Just In
- 7 hrs ago
விற்பனையில் புதிய உச்சத்தை தொட்டது ஹோண்டா!! 4 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்து அசத்தல்!
- 8 hrs ago
சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காருக்கு முன்பதிவு தொடங்கியது... விரைவில் விற்பனைக்கு அறிமுகம்!
- 9 hrs ago
மீண்டும் சோதனை ஓட்டத்தில் டாடா மோட்டார்ஸின் சிஎன்ஜி கார்கள்!! வழக்கமான பெட்ரோல் என்ஜினில் மாற்றம் இருக்குமா?
- 10 hrs ago
சேல்ஸ் எங்கயோ போயிருச்சு... முன்னெப்போதும் இல்லாத வகையில் கார்களை விற்று தள்ளிய எம்ஜி மோட்டார்!
Don't Miss!
- News
அமெரிக்கா, பிரேசில், இத்தாலி, ரஷ்யா, இந்தியா ஆகிய ஐந்து நாடுகளில் தான் கொரோனா பாதிப்பு மிக அதிகம்
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 02.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் நிதி இழப்பை சந்திக்க வேண்டியிருக்குமாம்…
- Finance
ஓரே நாளில் 5000 டாலர் உயர்ந்த பிட்காயின்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!
- Sports
காயத்தில இருந்து மீண்டு வர்றதுக்காக கடுமையா உழைக்கிறாரு... வார்னர் பத்தி கோச் சொல்லியிருக்காரு!
- Movies
பாலிவுட் படத்தை இயக்கும் ஆர்ஜே பாலாஜி.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சசிகலாவையே மிஞ்சிட்டார்... மும்பை அதி-வேக சாலையை அதிர விட்ட பிரபல குற்றவாளி... என்ன நடந்தது தெரியுமா?
கொலை வழக்கில் சிக்கி மூன்றாண்டுகள் சிறைவாசத்திற்கு பின்னர் வெளிய வந்த பிரபல ரவுடி ஒருவருக்கு அவரது கூட்டாளிகள் உற்சாக வரவேற்பை அளித்தனர். இந்த சம்பவம் குறித்த அதிர வைக்கும் தகவலைக் கீழே காணலாம்.

இரு கொலை வழக்கில் சிக்கி சிறை சென்றவர் கஜனன் மர்னே. மஹாராஷ்டிரா மாநிலம், பிம்பிரி சின்ச்வாட் பகுதியைச் சேர்ந்தவர் இவர். கடந்த மூன்று ஆண்டுகளாக கொலை வழக்கு காரணமாக மும்பை தலேஜா ஜெயிலில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்தவர் இவர். மூன்றாண்டுகள் நிறைவடைந்தநிலையில் இன்று அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இவரின் விடுதலை பற்றிய தகவல் அவரது கூட்டாளிகள் மற்றும் ஆதரவாளர்களுக்கு தெரியவந்தது. இதனையடுத்து அனைவரும் மும்பை தலேஜா சிறை வாசல் முன்பு அதிகாலையே குவிந்தனர். கஜனன் மர்னே வெளியே வருவதற்கு முன்னரே தொண்டர்கள் ஜெயில் வாசல் முன்பு குவிந்தனர். மேலும், அவர் விடுதலை பெற்று சிறை வாசலை விட்டு வெளியே வந்த நேரத்தில் மிகுந்த உற்சாகத்துடன் பூ மழையை பொழிந்து அவர்கள் வரவேற்றனர்.

தொடர்ந்து, அவர் பெயர் கூறி கரகோஷத்தையும் எழுப்பினர். சொத்துகுவிப்பு வழக்கில் சிக்கி அண்மையில் வெளியே வந்த சசிகலாவைக் காட்டிலும் கஜனன் மர்னேவை அவரது தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்து, சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றனர். இவர்களின் இச்செயல் பெரும் சர்ச்சையை அம்மாநிலத்தில் ஏற்படுத்தியிருக்கின்றது. ஆம், இவரை வரவேற்பதற்காக 300க்கம் அதிகமான கார்கள் ஜெயிலை நோக்கி படையெடுத்திருந்ததாகக் கூறப்படுகின்றது.

இந்த கார்கள் அனைத்துமே அவர் சொந்த ஊர் செல்லும் வரை உற்சாக வரவேற்பு அளித்த வண்ணம் பேரணி சென்றன. இப்பேரணி அரசியல்வாதிகளின் கான்வாயையே மிஞ்சும் வகையில் அமைந்ததாக, நிகழ்வை நேரில் பார்த்தவர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

இந்த நிலையில் தனது ஆதரவாளர்களை ஆசுவாசப்படுத்துவதற்காக கஜனன் சன் ரூஃப் வழியாக வெளியே எட்டிபார்த்த கைகளைக் காட்டினார். அந்த நேரத்தில் அவரது ஆதரவாளர்கள் மீண்டும் பூ மழையை அவர்மீது தூவியிருக்கின்றனர். ஒரு சிலர் காரின் ஜன்னல் வழியாக எட்டி பார்த்து அவருக்கு கை காட்டியும், கோஷம் எழுப்பியும் உற்சாகப்படுத்தினர்.

ஓடும் வாகனங்களில் இருந்து இதுபோன்று எட்டி பார்ப்பது, சாகசம் செய்வது மிகப்பெரிய விதி மீறல் (குற்றம்) ஆகும். இதுமட்டுமின்றி, இவர்கள் எந்தவொரு டோல்கேட்டிலும் கட்டணத்தைச் செலுத்துவதற்காக வாகனங்களை நிறுத்தவில்லை என்றும் அதிகாரிகள் சிலர் தகவல் தெரிவிக்கின்றனர்.

தொடர்ந்து, அதிவேக சாலையான மும்பை-புனே இடையிலான எக்ஸ்பிரஸ் சாலையை அடைத்து செல்லும் வகையில் அவர்கள் கார்களை இயக்கியிருக்கின்றனர். இதனால், அந்த விரைவு சாலையில் சில மணி நேரங்கள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கின்றது. இவ்வாறு, பல்வேறு விதிமீறல்களில் சிறை தண்டனை அனுபவித்துவிட்டு வெளியே வந்த கஜனன் மர்னேவின் கூட்டாளிகள் மற்றும் ஆதராவாளர்கள் ஈடுபட்டிருக்கின்றனர்.

இத்தகைய குற்றங்களை வீடியோக்களின் ஆய்வு செய்து வரும் போலீஸார், விரைவில் அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டோல் கேட்டுகளில் கட்டணம் செலுத்தாதது, ஜன்னல் வழியே எட்டி பார்த்து ஆபத்தான பயணத்தை மேற்கொண்டது, அதிக வேக சாலையில் அடைத்தவாறு பேரணி நடத்தியது என பல்வேறு பிரிவுகளின்கீழ் போலீஸார் வழக்கு பதிந்திருக்கின்றனர்.
ஆகையால், விரைவில் மீண்டும் கஜனன் மர்னே மீது அதிரடி நடவடிக்கையைப் போலீஸார் மேற்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. பிரபல ரவுடிகளான அமன் பாடே மற்றும் பப்பு கவடே ஆகியோரை கொலை செய்த வழக்கிலேயே இவர் கடந்த காலங்களில் சிறை தண்டனை அனுபவித்து வந்தார். இந்த தண்டனை காலம் நிறைவு பெற்று வெளியே வந்த போதே பல்வேறு விதிமீறல்களில் இவர் ஈடுபட்டிருக்கின்றார்.

இவர்களின் இந்த செயல் மும்பை-புனே வாசிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. குறிப்பாக, தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வர இருப்பதாக சிலரால் நம்பப்படும் சசிகலாவின் விடுதலையின்போதுகூட இத்தகைய செயல் நடைபெறவில்லை. இதெல்லாம் கொஞ்சம் ஓவர் என்று தமிழக வாசிகள் சிலர் புலம்பி தள்ளியுள்ளனர். அதேசமயம், விதிமீறலில் ஈடுபட்ட அனைவர் மீதும் மும்பை போலீஸார் வழக்கு பதிந்திருக்கின்றனர்.