டாடா நெக்ஸானை இப்படியெல்லாம் கூட மாற்றலாமா!! செம்ம ஸ்டைலிஷா இருக்கு!

டாடா நெக்ஸான், இந்தியாவில் மிக பிரபலமான காம்பெக்ட் எஸ்யூவி கார் மாடல்களுள் ஒன்று. நெக்ஸானில் வழங்கப்படும் பாதுகாப்பு அம்சங்கள் இதற்கு முக்கிய காரணம்.

டாடா நெக்ஸானை இப்படியெல்லாம் கூட மாற்றலாமா!! செம்ம ஸ்டைலிஷா இருக்கு!

ஏனெனில் உலகளவிய என்சிஏபி மோதல் சோதனைகளில் டாடாவின் தயாரிப்புகள் சிறப்பாக செயல்படும் என்பது எல்லாருக்கும் தெரிந்ததே. நெக்ஸான் 5-ற்கு 5 என முழு நட்சத்திரங்களை பெற்றுள்ளது.

டாடா நெக்ஸானை இப்படியெல்லாம் கூட மாற்றலாமா!! செம்ம ஸ்டைலிஷா இருக்கு!

குழந்தைகள் பாதுகாப்பில் 3 நட்சத்திரங்கள் இந்த காம்பெக்ட் எஸ்யூவி காருக்கு வழங்கப்பட்டது. இதனால் நெக்ஸான் கார்களை வைத்திருப்போர் தைரியமாக தங்களது காரை கஸ்டமைஸ்ட் பணிகளில் உட்படுத்துகின்றன.

டாடா நெக்ஸானை இப்படியெல்லாம் கூட மாற்றலாமா!! செம்ம ஸ்டைலிஷா இருக்கு!

அவ்வாறான கஸ்டமைஸ்ட் டாடா நெக்ஸான் காரை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம். ரோஹித் மெஹ்தா சாய் ஆட்டோ ஆக்ஸஸரீஸ் என்ற யுடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள இது தொடர்பான வீடியோவில் இது நெக்ஸானின் எக்ஸ்.எம்(எஸ்) ட்ரிம் என தெளிவாக கூறப்பட்டுள்ளது.

கஸ்டமைஸ்ட் பணிகள் காரின் உட்புறத்திலும், வெளிப்புறத்திலும் என இரு பக்கங்களிலும் கொண்டுவரப்பட்டுள்ளன. காரின் முன்பக்கத்தில் இருந்து ஆரம்பிப்போம், இங்கு ஸ்டாக் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப் அமைப்பில் சிவப்பு நிற எல்இடி ரிங் வழங்கப்பட்டுள்ளது.

டாடா நெக்ஸானை இப்படியெல்லாம் கூட மாற்றலாமா!! செம்ம ஸ்டைலிஷா இருக்கு!

இதற்கு ஏற்றவாறு முன்பக்க பொனெட்டின் முன்பக்க முனையில் எல்இடி டிஆர்எல் ஸ்ட்ரிப்பும், டாடா லோகோவிற்கு மேலே கஸ்டம் ‘NEXON' ஸ்டிக்கரும், அதற்கு மேலே இறக்கைகள் வடிவில் கூடுதல் லோகோவும் பொருத்தப்பட்டுள்ளன.

டாடா நெக்ஸானை இப்படியெல்லாம் கூட மாற்றலாமா!! செம்ம ஸ்டைலிஷா இருக்கு!

நெக்ஸானின் டாப் வேரியண்ட்களில் முன்பக்க க்ரில் அமைப்பின் கீழ்பகுதியில் 3-அம்பு வடிவிலான பாகங்கள் பொருத்தப்படுகின்றன. எக்ஸ்.எம்(எஸ்) போன்ற விலை குறைவான வேரியண்ட்களில் பொருத்தப்படுவதில்லை.

டாடா நெக்ஸானை இப்படியெல்லாம் கூட மாற்றலாமா!! செம்ம ஸ்டைலிஷா இருக்கு!

ஆனால் இந்த காரில் கஸ்டமாக அத்தகைய பாகங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் இந்த நெக்ஸான் கார் ப்ரீமியம் தரத்தில் காட்சியளிக்கிறது. இவற்றுடன் எல்இடி ஃபாக் விளக்குகளும் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளன.

டாடா நெக்ஸானை இப்படியெல்லாம் கூட மாற்றலாமா!! செம்ம ஸ்டைலிஷா இருக்கு!

பக்கவாட்டில் 16 இன்ச்சில் இரும்பு சக்கரங்களுக்கு அருமையான சக்கர மூடிகள் கொடுக்கப்பட்டுள்ளன. முன்பக்க ஃபெண்டர்களுக்கு மேற்புறத்தில் போலியான துளைகளை பார்க்க முடிகிறது.

டாடா நெக்ஸானை இப்படியெல்லாம் கூட மாற்றலாமா!! செம்ம ஸ்டைலிஷா இருக்கு!

கதவுகளில் க்ரோம் உள்ளீடுகளுடன் மோல்டிங்குகளும், முனைகளில் உராய்வில் இருந்து பாதுகாப்பானும் வழங்கப்பட்டுள்ளன. மேற்கூரையின் இரு பக்கங்களிலும் வெள்ளை நிறங்களை ஜன்னல் கண்ணாடிகளே மேலே பார்க்கலாம்.

டாடா நெக்ஸானை இப்படியெல்லாம் கூட மாற்றலாமா!! செம்ம ஸ்டைலிஷா இருக்கு!

பின்பக்கத்தில் புதிய டிஃப்யூஸரில் ஃபாக்ஸ் குவாட் எக்ஸாஸ்ட் குழாய் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. உட்புறத்தில் டேஸ்போர்டு, கதவுகள், ஸ்டேரிங் சக்கரம் உள்பட இருக்கைகளும் பழுப்பு நிற லெதர் மற்றும் ஃபாக்ஸ் கார்பன் ஃபைபரால் வடிவமைக்கப்பட்டுள்ளன.

டாடா நெக்ஸானை இப்படியெல்லாம் கூட மாற்றலாமா!! செம்ம ஸ்டைலிஷா இருக்கு!

மைய கன்சோலின் மீது ஆர்ம் ரெஸ்ட் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளது. இவற்றுடன் கேபினை சுற்றிலும் விளக்குகள், ஒளிரக்கூடிய ஸ்கஃப் தட்டுகள், தரை பாய்கள் மற்றும் புதிய இன்ஃபோடெயின்மெண்ட் தொடுத்திரை சிஸ்டத்தையும் இந்த கஸ்டமைஸ்ட் நெக்ஸான் பெற்றுள்ளது.

டாடா நெக்ஸானை இப்படியெல்லாம் கூட மாற்றலாமா!! செம்ம ஸ்டைலிஷா இருக்கு!

அதுமட்டுமில்லாமல் ஆடியோ சிஸ்டமும் அப்கிரேட் செய்யப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக நாம் இதுவரையில் பார்த்ததில் கவர்ச்சிகரமான கஸ்டமைஸ்ட் நெக்ஸான் கார்களுள் இதுவும் ஒன்று.

Most Read Articles

English summary
This Modified Tata Nexon Gets A Premium Makeover Inside-Out.
Story first published: Friday, April 23, 2021, 23:23 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X