இவ்ளோ காஸ்ட்லியான எலெக்ட்ரிக் காரே இந்த அளவுக்கு சேல்ஸ் ஆகுதா? அப்ப பெட்ரோல், டீசல் கார்லாம் கொஞ்ச வருஷம்தான்!
இந்தியாவில் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் காரின் விற்பனை உயர்ந்து வருகிறது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் இந்திய சந்தையில் கடந்த 2020ம் ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து நடப்பாண்டு பிப்ரவரி மாதம் இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை எம்ஜி நிறுவனம் அப்டேட் செய்தது. இதன் காரணமாக எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் விற்பனை உயர்ந்து கொண்டே வருகிறது.

எம்ஜி நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெறும் 119 இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் 273 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் விற்பனையில் 129 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் எக்ஸைட் மற்றும் எக்ஸ்க்ளூசிவ் என மொத்தம் 2 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதில், எக்ஸைட் வேரியண்ட்டின் விலை 20.99 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் எக்ஸ்க்ளூசிவ் வேரியண்ட்டின் விலை 24.58 லட்ச ரூபாயாக இருக்கிறது.

இவை இரண்டுமே எக்ஸ் ஷோரூம் விலையாகும். எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில், 44.5 kWh பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், 419 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நடைமுறை பயன்பாட்டில் ரேஞ்ச் குறையலாம்.

என்றாலும் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் மிகவும் சிறப்பானது என்பதில் சந்தேகமில்லை. எம்ஜி நிறுவனத்தின் மற்ற கார்களை போலவே, இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரிலும் ஏராளமான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில், கனெக்டட் கார் தொழில்நுட்பத்துடன் கூடிய 8 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் மிகவும் முக்கியமானது.

இதுதவிர பனரோமிக் சன்ரூஃப், மின்னணு முறையில் அட்ஜெஸ்ட் செய்து கொள்ள கூடிய ஓட்டுனர் இருக்கை, மழை வந்தால் தானாக இயங்க கூடிய வைப்பர்கள், க்ரூஸ் கண்ட்ரோல், ஏர் ப்யூரிஃபையர் மற்றும் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகளையும் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் பெற்றுள்ளது.

அத்துடன் பாதுகாப்பு வசதிகளிலும் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் அசத்துகிறது. இந்த காரில், 6 ஏர் பேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், இபிடி உடன் ஏபிஎஸ், பிரேக் அஸிஸ்ட், ரியர் பார்க்கிங் கேமரா, எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ரியர் டிஸ்க் பிரேக்குகள் உள்ளிட்ட வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு ஒரே ஒரு போட்டி மட்டுமே இருக்கிறது. ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்தான் அது. இந்த இரண்டு கார்களுமே, டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரிடம் இருந்து சற்று போட்டியை எதிர்கொண்டு வருகின்றன. ஆனால் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி, இந்த கார்களுக்கு நேரடி போட்டி கிடையாது.

ஏனெனில் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி சற்று விலை குறைவான மாடல். எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி மற்றும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களுடன் ஒப்பிடுகையில், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி சற்று கீழான செக்மெண்ட்டில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் எம்ஜி நிறுவனம் இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் புதிய மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த புதிய மாடலில், சிறிய அளவுடைய பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் என தெரிகிறது. இதன் காரணமாக தற்போது விற்பனையில் இருக்கும் மாடலை விட, புதிய மாடலின் விலை சற்று குறைவாக இருக்கும்.

விலை குறைவு என்பதால் இந்த புதிய மாடலானது, டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருடன் நேரடியாக போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே தற்போதைய நிலையில் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை பெற்றுள்ள டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு கூடிய விரைவில் நேரடி போட்டி வரப்போகிறது.


Click it and Unblock the Notifications








