸ்யூவி காரில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிகிறது. இதில், 1.3 லிட்டர் இன்ஜின் அதிகபட்சமாக 163 ஹெச்பி பவரையும், 230 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

எம்ஜி நிறுவனம் அதிரடி... வரும் 15ம் தேதி தரமான சம்பவம் இருக்கு! இதுக்குதான் ரொம்ப நாளா காத்துகிட்டு இருக்கோம்

இந்த இன்ஜின் உடன் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் 1.5 லிட்டர் அதிகபட்சமாக 120 ஹெச்பி பவரையும், 150 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜின் உடன் மேனுவல் மற்றும் சிவிடி கியர் பாக்ஸை தேர்வுகளை வாடிக்கையாளர்கள் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

எம்ஜி நிறுவனம் அதிரடி... வரும் 15ம் தேதி தரமான சம்பவம் இருக்கு! இதுக்குதான் ரொம்ப நாளா காத்துகிட்டு இருக்கோம்

எம்ஜி அஸ்டர் எஸ்யூவி காரின் இன்ஜின், கியர் பாக்ஸ் மற்றும் வசதிகள் குறித்த அனைத்து அதிகரப்பூர்வமான தகவல்களும் வரும் செப்டம்பர் 15ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இதற்கிடையே எம்ஜி மோட்டார் நிறுவனம் வழக்கமான ஐசி இன்ஜின் கார்கள் மட்டுமின்றி, எலெக்ட்ரிக் வாகனங்களை அதிகளவில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கும் திட்டமிட்டுள்ளது.

எம்ஜி நிறுவனம் அதிரடி... வரும் 15ம் தேதி தரமான சம்பவம் இருக்கு! இதுக்குதான் ரொம்ப நாளா காத்துகிட்டு இருக்கோம்

தற்போதைய நிலையில் எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் விற்பனை செய்யும் ஒரே ஒரு எலெக்ட்ரிக் கார் என்றால், அது இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவிதான். ஆனால் விற்பனையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு அடுத்தபடியாகதான் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி இருக்கிறது.

எம்ஜி நிறுவனம் அதிரடி... வரும் 15ம் தேதி தரமான சம்பவம் இருக்கு! இதுக்குதான் ரொம்ப நாளா காத்துகிட்டு இருக்கோம்

இதற்கு எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் அதிகப்படியான விலையே காரணம். எனவே இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் விலை குறைவான புதிய வேரியண்ட்டை அறிமுகம் செய்வதற்கு எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய வேரியண்ட்டில் சிறிய பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும்.

Most Read Articles

English summary
Mg astor suv official unveil date
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X