அறிமுகத்திற்கு முன்னரே அசத்தல்... ஜஸ்ட் 2 மணிநேரத்தில் இந்தியாவில் விற்று தீர்ந்த மினி எலெக்ட்ரிக் கார்!

மினி கார் நிறுவனம் விரைவில் தனது முதல் எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. இந்த நிலையில், இந்தியாவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அனைத்து கார்களுக்கும் வெறும் 2 மணிநேரத்தில் முன்பதிவு முடிந்துவிட்டதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

அறிமுகத்திற்கு முன்னரே அசத்தல்... ஜஸ்ட் 2 மணிநேரத்தில் இந்தியாவில் விற்று தீர்ந்த மினி எலெக்ட்ரிக் கார்!

இங்கிலாந்தை சேர்ந்த மினி கார் நிறுவனம் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் அங்கமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் சொகுசு எலெக்ட்ரிக் கார்களுக்கு குறிப்பிடத்தக்க வரவேற்பு இருந்து வருகிறது. இதனை மனதில் வைத்து தனது கூப்பர் எஸ்இ எலெக்ட்ரிக் காரை விரைவில் இந்தியாவில் களமிறக்க உள்ளது.

அறிமுகத்திற்கு முன்னரே அசத்தல்... ஜஸ்ட் 2 மணிநேரத்தில் இந்தியாவில் விற்று தீர்ந்த மினி எலெக்ட்ரிக் கார்!

மொத்தம் இந்தியாவிற்கு 30 கார்களை மனி நிறுவனம் ஒதுக்கீடு செய்திருந்தது. சில நாட்களுக்கு முன்பு இந்த புதிய எலெக்ட்ரிக் காருக்கு முன்பதிவு துவங்கப்பட்டது. ரூ.1 லட்சம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.

அறிமுகத்திற்கு முன்னரே அசத்தல்... ஜஸ்ட் 2 மணிநேரத்தில் இந்தியாவில் விற்று தீர்ந்த மினி எலெக்ட்ரிக் கார்!

இந்த நிலையில், புக்கிங் துவங்கி 2 மணிநேரத்தில் இந்தியாவிற்கு முதல் லாட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 30 கூப்பர் எஸ்இ எலெக்ட்ரிக் கார்களுக்கும் புக்கிங் முடிந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலமாக, இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கான வரவேற்பு மிக வேகமாக அதிகரித்து வருவது புலனாகிறது.

அறிமுகத்திற்கு முன்னரே அசத்தல்... ஜஸ்ட் 2 மணிநேரத்தில் இந்தியாவில் விற்று தீர்ந்த மினி எலெக்ட்ரிக் கார்!

பிரிமீயம் கார் தயாரிப்பில் பிரபலமான மினி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் மாடலாக கூப்பர் எஸ்இ உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு பிராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோவில் கான்செப்ட் மாடலாகவும், பின்னர் மாற்றங்கள் மற்றும் மேம்பாட்டுப் பணிகள் முடிந்து 2019ம் ஆண்டு பிராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோவில் தயாரிப்பு நிலை மாடலாகவும் அறிமுகம் செய்யப்பட்டது.

அறிமுகத்திற்கு முன்னரே அசத்தல்... ஜஸ்ட் 2 மணிநேரத்தில் இந்தியாவில் விற்று தீர்ந்த மினி எலெக்ட்ரிக் கார்!

புதிய மினி கூப்பர் எலெக்ட்ரிக் காரில் 32.6kWh பேட்டரி தொகுப்பு உள்ளது. முன்புற இருக்கைகள் மற்றும் பின்புற இருக்கைகளுக்கு கீழாக T வடிவில் இந்த பேட்டரித் தொகுப்பு பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரியை 50kW டிசி ஃபாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தினால், பூஜ்யத்திலிருந்து 80 சதவீத அளவை வெறும் 30 நிமிடங்களில் சார்ஜ் ஏற்றிவிட முடியும். சாதாரண 11kW ஏசி சார்ஜர் பயன்படுத்தினால் 3.5 மணிநேரம் பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

அறிமுகத்திற்கு முன்னரே அசத்தல்... ஜஸ்ட் 2 மணிநேரத்தில் இந்தியாவில் விற்று தீர்ந்த மினி எலெக்ட்ரிக் கார்!

இந்த காரில் சிங்கிள் ஏசிங்க்ரோனஸ் எலெக்ட்ரிக் மோட்டாரும், சிங்கிள் ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும் இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்த மின் மோட்டார் அதிகபட்சமாக 181 பிஎச்பி பவரையும், 270 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 0 - 100 கிமீ வேகத்தை 7.3 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 150 கிமீ வேகம் வரை செல்லும்.

அறிமுகத்திற்கு முன்னரே அசத்தல்... ஜஸ்ட் 2 மணிநேரத்தில் இந்தியாவில் விற்று தீர்ந்த மினி எலெக்ட்ரிக் கார்!

இந்த காரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 235 கிமீ தூரம் வரை செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓட்டுதல் முறையை பொறுத்து நடைமுறை பயன்பாட்டின்போது 200 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும் என நம்பலாம்.

அறிமுகத்திற்கு முன்னரே அசத்தல்... ஜஸ்ட் 2 மணிநேரத்தில் இந்தியாவில் விற்று தீர்ந்த மினி எலெக்ட்ரிக் கார்!

புதிய மினி கூப்பர் எஸ்இ எலெக்ட்ரிக் கார் ஒயிட் சில்வர், மிட்நைட் பிளாக், மூன்வாக் க்ரே மற்றும் பிரிட்டிஷ் ரேஸிங் க்ரீன் ஆகிய வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும். இந்த காரில் 17 அங்குல அலாய் வீல்கள், மூன்று விதமான வண்ணத் தேர்வுகள் கொண்ட மாடல், 5.5 அங்குல டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, 8.8 அங்குல வட்டவடிவிலான திரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

Most Read Articles
மேலும்... #மினி #mini
English summary
Mini Cooper SE Electric Cars Sold Out India.
Story first published: Tuesday, November 9, 2021, 10:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X