எம்ஜி அஸ்டர் எஸ்யூவி காரின் இந்திய அறிமுக தேதி அறிவிப்பு!! இதுக்கு தான் ரொம்ப நாளா எதிர்பார்த்திருந்தோம்!

எம்ஜி அஸ்டர் எஸ்யூவி காரின் இந்திய அறிமுகம் குறித்த லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

எம்ஜி அஸ்டர் எஸ்யூவி காரின் இந்திய அறிமுக தேதி அறிவிப்பு!! இதுக்கு தான் ரொம்ப நாளா எதிர்பார்த்திருந்தோம்!

எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் அதன் புதிய எஸ்யூவி காராக அஸ்டரை வருகிற அக்டோபர் 11ஆம் தேதி, மதியம் 12 மணியளவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ் போன்ற அதிகளவில் விற்பனையாகும் எஸ்யூவி கார்களுக்கு போட்டியாக கொண்டுவரப்படும் எம்ஜி அஸ்டரின் விலை மற்றும் வேரியண்ட்கள் குறித்த விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

எம்ஜி அஸ்டர் எஸ்யூவி காரின் இந்திய அறிமுக தேதி அறிவிப்பு!! இதுக்கு தான் ரொம்ப நாளா எதிர்பார்த்திருந்தோம்!

இவை அனைத்தும் வருகிற 10ஆம் தேதி காரின் அறிமுகத்தின்போது வெளியிடப்பட உள்ளன. எம்ஜியின் இந்த புதிய எஸ்யூவி காரின் எங்களது ஃபர்ஸ்ட் லுக் விமர்சனத்தை ஏற்கனவே நமது தளத்தில் பதிவிட்டுள்ளோம். முன்பக்கத்தில் இந்த புதிய எம்ஜி கார் டங்க்ஸ்டன் இரும்பில், மின்முனை ஃபினிஷிங்கில், ஆரம் பேட்டர்னில் மிகவும் ஸ்டைலிஷாக க்ரில் அமைப்பை பெற்றுள்ளது.

எம்ஜி அஸ்டர் எஸ்யூவி காரின் இந்திய அறிமுக தேதி அறிவிப்பு!! இதுக்கு தான் ரொம்ப நாளா எதிர்பார்த்திருந்தோம்!

பின்பக்கத்தை காட்டும் பக்கவாட்டு கண்ணாடிகள் ஹீட்டட் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் எஸ்யூவி கார்கள் பிரிவில் முதல்முறையாக கொண்டுவரப்படும் இந்த வசதிக்கு ஏற்ப ப்ளூடூத் இணைப்புடன் புதிய டிஜிட்டல் சாவி அஸ்டரில் கொடுக்கப்பட உள்ளது. உட்புறத்தில் முன் இருக்கைகள் அட்ஜெஸ்ட் செய்யக்கூடியவைகளாக வழங்கப்பட உள்ளன.

எம்ஜி அஸ்டர் எஸ்யூவி காரின் இந்திய அறிமுக தேதி அறிவிப்பு!! இதுக்கு தான் ரொம்ப நாளா எதிர்பார்த்திருந்தோம்!

இவற்றுடன் தானியங்கி-க்ளைமேட் கண்ட்ரோல், 360-கோண கேமிரா, எம்ஜி தயாரிக்கும் காற்று சுத்திகரிப்பான் மற்றும் 90 சதவீத மேற்கூரையை கவர் செய்யும் பிரம்மாண்ட பனோராமிக் சன்ரூஃப் போன்றவையும் அஸ்டர் எஸ்யூவி காரில் வழங்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது. ஆனால் இவை ஸ்டாண்டர்ட் வசதிகளா வழங்கப்படுமா அல்லது கூடுதல் ஆக்ஸஸரீகளாக வழங்கப்படுமா என்பது தெரியவில்லை.

எம்ஜி அஸ்டர் எஸ்யூவி காரின் இந்திய அறிமுக தேதி அறிவிப்பு!! இதுக்கு தான் ரொம்ப நாளா எதிர்பார்த்திருந்தோம்!

அதிநவீன ஓட்டுனர் உதவி அமைப்புகளுடன் (ADAS) முதல் எம்ஜி மாடலாக அஸ்டரில் நிலை-2 தானியங்கி தொழிற்நுட்பமும் வழங்கப்பட உள்ளது. இதில் ADAS அமைப்பின் வாயிலாக தானியங்கி அவசரகால ப்ரேக், ஒரே பாதையை தொடர உதவி, ரிவர்ஸில் வருவதற்கான ஓட்டுனர் உதவி, ரிவர்ஸில் வரும்போது பின்பக்கத்தில் ஏதாவது வாகனம் குறுக்காக வருகிறதா என்பதை எச்சரிக்கும் வசதி மற்றும் ஓட்டுனரால் பார்க்க முடியாத பகுதியினை காணும் வசதி உள்ளிட்டவற்றை பெறலாம்.

எம்ஜி அஸ்டர் எஸ்யூவி காரின் இந்திய அறிமுக தேதி அறிவிப்பு!! இதுக்கு தான் ரொம்ப நாளா எதிர்பார்த்திருந்தோம்!

அஸ்டரின் உட்புற கேபின் கிட்டத்தட்ட விற்பனையில் இருக்கும் எம்ஜி இசட்.எஸ் எலக்ட்ரிக் காரை ஒத்திருக்கும். இசட்.எஸ் இவி-யின் பெட்ரோல் வெர்சன் தான் அஸ்டர் என்பது இங்கு நினைவுக்கூரத்தக்கது. இந்த வகையில் ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு வசதி கொண்ட 10.1 இன்ஃபோடெயின்மெண்ட் திரை மற்றும் 7.0 இன்ச் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் அஸ்டரிலும் வழங்கப்பட உள்ளன.

எம்ஜி அஸ்டர் எஸ்யூவி காரின் இந்திய அறிமுக தேதி அறிவிப்பு!! இதுக்கு தான் ரொம்ப நாளா எதிர்பார்த்திருந்தோம்!

இத்துடன் தனிப்பயனாக்க செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) உதவிகளையும் எம்ஜி அஸ்டர் பெற்றுவரவுள்ளது. 35 விதமான ஹிங்க்லிஷ் (Hinglish) குரல் கட்டளைகளை ஏற்கக்கூடிய இந்த அதிநவீன தொழிற்நுட்பமானது பயணிகளின் மொழியினை மனிதர்களை போல் புரிந்து கொள்ளக்கூடியது. மேலும் இந்த அமைப்பு 80 புதிய இணைய வசதிகளை வழங்கக்கூடியது.

எம்ஜி அஸ்டர் எஸ்யூவி காரின் இந்திய அறிமுக தேதி அறிவிப்பு!! இதுக்கு தான் ரொம்ப நாளா எதிர்பார்த்திருந்தோம்!

இந்த 80 இணைய வசதிகளில் விக்கிபீடியா, நகைச்சுவைகள், செய்திகள், GIFS, நாவிகேஷன், ஆன்லைன் இசை ஸ்ட்ரீமிங் மற்றும் இன்-கார் கண்ட்ரோல் போன்ற வசதிகளை பெறலாம். அஸ்டரை இரு விதமான பெட்ரோல் என்ஜின் தேர்வுகளுடன் எம்ஜி மோட்டார் வழங்கவுள்ளது. இதில் ஒன்றான 1.4 லிட்டர், 4-சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 138 பிஎச்பி மற்றும் 220 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது.

எம்ஜி அஸ்டர் எஸ்யூவி காரின் இந்திய அறிமுக தேதி அறிவிப்பு!! இதுக்கு தான் ரொம்ப நாளா எதிர்பார்த்திருந்தோம்!

இதனுடன் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் இணைக்கப்பட உள்ளது. மற்றொரு என்ஜின் தேர்வான 1.5 லிட்டர், 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் மூலம் 108 பிஎச்பி மற்றும் 144 என்எம் டார்க் திறன் வரையில் பெற முடியும். இதனுடன் மேனுவல் மற்றும் 8-ஸ்பீடு சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்பட உள்ளன.

எம்ஜி அஸ்டர் எஸ்யூவி காரின் இந்திய அறிமுக தேதி அறிவிப்பு!! இதுக்கு தான் ரொம்ப நாளா எதிர்பார்த்திருந்தோம்!

வரவிருக்கும் பண்டிகை காலத்தை முன்னிட்டு அஸ்டரை எம்ஜி மோட்டார் களமிறக்குவது நமக்கு தெரிந்த விஷயம் தான். ஏற்கனவே கூறியதுதான், எம்ஜி அஸ்டருக்கு விற்பனையில் கியா செல்டோஸ், ஹூண்டாய் க்ரெட்டா உள்பட ஸ்கோடா குஷாக், ரெனால்ட் டஸ்டர் மற்றும் நிஸான் கிக்ஸ் போன்ற மற்ற எஸ்யூவி கார்களும் போட்டியாக விளங்கவுள்ளன.

Most Read Articles

English summary
MG Astor price will announce on October 11.
Story first published: Thursday, October 7, 2021, 23:57 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X