Hyundai Creta-வின் நிலைமை என்னவாக போகுதோ! MG Astor காருக்கு முன் பதிவுகள் தொடக்கம்! தரமான சம்பவம் காத்திருக்கு

எம்ஜி அஸ்டர் (MG Astor) எஸ்யூவி காருக்கான முன் பதிவு பணிகள் இந்தியாவில் தொடங்கி இருக்கின்றது. ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், ஃபோக்ஸ்வேகன் டைகுன் மற்றும் மாருதி சுசுகி எஸ்-கிராஸ் ஆகிய கார்களுக்கு போட்டியாக எம்ஜி அஸ்டர் விற்பனைக்கு வந்திருக்கின்றது.

Hyundai Creta-வின் நிலைமை என்னவாக போகுதோ! MG Astor காருக்கு முன் பதிவுகள் தொடக்கம்! தரமான சம்பவம் காத்திருக்கு!

நாட்டின் முதல் செயற்கை நுண்ணறிவு வசதிக் கொண்ட காருக்கு புக்கிங் பணிகள் தொடங்கியிருக்கின்றன. இங்கிலாந்து நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் எம்ஜி (MG) நிறுவனத்தின் புத்தம் புதிய கார் மாடல் அஸ்டர் (Astor). இது ஓர் எஸ்யூவி ரக வாகனமாகும். இந்த காரிலேயே இதுவரை எந்த நிறுவனமும் வழங்காத பிரத்யேக சிறப்பு வசதிகளை எம்ஜி வழங்கி இருக்கின்றது. ஆகையால், இக்காருக்கு இந்தியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையில் அஸ்டர் காருக்கு நிறுவனம் புக்கிங் பணிகளை தொடங்கியிருக்கின்றது.

Hyundai Creta-வின் நிலைமை என்னவாக போகுதோ! MG Astor காருக்கு முன் பதிவுகள் தொடக்கம்! தரமான சம்பவம் காத்திருக்கு!

ஆன்லைன் (அதிகாரப்பூர்வ வலைதளம்) மற்றும் ஆஃப்லைன் (விற்பனையாளர்கள்) என இரண்டின் வாயிலாகவும் அஸ்டர் காருக்கான புக்கிங் பணிகளை எம்ஜி தொடங்கியிருக்கின்றன. இக்காரை புக் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு வரும் நவம்பர் மாதம் டெலிவரி கொடுக்கப்படும் என நிறுவனம் அறிவித்துள்ளது. முதல் 5 ஆயிரம் யூனிட்டுகள் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்குள் டெலிவரி கொடுக்கப்பட இருக்கின்றன.

Hyundai Creta-வின் நிலைமை என்னவாக போகுதோ! MG Astor காருக்கு முன் பதிவுகள் தொடக்கம்! தரமான சம்பவம் காத்திருக்கு!

ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், ஃபோக்ஸ்வேகன் டைகுன் மற்றும் மாருதி சுசுகி எஸ்-கிராஸ் ஆகிய கார்களுக்கு போட்டியாக இக்கார் இந்தியாவில் விற்பனைக்குக் களமிறங்கியிருக்கின்றது. தற்போது எம்ஜி அஸ்டர் எஸ்யூவி காருக்கு ரூ. 21 ஆயிரம் என்ற மிக குறைந்த முன் தொகையின்கீழ் புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றன. எம்ஜி அஸ்டர் ஐந்து விதமான ட்ரிம்களில் விற்பனைக்குக் கிடைக்கும். ட்ரிம்கள் ஸ்டைல் (Style), சூப்பர் (Super), ஸ்மார்ட் (Smart), ஷார்ப் (Sharp) மற்றும் சாவ்வி (Savvy) ஆகியவையே ஆகும்.

Hyundai Creta-வின் நிலைமை என்னவாக போகுதோ! MG Astor காருக்கு முன் பதிவுகள் தொடக்கம்! தரமான சம்பவம் காத்திருக்கு!

இத்துடன், இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளிலும் எம்ஜி அஸ்டர் விற்பனைக்குக் கிடைக்கும். 110 பிஎஸ் பவரை வெளியேற்றக் கூடிய 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 140 பிஎஸ் பவரை வெளியேற்றக் கூடிய 1.3 லிட்டர் டர்போ-பெட்ரோல் ஆகிய இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளிலேயே அஸ்டர் விற்பனைக்குக் கிடைக்கும். இதில், 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜினானது 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி ஆகிய கியர்பாக்ஸ் தேர்விலும், 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜின் 6 ஸ்பீடு தானியங்கி கியர்பாக்ஸ் தேர்விலும் கிடைக்கும்.

Hyundai Creta-வின் நிலைமை என்னவாக போகுதோ! MG Astor காருக்கு முன் பதிவுகள் தொடக்கம்! தரமான சம்பவம் காத்திருக்கு!

இதுவரை எந்தவொரு காரும் பெற்றிராத மிக சிறந்த இரு பிரீமியம் வசதிகளுடன் அஸ்டர் எஸ்யூவி விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்டண்ட் சிஸ்டம் (Advanced Driver Assistance Systems) மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகிய அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

Hyundai Creta-வின் நிலைமை என்னவாக போகுதோ! MG Astor காருக்கு முன் பதிவுகள் தொடக்கம்! தரமான சம்பவம் காத்திருக்கு!

அடாஸ் தொழில்நுட்பத்தின் வாயிலாக அடாப்டீவ் க்ரூஸ் கன்ட்ரோல், லேன்-கீப் அசிஸ்ட், பைலட் அசிஸ்ட், ஃபார்வேர்டு கொலிசன் எச்சரிக்கை, தானியங்கி அவசரகால பிரேக்கிங், 360 டிகிரி கேமிரா மற்றும் பிளைண்ட் ஸ்பாட் மானிட்டர் ஆகிய வசதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.

Hyundai Creta-வின் நிலைமை என்னவாக போகுதோ! MG Astor காருக்கு முன் பதிவுகள் தொடக்கம்! தரமான சம்பவம் காத்திருக்கு!

இதேபோல், செயற்கை நுண்ணறிவு திறனாலும் பன்முக சிறப்பு வசதிகளை அஸ்டர் கார் பயனர்களால் பெற்றுக் கொள்ள முடியும். காருக்குள், ரோபோவின் தலை போன்று ஓர் சிறிய கருவி கொடுக்கப்பட்டிருக்கும். இதுவே செயற்கை நுண்ணறிவுடன் செயல்பட்டு பல்வேறு உதவிகளை அஸ்டர் கார் பயனர்களுக்கு வழங்கும்.

Hyundai Creta-வின் நிலைமை என்னவாக போகுதோ! MG Astor காருக்கு முன் பதிவுகள் தொடக்கம்! தரமான சம்பவம் காத்திருக்கு!

இதுதவிர, மழை பொழிந்தால் தானாக வைப் செய்யும் வைப்பர்கள், 10.1 இன்சிலான தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 7 அங்குல இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், கார் இணைப்பு தொழில்நுட்பம், பனோரமிக் சன்ரூஃப், ப்ளூடூத் இணைப்பு வசதிக் கொண்ட டிஜிட்டல் சாவி ஆகியவையும் இக்காருக்கு வழங்கப்படும்.

Hyundai Creta-வின் நிலைமை என்னவாக போகுதோ! MG Astor காருக்கு முன் பதிவுகள் தொடக்கம்! தரமான சம்பவம் காத்திருக்கு!

பயணிகளின் கூடுதல் பாதுகாப்பிற்காக அனைத்து வீல்களிலும் டிஸ்க் பிரேக் வசதியை எம்ஜி வழங்க இருக்கின்றது. எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், டிராக்சன் கன்ட்ரோல், ஹில் அசென்ட்/டெஸ்சென்ட் (வழக்கமான அம்சம்), ஆறு ஏர் பேக்குகள் ஆகியவற்றை வழங்குகின்றது. இக்காரின் பயன்பாட்டை இன்னும் மிக சிறப்பானதாக மாற்ற எம்ஜி நிறுவனம் சிஏஏபி (Car-as-a-Platform) எனும் சிறப்பு சந்தா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

Hyundai Creta-வின் நிலைமை என்னவாக போகுதோ! MG Astor காருக்கு முன் பதிவுகள் தொடக்கம்! தரமான சம்பவம் காத்திருக்கு!

இதன் வாயிலாக எண்ணற்ற சிறப்பு வசதிகளை நிறுவனம் அஸ்டர் கார் பயனர்களுக்கு வழங்க இருக்கின்றது. குறிப்பாக, பொழுதுபோக்கு, பாதுகாப்பு, கட்டணத்தைச் செலுத்துவது மற்றும் அதி-வேக இணைய வசதி ஆகியவற்றை நிறுவனம் வழங்க இருக்கின்றது. இதற்காக ஜியோ மற்றும் இன்னும் சில செல்போன் ஆப் நிறுவனங்களுடன் எம்ஜி கூட்டணியைத் தொடங்கியிருக்கின்றது.

Hyundai Creta-வின் நிலைமை என்னவாக போகுதோ! MG Astor காருக்கு முன் பதிவுகள் தொடக்கம்! தரமான சம்பவம் காத்திருக்கு!

எம்ஜி அஸ்டர் கடந்த அக்டோபர் 11ம் தேதி இந்தியாவில் அறிமுகமானது. ரூ. 9.78 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.

இந்த காரின் முழு விலை விபரத்தைப் பட்டியலாகக் கீழே காணலாம்:

Style Super Smart Sharp
VTi-Tech MT ₹9,78,000 ₹11,28,000 ₹12,98,000 ₹13,95,000
VTi-Tech CVT ₹12,68,000 ₹14,18,000 ₹14,98,000
220 Turbo AT ₹15,88,000 ₹16,78,000

More from DriveSpark

Article Published On: Thursday, October 21, 2021, 11:03 [IST]
English summary
Mg starts pre reservation for astor suv
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+