என்ன சொல்றீங்க Hector எஸ்யூவி-யிலும் மினி ரோபோ வசதியா?.. நாம சொல்றதை எல்லாம் கேட்கும்!!

MG நிறுவனம் அதன் Hector எஸ்யூவி காரிலும் மினி ரோபோ வசதியை வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் உண்மைதானா என்பதுகுறித்த முழுமையான தகவலை விரிவாக பார்க்கலாம், வாங்க.

என்ன சொல்றீங்க Hector எஸ்யூவி-யிலும் மினி ரோபோ வசதியா?.. நாம சொல்றதை எல்லாம் கேட்கும்!!

MG நிறுவனம் மிக சமீபத்தில் அதன் Astor காரை இந்தியாவில் வெளியீடு செய்தது. குட்டி ரோபோட் எனும் கூறுமளவிற்கு மிக அதிக தொழில்நுட்ப வசதியுடன் இக்காரை நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது. நாட்டில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி ரக கார் மாடல்களில் ஒன்றான Hyundai Creta-விற்கு போட்டியாக Astor விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது.

என்ன சொல்றீங்க Hector எஸ்யூவி-யிலும் மினி ரோபோ வசதியா?.. நாம சொல்றதை எல்லாம் கேட்கும்!!

எதிர்பார்க்கும்படி மிகக் கடுமையான போட்டியை Astor, Creta-விற்கு வழங்கும் என கூறப்படுகின்றது. ஏனெனில் இக்காரில் செயற்கை நுண்ணறிவு கொண்ட தானியங்கி தொழில்நுட்ப வசதிகள் இடம் பெற இருக்கின்றன. இதுவே Astor காரில் இடம் பெற இருக்கும் மிக சிறந்த வசதியும் கூட. இதன் காரணத்தினாலேயே பலரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இக்காரின் வெளியீடு அமைந்துள்ளது.

என்ன சொல்றீங்க Hector எஸ்யூவி-யிலும் மினி ரோபோ வசதியா?.. நாம சொல்றதை எல்லாம் கேட்கும்!!

இந்த நிலையில், Astor காரில் இடம் பெற இருக்கும் அதே பிரம்மிக்க வைக்கும் தொழில்நுட்ப வசதிகளை MG நிறுவனம் அதன் மற்றுமொரு தயாரிப்பிலும் வழங்க இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளன. Hector எஸ்யூவி காரிலேயே புதிய தொழில்நுட்ப அம்சங்கள் வழங்கப்பட இருக்கின்றன.

என்ன சொல்றீங்க Hector எஸ்யூவி-யிலும் மினி ரோபோ வசதியா?.. நாம சொல்றதை எல்லாம் கேட்கும்!!

அதாவது, அடாஸ் (ADAS) தொழில்நுட்பம் என்றழைக்கப்படும் ரோபோ மாதிரியான டிவைஸ், நடுநிலை தானியங்கி டிரைவர் அசிஸ்ட் மற்றும் இன்னும் பல சிறப்பு அம்சங்கள் Hector எஸ்யூவியில் விரைவில் இடம் பெற இருப்பதாகக் கூறப்படுகின்றது. தற்போது, MG நிறுவனம் Gloster எஸ்யூவி காரிலேயே அடாஸ் மற்றும் நிலை 1 தன்னாட்சி வசதியை வழங்கி வருகின்றது.

என்ன சொல்றீங்க Hector எஸ்யூவி-யிலும் மினி ரோபோ வசதியா?.. நாம சொல்றதை எல்லாம் கேட்கும்!!

இந்தியாவில் இதுபோன்ற தானியங்கி வசதியுடன் விற்பனைக்குக் கிடைக்கும் முதல் காரும் இதுவே ஆகும். இந்த நிலையிலேயே தனது மற்றுமொரு தயாரிப்பிலும் மேலே பார்த்த சிறப்பு தொழில்நுட்ப வசதிகளை வழங்க MG திட்டமிட்டுள்ளது. ஆனால், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வமான தகவலையும் நிறுவனம் வெளியிடவில்லை.

என்ன சொல்றீங்க Hector எஸ்யூவி-யிலும் மினி ரோபோ வசதியா?.. நாம சொல்றதை எல்லாம் கேட்கும்!!

மிக விரைவில் இதுகுறித்த தகவலை நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது இந்தோனேசியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் Hector எஸ்யூவி காரில் அடாஸ், அடாப்டீவ் க்ரூஸ் கன்ட்ரோல், லேன் டிபார்ட்சர் வார்னிங், தானியங்கி பிரேக்கிங் வசதி, 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா என பல்வேறு சிறப்பு பாதுகாப்பு வசதிகளை வழங்க இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

என்ன சொல்றீங்க Hector எஸ்யூவி-யிலும் மினி ரோபோ வசதியா?.. நாம சொல்றதை எல்லாம் கேட்கும்!!

ஆகையால், மிக விரைவில் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் Hector எஸ்யூவிலும் MG மேலே பார்த்த சிறப்பு வசதிகளை வழங்கலாம் யூகிக்கப்படுகின்றது. அதேசமயம், இந்த வசதிகள் Hector எஸ்யூவியில் வழங்கப்படுமானால் அது அதன் உயர்நிலை மாடலிலேயே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

என்ன சொல்றீங்க Hector எஸ்யூவி-யிலும் மினி ரோபோ வசதியா?.. நாம சொல்றதை எல்லாம் கேட்கும்!!

MG நிறுவனத்தின் இந்த தொழில்நுட்பம் ஓர் மிக சிறந்த உதவியாளரைப் போல் செயல்படும். அதாவது, ஓட்டுநருக்கு தேவையான அனைத்து தகவலையும் அது நொடி பொழுதில் வழங்கும். அதுமட்டுமின்றி காரில் ஏதேனும் கோளாறு அல்லது சிக்கல் ஏற்பட்டால் அதுகுறித்த தகவலை அது உடனுக்குடன் நமக்கு வழங்கும். தொடர்ந்து, சில அம்சங்களை பயன்படுத்தவும் அது உதவும்.

என்ன சொல்றீங்க Hector எஸ்யூவி-யிலும் மினி ரோபோ வசதியா?.. நாம சொல்றதை எல்லாம் கேட்கும்!!

அதாவது செய்திகளை வாசித்தல், இசையை ஒலிக்க செய்தல், நண்பர்களுடன் உரையாட, ஜோக்குகளை சொல்ல, செல்லும் இடத்திற்கான பாதை காட்ட என பல்வேறு வழிகளில் உதவும். இதுமட்டுமின்றி கார் ஜன்னலை மூடுவது, சன்ரூஃபை இயக்குவது என்பதை குரல் கட்டளையால் மேற்கொள்ள முடியும்.

என்ன சொல்றீங்க Hector எஸ்யூவி-யிலும் மினி ரோபோ வசதியா?.. நாம சொல்றதை எல்லாம் கேட்கும்!!

இதுமாதிரியான வியக்க வைக்கும் தொழில்நுட்ப வசதியை Astor கொண்டிருக்கின்ற காரணத்தினால்தான் இந்தியாவில் பலரின் கவனத்தை ஈர்த்திருக்கின்றது. ஆகையால், தற்போது வதந்தியாக Hector எஸ்யூவி காரிலும் மினி ரோபோ வசதி இடம் பெற இருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் உண்மையானால், அது இந்தியர்கள் மத்தியில் மிக அமோகமான டிமாண்டைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

என்ன சொல்றீங்க Hector எஸ்யூவி-யிலும் மினி ரோபோ வசதியா?.. நாம சொல்றதை எல்லாம் கேட்கும்!!

Hector எஸ்யூவி காரில் தற்போது இரு விதமான எஞ்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. 1.5 லிட்டர் பெட்ரோல், ஹைிபிரிட் மற்றும் ஹைபிரிட் அல்லாததாகவும், 2.0 லிட்டர் டீசல் என இவ்விரு மோட்டார் தேர்விலேயே Hector விற்பனைக்குக் கிடைக்கிறது. இதில், 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜினானது 143 பிஎஸ் பவரை வெளியேற்றும் திறன் கொண்டது.

என்ன சொல்றீங்க Hector எஸ்யூவி-யிலும் மினி ரோபோ வசதியா?.. நாம சொல்றதை எல்லாம் கேட்கும்!!

இதேபோன்று, 1.5 லிட்டரில் டீசல் மோட்டார் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கும் Hector அதிகபட்சமாக 170 பிஎஸ் வரை வெளியேற்றும். இரு மோட்டார்களிலும் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழக்கமான கியர்பாக்ஸ் தேர்வாக வழங்கப்படுகின்றது. அதேசமயம், பெட்ரோல் எஞ்ஜினுக்கு மட்டும் 7 ஸ்பீடு டிசிடி மற்றும் சிவிடி ஆகியவை கூடுதல் தேர்வாக வழங்கப்படுகின்றது.

என்ன சொல்றீங்க Hector எஸ்யூவி-யிலும் மினி ரோபோ வசதியா?.. நாம சொல்றதை எல்லாம் கேட்கும்!!

MG Hector எஸ்யூவி கார் இந்தியாவில் ரூ. 13.49 தொடங்கி ரூ. 19.20 வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலையாகும். இந்த கார் தற்போது இந்திய சந்தையில் Jeep Compass, Tata Harrier, Mahindra XUV500, விரைவில் அறிமுமாக இருக்கும் Mahindra XUV700, Hyundai Tucson, உயர்நிலை தேர்வுகளான Hyundai Creta மற்றும் Kia Seltos ஆகிய கார்களுக்கு போட்டியாக விற்பனையில் இருக்கின்றது.

Most Read Articles

English summary
Mg could offer adas and ai in hector suv
Story first published: Tuesday, August 24, 2021, 6:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X