பாராலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற பவீனாவிற்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்... என்னனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

பாராலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற இந்தியாவின் பவீனாவிற்கு சர்ப்ரைஸ் ஒன்று காத்திருக்கிறது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பாராலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற பவீனாவிற்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்... என்னனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்கில் இந்தியாவிற்கு வெள்ளி பதக்கம் வென்று கொடுத்த பவீனாவை (Bhavina), கார் பரிசளிப்பதன் மூலம் கெரளவிக்க விரும்புவதாக எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை ராஜீவ் சாபா (Rajeev Chaba) வெளியிட்டுள்ளார்.

பாராலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற பவீனாவிற்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்... என்னனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

இவர் எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆவார். தற்போது டோக்கியோ நகரில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் விளையாட்டு திருவிழாவின், டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில், சீனாவின் ஸோ யிங்கிடம் (Zhou Ying), இந்தியாவின் பவீனா தோல்விடையந்தார்.

பாராலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற பவீனாவிற்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்... என்னனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

இறுதி போட்டியில் தோல்வியடைந்தாலும், அவருக்கு வெள்ளி பதக்கம் கிடைத்தது. அவரது இந்த வெற்றியை நாடே கொண்டாடி வருகிறது. பொதுமக்கள், அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் தொழிலதிபர்கள் உள்பட பலரும், வெள்ளி பதக்கம் வென்ற பவீனாவிற்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

பாராலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற பவீனாவிற்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்... என்னனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

அத்துடன் அவருக்கு பரிசுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில்தான் எம்ஜி மோட்டார் நிறுவனம் தற்போது அவருக்கு கார் பரிசளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. ஆனால் பவீனாவிற்கு என்ன கார் பரிசாக வழங்கப்படும்? என்பதை எம்ஜி மோட்டார் நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

பாராலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற பவீனாவிற்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்... என்னனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

இந்திய சந்தையில் புதிய கார் ஒன்றை எம்ஜி மோட்டார் நிறுவனம் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. அஸ்டர்தான் (Astor) அந்த புதிய கார். இது எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். எம்ஜி அஸ்டர் எஸ்யூவி வெகு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து விரைவில் விற்பனைக்கும் கொண்டு வரப்படவுள்ளது.

பாராலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற பவீனாவிற்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்... என்னனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

அனேகமாக பண்டிகை காலத்திற்கு முன்னதாக எம்ஜி அஸ்டர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த எஸ்யூவி காரில், எம்ஜி மோட்டார் நிறுவனம் பல்வேறு அதிநவீன வசதிகளை வழங்கவுள்ளது. எனவே எம்ஜி அஸ்டர் எஸ்யூவி இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாராலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற பவீனாவிற்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்... என்னனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் ஏற்கனவே ஹெக்டர், ஹெக்டர் ப்ளஸ், இஸட்எஸ் எலெக்ட்ரிக் மற்றும் க்ளோஸ்ட்டர் உள்ளிட்ட கார்களை விற்பனை செய்து வருகிறது. இவை அனைத்துமே எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார்கள்தான். இந்த வரிசையில் எம்ஜி மோட்டார் நிறுவனம் அடுத்ததாக விற்பனைக்கு கொண்டு வரவுள்ள அஸ்டரும், எஸ்யூவி ரக கார்தான்.

பாராலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற பவீனாவிற்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்... என்னனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

இந்திய சந்தையில் எஸ்யூவி கார்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், அதனை குறி வைத்து தொடர்ச்சியாக எஸ்யூவி கார்களை எம்ஜி மோட்டார் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகிறது. எம்ஜி அஸ்டர் எஸ்யூவி கார் குறித்த ஒரு சில தகவல்கள் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக தெரியவந்துள்ளது. இந்த காரில், AI (Artificial Intelligence) தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது.

பாராலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற பவீனாவிற்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்... என்னனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

எம்ஜி அஸ்டர் எஸ்யூவி இந்திய சந்தையில், அடுத்த ஒரு சில வாரங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹூண்டாய் கிரெட்டா மற்றும் கியா செல்டோஸ் எஸ்யூவி கார்களுக்கு, எம்ஜி அஸ்டர் எஸ்யூவி மிகப்பெரிய போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாராலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற பவீனாவிற்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்... என்னனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

அனேகமாக எம்ஜி மோட்டார் நிறுவனம் அஸ்டர் எஸ்யூவியை, பவீனாவிற்கு பரிசாக வழங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதன் மூலம் எம்ஜி அஸ்டர் எஸ்யூவி வாடிக்கையாளர்கள் மத்தியில் நன்கு பிரபலமடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் தற்போது வெளியாகவில்லை.

பாராலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற பவீனாவிற்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்... என்னனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

முன்னதாக இதே டோக்கியோ நகரில் சமீபத்தில் நிறைவடைந்த ஒலிம்பிக் போட்டிகளிலும் இந்திய வீரர், வீராங்கனைகள் பலர் பல்வேறு பதக்கங்களை வென்றனர். அவர்களுக்கு ரெனால்ட் நிறுவனம் கைகர் (Renault Kiger) சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்களை பரிசாக வழங்கியது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

பாராலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற பவீனாவிற்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்... என்னனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

அதேபோல் மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் தங்க பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவிற்கு, புதிய எக்ஸ்யூவி700 காரை பரிசாக அறிவித்துள்ளார். அனேகமாக முதல் மஹிந்திரா எஸ்யூவி700 கார், இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ராவிற்கு பரிசாக வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

Most Read Articles

English summary
Mg india to honour paralympics silver medalist bhavina here are all the details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X