Just In
- 1 hr ago அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- 2 hrs ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- 4 hrs ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 10 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
Don't Miss!
- News ஏசி ராத்திரியெல்லாம் ஓடுதா? நீங்க AC யூஸ் பண்ணும்போது, இந்த 5 மேட்டரை நோட் பண்ணுங்க.. பெஸ்ட் டிப்ஸ்
- Technology TDS முழுசா வேணுமா? அப்போ உங்க PAN கார்டுல இது முக்கியம்.. உடனே செஞ்சிடுங்க.. Income Tax-ன் திடீர் உத்தரவு!
- Movies டெய்லர் ஸ்விஃப்டுடன் கச்சேரி நடத்தப் போகிறாரா ஏ.ஆர். ரஹ்மான்?.. அந்த விருது வேற கிடைச்சிருக்கே!
- Lifestyle தோசை மாவு இல்லையா? வேர்க்கடலையை வெச்சு இப்படி தோசை சுடுங்க.. வேற லெவல் டேஸ்ட்ல இருக்கும்..
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நீங்க கவனிக்கலைனாலும் பரவா இல்லை... அதுவே பிரேக் பிடிச்சுடும்! MG Astor காரின் தரமான அம்சத்தை விளக்கும் வீடியோ
MG Astor காரில் இடம் பெற்றிருக்கும் சிறப்பு அம்சம்குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இதுகுறித்த முக்கிய விபரத்தைக் கீழே காணலாம்.
இந்தியாவில் பண்டிகைக் காலம் கலைக்கட்ட தொடங்கியுள்ளது. இதனை முன்னிட்டு முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் இந்தியாவை புதுமுக வாகனங்களால் அலங்கரிக்கத் தொடங்கியுள்ளன. அந்தவகையில், எம்ஜி (MG) நிறுவனம், அதன் ஆஸ்டர் (Astor) காரை மிக விரைவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.
மிக சமீபத்திலேயே இக்காரை நிறுவனம் வெளியீடு செய்தது. செப்டம்பர் 15ம் தேதி அன்றே இந்த நிகழ்வை நிறுவனம் இந்தியாவில் அரங்கேற்றியது. இதனைத் தொடர்ந்து மிக விரைவில் இந்த மிட்-சைஸ் எஸ்யூவி காருக்கான புக்கிங்கையும் நிறுவனம் நாட்டில் தொடங்க இருக்கின்றது.
இந்த நிலையில், ஆஸ்டர் காரின் பக்கம் மக்களைக் கவரும் வகையில் நிறுவனம் பிரத்யேக விளம்பர வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அவ்வீடியோவில் ஆஸ்டர் கார் தானாக பிரேக் பிடித்து நிற்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. இதுவரை எந்தவொரு காரிலும் இடம் பெறாத பல முக்கிய சிறப்பு அம்சங்களுடன் எம்ஜி ஆஸ்டர் நாட்டில் விற்பனைக்கு வர இருக்கின்றது.
மிக முக்கியமாக லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகிய அட்வான்ஸ்ட் தொழில்நுட்ப வசதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த தொழில்நுட்பங்களின் வாயிலாக கிடைக்கக் கூடிய ஓர் பிரத்யேக வசதியே தானியங்கி பிரேக்கிங் சிஸ்டம். இது ஆபத்து நேரங்களில் தானாகவே செயல்படும். அதாவது, மோதல் போன்ற அசம்பாவித நேரங்களில் தானாக செயல்பட்டு காரை நிறுத்தும் வசதி.
இந்த அம்சத்தை விளக்கக் கூடிய ஓர் வீடியோவை நிறுவனம் தற்போது வெளியிட்டிருக்கின்றது. இந்தியாவில் அடாஸ் வசதி உடன் ஒரு சில கார்கள் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றன. வால்வோ மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் ஆகிய நிறுவனங்கள் மட்டுமே அடாஸ் வசதியை குறிப்பிட்ட சில கார் மாடல்களில் வழங்கி வருகின்றது. அவற்றின் விலை பல மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தகுந்தது. மஹிந்திரா நிறுவனத்தின் மிக விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் எக்ஸ்யூவி700 காரிலும் இந்த வசதி இடம் பெற இருப்பது கவனிக்கதகுந்தது.
எம்ஜி ஆஸ்டர் ஐந்து விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. ஸ்டைல், சூப்பர், ஸ்மார்ட், ஷார்ப் மற்றும் சேவி ஆகிய தேர்வுகளிலேயே அது கிடைக்கும். இத்துடன், வெள்ளை, சிவப்பு, ஆரஞ்சு, கருப்பு மற்றும் சில்வர் ஆகிய நிறத் தேர்விலும் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கும். ஆனால், இந்த கார் பெட்ரோல் எஞ்ஜின் தேர்வில் மட்டுமே விற்பனைக்கு வர இருக்கின்றது.
அதேவேலையில், 1.5 லிட்டர் விடிஐ நேட்சுரல்லி அஸ்பயர்டு மற்றும் 1.3 லிட்டர் டர்போசார்ஜட் எஞ்ஜின் தேர்வுகளில் அது கிடைக்கும். இதில், விடிஐ பெட்ரோல் எஞ்ஜின் 110 எச்பியையும், 114 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது. இதேபோல், டர்போசார்ஜட் எஞ்ஜின் 140 எச்பியையும், 220 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறனைக் கொண்டதாக இருக்கின்றது.
எம்ஜி ஆஸ்டர் காரில் பனோரமிக் சன்ரூஃப், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, அடாப்டீவ் க்ரூஸ் கன்ட்ரோல், தானியங்கி அவசர கால பிரேக்கிங் வசதி, லேன் கீப் அசிஸ்ட், ஃபார்வார்டு கொளிசன் வார்னிங் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற இருக்கின்றன. இத்துடன், பாதுகாப்பு வசதிக்காக 6 ஏர் பேக்குகள், ஹில் ஹோல்டு அசிஸ்ட், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் மற்றும் ஹில் டிசென்ட் கன்ட்ரோல் மற்றும் இபிடி உடன் கூடிய ஏபிஎஸ் ஆகிய வசதிகளும் இடம் பெற இருக்கிறது.
மேலும், 7 இன்சிலான எம்ஐடி எல்சிடி திரை, 10.1 இன்சிலான இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் (ஆப்பிள் ஆன்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் கார் ப்ளே வசதி உடன்), நேவிகேஷன் வசதி, பார்க் ப்ளஸ் உள்ளிட்ட வசதிகளும் எம்ஜி ஆஸ்டர் காரில் இடம் பெற இருக்கின்றன. எம்ஜி ஆஸ்டர் கார் ரூ. 8 லட்சம் தொடங்கி ரூ. 13 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த குறைவான விலையிலேயே அடாஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு வசதிகளை நிறுவனம் ஆஸ்டர் காரில் வழங்க இருக்கின்றது. இக்கார் இந்தியாவில் தற்போது விற்பனையில் இருக்கும் ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகுவான் ஆகிய கார்களுக்கு போட்டியாக விற்பனைக்குக் கிடைக்க இருக்கிறது.
எம்ஜி ஆஸ்டர் காரில் இடம் பெற்றிருக்கும் முக்கிய அம்சங்களை பட்டியலாகக் கீழே பார்க்கலம்:
- 80-க்கும் மேற்பட்ட இணைய வழியிலான சேவைகள்.
- கண் வடிவிலான எல்இடி மின் விளக்குகள், 17 இன்ச் இரு வண்ண அலாய் வீல்கள்.
- 6 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளக் கூடிய பவர் வசதிக் கொண்ட இருக்கை
- நார்மல், அர்பன் மற்றும் டைனமிக் ஆகிய அட்ஜெஸ்ட்மென்ட் வசதிகள் கொண்ட ஸ்டியரிங் வீல்
- 10.1 இன்சிலான இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்
- 7 அங்குல டிஜிட்டல் கிளஸ்டர்
- பனோரமிக் சன்ரூஃப் (65 இன்ச் கொண்டது. இதன் வாயிலாக பார்க்கையில் முழுமையாக வானத்தைக் காண முடியும்)
- பிஎம் 2.5 ஃபில்டர் (காற்றை சுத்தப்படுத்த இது உதவும். பாக்டீரியா மற்றும் வைரஸ்களை அழிக்க உதவும்.)
- எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக்
- சூடான ORVM
- ப்ளூடூத் வசதி கொண்ட டிஜிட்டல் சாவி
-
கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
-
இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
-
ஒரு கிமீக்கு வெறும் ரூ3.3 தான் செலவு! 10 பேர் தாராளமா போகலாம்! டாடா மேஜிக் பை ஃப்யூயல் வந்தாச்சு!