டாடா எலெக்ட்ரிக் காருக்கு செக் வைக்க ரெடியாகும் எம்ஜி நிறுவனம்... என்னனு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவீங்க!

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காருக்கு எம்ஜி மோட்டார் நிறுவனம் செக் வைக்கவுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டாடா எலெக்ட்ரிக் காருக்கு செக் வைக்க ரெடியாகும் எம்ஜி நிறுவனம்... என்னனு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவீங்க!

இந்திய சந்தையில் எம்ஜி மோட்டார் நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் 28 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. செமி கண்டக்டர் பற்றாக்குறையால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும், எம்ஜி மோட்டார் நிறுவனம் விற்பனையில் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

டாடா எலெக்ட்ரிக் காருக்கு செக் வைக்க ரெடியாகும் எம்ஜி நிறுவனம்... என்னனு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவீங்க!

எம்ஜி மோட்டார் நிறுவனம் நடப்பாண்டு செப்டம்பர் மாதம் இந்திய சந்தையில் 3,241 கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. ஆனால் கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் எம்ஜி மோட்டார் நிறுவனம் வெறும் 2,537 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இதன் மூலம் விற்பனையில் சிறப்பான வளர்ச்சியை எம்ஜி மோட்டார் நிறுவனம் சந்தித்துள்ளது.

டாடா எலெக்ட்ரிக் காருக்கு செக் வைக்க ரெடியாகும் எம்ஜி நிறுவனம்... என்னனு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவீங்க!

செமி கண்டக்டர் பற்றாக்குறை காரணமாக எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் உற்பத்தி குறைந்துள்ளது. அடுத்த சில மாதங்களுக்கும் இந்த சவால் நீடிக்கும் என எம்ஜி மோட்டார் நிறுவனம் எதிர்பார்க்கிறது. எனினும் அதிக முன்பதிவுகளை கருத்தில் கொண்டு, இந்த பிரச்னையை சரி செய்வதற்கு எம்ஜி மோட்டார் நிறுவனம் முயற்சி செய்து வருகிறது.

டாடா எலெக்ட்ரிக் காருக்கு செக் வைக்க ரெடியாகும் எம்ஜி நிறுவனம்... என்னனு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவீங்க!

இதன் மூலம் உற்பத்தியை அதிகரித்து, காத்திருப்பு காலத்தை குறைப்பதற்கு எம்ஜி மோட்டார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எம்ஜி மோட்டார் நிறுவனம் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த உலகின் ஆட்டோமொபைல் துறையே தற்போது செமி கண்டக்டர் பற்றாக்குறையால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான முன்னணி நிறுவனங்களின் உற்பத்தி இதனால் தடைபட்டுள்ளது.

டாடா எலெக்ட்ரிக் காருக்கு செக் வைக்க ரெடியாகும் எம்ஜி நிறுவனம்... என்னனு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவீங்க!

இந்த பிரச்னைக்கு மத்தியிலும் அஸ்டர் காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு எம்ஜி மோட்டார் நிறுவனம் தற்போது வேகமாக தயாராகி வருகிறது. இந்தியாவில் பண்டிகை காலம் இன்னும் வெகு தொலைவில் இல்லை. இந்த பண்டிகை காலத்தை குறி வைத்து அஸ்டர் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு எம்ஜி மோட்டார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

டாடா எலெக்ட்ரிக் காருக்கு செக் வைக்க ரெடியாகும் எம்ஜி நிறுவனம்... என்னனு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவீங்க!

இது மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்திய சந்தையில் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், ஸ்கோடா குஷாக் உள்ளிட்ட கார்கள் உடன் எம்ஜி அஸ்டர் போட்டியிடவுள்ளது. எம்ஜி அஸ்டர் காரில் ஏராளமான தொழில்நுட்ப வசதிகள் நிரம்பியுள்ளன. எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் மற்ற கார்களிலும் தொழில்நுட்ப வசதிகளுக்கு பஞ்சம் இருக்காது என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

டாடா எலெக்ட்ரிக் காருக்கு செக் வைக்க ரெடியாகும் எம்ஜி நிறுவனம்... என்னனு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவீங்க!

அதே பாணியில் அஸ்டர் காரிலும் எம்ஜி மோட்டார் நிறுவனம் ஏராளமான தொழில்நுட்ப வசதிகளை வாரி வழங்கியுள்ளது. எனவே இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் எம்ஜி அஸ்டர் கார் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. எம்ஜி மோட்டார் நிறுவனத்திற்கு அஸ்டர் மூலம் ஒவ்வொரு மாதமும் சிறப்பான விற்பனை எண்ணிக்கை கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா எலெக்ட்ரிக் காருக்கு செக் வைக்க ரெடியாகும் எம்ஜி நிறுவனம்... என்னனு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவீங்க!

இதனால் போட்டி நிறுவனங்கள் கலக்கம் அடைந்துள்ளன. இந்தியாவின் மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்டில் ஹூண்டாய் கிரெட்டா மற்றும் கியா செல்டோஸ் ஆகிய இரண்டு கார்களும் வலுவாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அந்த ஆதிக்கத்தை எம்ஜி அஸ்டர் கார் முறியடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக தென்படுகின்றன.

டாடா எலெக்ட்ரிக் காருக்கு செக் வைக்க ரெடியாகும் எம்ஜி நிறுவனம்... என்னனு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவீங்க!

இதற்கிடையே எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் இஸட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கும் இந்திய சந்தையில் நாளுக்கு நாள் வரவேற்பு கூடி கொண்டே செல்கிறது. கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கு 600க்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது உண்மையில் மிகப்பெரிய விஷயம்.

டாடா எலெக்ட்ரிக் காருக்கு செக் வைக்க ரெடியாகும் எம்ஜி நிறுவனம்... என்னனு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவீங்க!

ஏனெனில் இந்தியாவில் இன்னும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் பெரிதாக வளரவில்லை. அத்துடன் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் காரின் விலையும் சற்று அதிகம். அப்படி இருக்கும்போது இவ்வளவு அதிக எண்ணிக்கையில் முன்பதிவுகள் குவிந்து வருவது சிறப்பான விஷயம்தான்.

டாடா எலெக்ட்ரிக் காருக்கு செக் வைக்க ரெடியாகும் எம்ஜி நிறுவனம்... என்னனு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவீங்க!

வரும் காலங்களில் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கான வரவேற்பு இன்னும் பல மடங்கு உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில் இஸட்எஸ் எலெக்ட்ரிக் காரின் புதிய மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு எம்ஜி மோட்டார் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. இதில் சிறிய பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும். எனவே விலையை குறைவாக நிர்ணயம் செய்ய முடியும்.

டாடா எலெக்ட்ரிக் காருக்கு செக் வைக்க ரெடியாகும் எம்ஜி நிறுவனம்... என்னனு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவீங்க!

தற்போது டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்தான் இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் முதல் இடத்தில் உள்ளது. டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் குறைவான விலை இதற்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. எனவே இஸட்எஸ் எலெக்ட்ரிக் காரின் விலை குறைவான மாடலை களமிறக்கி, டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காருக்கு சவால் அளிக்க எம்ஜி மோட்டார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

டாடா எலெக்ட்ரிக் காருக்கு செக் வைக்க ரெடியாகும் எம்ஜி நிறுவனம்... என்னனு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவீங்க!

எம்ஜி மோட்டார் நிறுவனத்திடம் இருந்து குறைவான விலையில் ஒரு எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வரவுள்ள செய்தி இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய சந்தையில் எம்ஜி மோட்டார் நிறுவனம் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வருவதால், இந்த புதிய எலெக்ட்ரிக் கார் மாடல் விரைவில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, October 2, 2021, 14:50 [IST]
English summary
Mg motor india september 2021 sales up by 28 per cent here are all the details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+