எம்ஜி ஹெக்டரின் சில ட்ரிம்களின் விலைகள் மீண்டும் உயர்த்தப்பட்டன!! எந்தெந்த ட்ரிம்கள் என்று தெரிஞ்சிக்கோங்க...

எம்ஜி ஹெக்டரின் சில ட்ரிம்களின் விலைகள் ரூ.10,000 உயர்த்தப்பட்டுள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

எம்ஜி ஹெக்டரின் சில ட்ரிம்களின் விலைகள் மீண்டும் உயர்த்தப்பட்டன!! எந்தெந்த ட்ரிம்கள் என்று தெரிஞ்சிக்கோங்க...

மோரீஸ் கேரேஜ் (எம்ஜி) நிறுவனம் ஹெக்டர் எஸ்யூவி காரின் புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்சனை கடந்த ஜனவரி மாதத்தில் அறிமுகப்படுத்தியது.

எம்ஜி ஹெக்டரின் சில ட்ரிம்களின் விலைகள் மீண்டும் உயர்த்தப்பட்டன!! எந்தெந்த ட்ரிம்கள் என்று தெரிஞ்சிக்கோங்க...

இந்த அப்கிரேட்களினால் ஹெக்டரின் முந்தைய எக்ஸ்ஷோரூம் விலைகள் ரூ.44,000 வரையில் அதிகரிக்கப்பட்டன. இதற்கிடையில் தற்போது மீண்டும் சில குறிப்பிட்ட வேரியண்ட்களின் விலை ரூ.10,000 உயர்த்தப்பட்டுள்ளது.

Petrol Old Price New Price Difference
Style ₹12.90 Lakh
Super ₹13.89 Lakh
Smart DCT ₹16.42 Lakh ₹16.52 Lakh ₹10,000
Sharp DCT ₹18.00 Lakh ₹18.10 Lakh ₹10,000
Sharp DCT Dual Tone ₹18.20 Lakh ₹18.30 Lakh ₹10,000
Petrol - Hybrid
Super ₹14.40 Lakh
Smart ₹15.66 Lakh ₹15.76 Lakh ₹10,000
Sharp ₹17.00 Lakh ₹17.10 Lakh ₹10,000
Diesel
Style ₹14.21 Lakh
Super ₹15.31 Lakh
Smart ₹16.92 Lakh ₹17.02 Lakh ₹10,000
Sharp ₹18.33 Lakh ₹18.43 Lakh ₹10,000
Sharp Dual Tone ₹18.53 Lakh ₹18.63 Lakh ₹10,000
எம்ஜி ஹெக்டரின் சில ட்ரிம்களின் விலைகள் மீண்டும் உயர்த்தப்பட்டன!! எந்தெந்த ட்ரிம்கள் என்று தெரிஞ்சிக்கோங்க...

எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் கார் பெட்ரோல், பெட்ரோல்-ஹைப்ரீட், டீசல் என மூன்று விதமான என்ஜின் தேர்வுகளில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் பெட்ரோல் என்ஜின் உடன் வாங்கப்படும் டிசிடி ட்ரிம்கள் மூன்றின் விலைகளும் ரூ.10,000 விலை உயர்த்தப்பட்டுள்ளது.

எம்ஜி ஹெக்டரின் சில ட்ரிம்களின் விலைகள் மீண்டும் உயர்த்தப்பட்டன!! எந்தெந்த ட்ரிம்கள் என்று தெரிஞ்சிக்கோங்க...

ஸ்மார்ட் டிசிடி, ஷார்ப் டிசிடி மற்றும் ஷார்ப் டிசிடி ட்யுல்-டோன் என்ற இந்த மூன்று ட்ரிம்களின் புதிய விலைகள் ரூ.16.52 லட்சம், ரூ.18.10 லட்சம் மற்றும் ரூ.18.30 லட்சமாகும். பெட்ரோல்-ஹைப்ரீடில் சூப்பர் ட்ரிம்-ஐ தவிர்த்து மற்ற இரண்டின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

எம்ஜி ஹெக்டரின் சில ட்ரிம்களின் விலைகள் மீண்டும் உயர்த்தப்பட்டன!! எந்தெந்த ட்ரிம்கள் என்று தெரிஞ்சிக்கோங்க...

டீசல் ட்ரிம்களிலும் விலைமிக்க ட்ரிம்களின் விலைகளை மட்டுமே எம்ஜி நிறுவனம் உயர்த்தியுள்ளது. இந்த சிறிய விலை அதிகரிப்பினால் எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் காரின் ஆரம்ப விலையில் (ரூ.12.90 லட்சம்) மாற்றமில்லை என்றாலும், அதிகப்பட்ச விலை ரூ.18.53 லட்சத்தில் இருந்து ரூ.18.63 லட்சமாக உயர்ந்துள்ளது.

எம்ஜி ஹெக்டரின் சில ட்ரிம்களின் விலைகள் மீண்டும் உயர்த்தப்பட்டன!! எந்தெந்த ட்ரிம்கள் என்று தெரிஞ்சிக்கோங்க...

ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடாக ஹெக்டரில் பெரிய 18 இன்ச் சக்கரங்கள், ஹெக்டர் ப்ளஸின் க்ரோம் பதிக்கப்பட்ட க்ரில், பின்பக்கத்தில் சிவப்பு நிற ஸ்ட்ரிப்பிற்கு பதிலாக பளபளப்பான கருப்பு நிறத்தில் ஸ்ட்ரிப் மற்றும் புதிய கருப்பு நிறத்தில் உட்புற கேபின் என சில காஸ்மெட்டிக் அப்கிரேட்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

எம்ஜி ஹெக்டரின் சில ட்ரிம்களின் விலைகள் மீண்டும் உயர்த்தப்பட்டன!! எந்தெந்த ட்ரிம்கள் என்று தெரிஞ்சிக்கோங்க...

மற்றப்படி 170 பிஎஸ் பவரை வெளிப்படுத்தக்கூடிய 2.0 லிட்டர் டீசல் என்ஜின் மற்றும் 143 பிஎஸ் பவரை வெளிப்படுத்தக்கூடிய 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் தேர்வுகளில் எந்த மாற்றமும் இல்லை. இதில் டர்போ என்ஜின் உடன் தேர்வாக 48 வோல்ட் மைல்ட்-ஹைப்ரீட் சிஸ்டம் வழங்கப்படுகிறது.

Most Read Articles

English summary
Get Ready To Pay More For The Recently Launched MG Hector
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X