தீவிர சோதனை ஓட்டத்தில் எம்ஜியின் அடுத்த எஸ்யூவி கார்!! அப்கிரேட்கள் கொண்டுவரப்படுமா?

எம்ஜி அஸ்டோர் என்ற பெயரில் வெளிவரவுள்ள இசட்எக்ஸ் பெட்ரோல் கார் மீண்டும் இந்தியாவில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக கிடைத்துள்ள ஸ்பை படங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

தீவிர சோதனை ஓட்டத்தில் எம்ஜியின் அடுத்த எஸ்யூவி கார்!! அப்கிரேட்கள் கொண்டுவரப்படுமா?

இசட்எஸ் வரிசையில் எலக்ட்ரிக் கார் ஒன்றை எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து கொண்டிருக்கிறது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதினால் இந்த நிறுவனம் தைரியமாக இசட்எஸ் பெட்ரோல் காரை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.

தீவிர சோதனை ஓட்டத்தில் எம்ஜியின் அடுத்த எஸ்யூவி கார்!! அப்கிரேட்கள் கொண்டுவரப்படுமா?

எம்ஜி பிராண்டில் இருந்து மலிவான காராக கொண்டுவரப்படவுள்ள இந்த எஸ்யூவி, அஸ்டோர் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதற்கிடையில் இந்த கார் சமீப காலமாக தொடர் சோதனை ஓட்டங்களில் உட்படுத்தப்பட்டு வருகிறது.

தீவிர சோதனை ஓட்டத்தில் எம்ஜியின் அடுத்த எஸ்யூவி கார்!! அப்கிரேட்கள் கொண்டுவரப்படுமா?

இந்த வகையில் தற்போது ரஷ்லேன் செய்திதளத்தின் மூலமாக அடையாளம் காணப்பட்டுள்ள சோதனை இசட்எஸ் பெட்ரோல் கார் முழுவதும் மறைப்பால் மறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் காரின் உட்புறத்தை இந்த ஸ்பை படங்களில் பார்க்க முடிகிறது.

தீவிர சோதனை ஓட்டத்தில் எம்ஜியின் அடுத்த எஸ்யூவி கார்!! அப்கிரேட்கள் கொண்டுவரப்படுமா?

வெளிநாட்டு சந்தைகளில் விற்பனை செய்யப்படும் இசட்எஸ் பெட்ரோல் காரை போல் இந்திய அஸ்டோரிலும் 10.1 இன்ச்சில் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இது ஆப்பிள் கார்ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, 360-கோண கேமிரா, நாவிகேஷன் உள்ளிட்டவற்றை கொண்டதாக இருக்கும்.

தீவிர சோதனை ஓட்டத்தில் எம்ஜியின் அடுத்த எஸ்யூவி கார்!! அப்கிரேட்கள் கொண்டுவரப்படுமா?

இன்ஸ்ட்ரூமெண்ட் பேனல் ஆனது ஓட்டுனருக்கு தேவையான விபரங்களை வழங்கக்கூடிய வண்ண திரையுடன் உள்ளது. டாப் வேரியண்ட்களில் முழு-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்படலாம்.

தீவிர சோதனை ஓட்டத்தில் எம்ஜியின் அடுத்த எஸ்யூவி கார்!! அப்கிரேட்கள் கொண்டுவரப்படுமா?

காரின் கேபின் முழுவதும் கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மைய கன்சோல் கருப்பு நிறத்தில் கூடுதலாக பளபளக்கிறது. சர்வதேச சந்தைகளில் இசட்எஸ் காருக்கு சமீபத்தில் தான் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடை எம்ஜி நிறுவனம் வழங்கி இருந்தது.

தீவிர சோதனை ஓட்டத்தில் எம்ஜியின் அடுத்த எஸ்யூவி கார்!! அப்கிரேட்கள் கொண்டுவரப்படுமா?

ஆனால் இந்தியாவில் ஆரம்பத்தில் இருந்தே சோதனை செய்யப்பட்டு வரும் கார் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடை பெறாதது ஆகும். இந்தியாவில் இசட்எஸ் ஃபேஸ்லிஃப்ட் காரை எம்ஜி நிறுவனம் அறிமுகப்படுத்துமா என்பது உறுதியாக தெரியவில்லை.

தீவிர சோதனை ஓட்டத்தில் எம்ஜியின் அடுத்த எஸ்யூவி கார்!! அப்கிரேட்கள் கொண்டுவரப்படுமா?

ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடினால் காரின் முன் முகப்பு பகுதி திருத்தியமைக்கப்பட்ட வடிவிலான எல்இடி ஹெட்லேம்ப்கள் மற்றும் ரேடியேட்டர் க்ரில், மறு உருவம் பெற்ற பம்பர்கள் உள்ளிட்டவற்றுடன் பின்பக்கத்தில் புதிய டெயில்லைட்டையும் பெற்றுள்ளது.

தீவிர சோதனை ஓட்டத்தில் எம்ஜியின் அடுத்த எஸ்யூவி கார்!! அப்கிரேட்கள் கொண்டுவரப்படுமா?

சர்வதேச சந்தைகளில் 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் (5 மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் உடன்) மற்றும் 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு (6 மேனுவல் அல்லது 6 ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் உடன்) என்ற இரு விதமான என்ஜின் தேர்வுகளுடன் இசட்எஸ் பெட்ரோல் மாடல் விற்பனை செய்யப்படுகிறது.

தீவிர சோதனை ஓட்டத்தில் எம்ஜியின் அடுத்த எஸ்யூவி கார்!! அப்கிரேட்கள் கொண்டுவரப்படுமா?

சில நாட்டு சந்தைகளில் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் தேர்விலும் இந்த எம்ஜி கார் கிடைக்கிறது. ஆனால் இந்த டர்போ என்ஜின் இந்தியாவிற்கு கொண்டுவரப்படாது என்றே கூறப்படுகிறது. மற்ற போட்டி கார்களுக்கு தொழிற்நுட்ப அம்சங்களில் எம்ஜி அஸ்டோர் எஸ்யூவி கார் சரியான போட்டி மாடலாக விளங்கும் என்பது உறுதி.

Most Read Articles
English summary
MG Astor SUV (ZS Petrol) Interior Spied – Gets Digital Instrument Console.
Story first published: Saturday, May 1, 2021, 2:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X