இந்திய அறிமுகத்திற்கு தயாராக புதிய மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஏ45 எஸ்!! டீசர் படங்கள் வெளியீடு!

வருகிற நவம்பர் 17ஆம் தேதி அரங்கேறவுள்ள இந்திய அறிமுகத்திற்கு முன்னதாக மெர்சிடிஸ்-பென்ஸ் அதன் புதிய ஏஎம்ஜி ஏ45 எஸ் 4மேட்டிக்+ காரின் டீசர் படங்களை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் இந்த புதிய மெர்சிடிஸ் ஏஎம்ஜி காரினை பற்றி நமக்கு தெரியவரும் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்திய அறிமுகத்திற்கு தயாராக புதிய மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஏ45 எஸ்!! டீசர் படங்கள் வெளியீடு!

உலகின் முன்னணி சொகுசு கார் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் மெர்சிடிஸ்-பென்ஸ் முற்றிலும் புதிய ஏஎம்ஜி ஏ45 எஸ் 4மேட்டிக்+ காரினை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த புதிய மெர்சிடிஸ் கார் வரும் நவ.17ஆம் தேதி இரவு 7.30- 8.30க்கு வெளியீடு செய்யப்பட உள்ளது.

இந்திய அறிமுகத்திற்கு தயாராக புதிய மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஏ45 எஸ்!! டீசர் படங்கள் வெளியீடு!

விலை உள்ளிட்ட காரை பற்றிய பிற முக்கிய விபரங்கள் அப்போது வெளியிட திட்டமிடப்பட்டுள்ளன. இந்த நிலையில் தான் தற்போது புதிய ஏஎம்ஜி ஏ45 எஸ் 4மேட்டிக்+ கார் தொடர்பான டீசர் படங்கள் மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்திய அறிமுகத்திற்கு தயாராக புதிய மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஏ45 எஸ்!! டீசர் படங்கள் வெளியீடு!

இந்த டீசர் படங்களில் கார் நிழல் போன்ற தோற்றத்தில் காட்டப்பட்டுள்ளது. இதனால், முற்றிலும் உருவாக்கப்பட்ட நிலையில் இறக்குமதி செய்யப்பட்டு (சிபியூ முறையில்) விற்பனை செய்யப்பட உள்ள இந்த புதிய ஏஎம்ஜி காரினை இந்த படங்களில் தெளிவாக காண முடியவில்லை என்றாலும், காரின் வெளிப்பக்கத்தில் கொண்டுவரப்பட உள்ள அப்டேட்கள் தெரிய வந்துள்ளன.

இந்திய அறிமுகத்திற்கு தயாராக புதிய மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஏ45 எஸ்!! டீசர் படங்கள் வெளியீடு!

இதன்படி, புதிய ஏஎம்ஜி ஏ45 எஸ் 4மேட்டிக்+ மாடல் முன்பக்கத்தில் செங்குத்தான ஸ்லாட்களுடன் க்ரில், எல்இடி டிஆர்எல்கள், அகலமான காற்று ஏற்பான்கள், 19-இன்ச் அலாய் சக்கரங்கள், பக்கவாட்டு அடிப்பாகங்கள், அகலமான சக்கர வளைவுகள், புதிய எல்இடி டெயில்லைட்கள், பின்பக்க டிஃப்யூஸர் மற்றும் நான்கு-முனை எக்ஸாஸ்ட் குழாய்கள் போன்றவற்றை பெற்றுவரலாம் என எதிர்பார்க்கிறோம்.

இந்திய அறிமுகத்திற்கு தயாராக புதிய மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஏ45 எஸ்!! டீசர் படங்கள் வெளியீடு!

உட்புறத்தில், இந்த புதிய மெர்சிடிஸ்-ஏஎம்ஜி கார் இன்ஃபோடெயின்மெண்ட்டிற்கு ஒன்று, இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டருக்கு ஒன்று என அளவில் பெரிய இரு திரைகளை டேஸ்போர்டில் கொண்டிருக்கும். அத்துடன் ஸ்போர்ட் இருக்கைகள், நப்பா லெதர் உள்ளமைவு, சுற்றிலும் மஞ்சள் நிற தொடுதல்கள் மற்றும் 3-ஸ்போக் பல-செயல்பாட்டு ஸ்டேரிங் சக்கரம் உள்ளிட்டவையும் வழங்கப்படும்.

இந்திய அறிமுகத்திற்கு தயாராக புதிய மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஏ45 எஸ்!! டீசர் படங்கள் வெளியீடு!

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு புதிய மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஏ45 எஸ் 4மேட்டிக்+ காரில் 2.0 லிட்டர் 4-சிலிண்டர், டர்போ-பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட உள்ளது. அதிகப்பட்சமாக 416 பிஎச்பி மற்றும் 500 என்எம் டார்க் திறனை இந்த டர்போ-பெட்ரோல் என்ஜின் வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

இந்திய அறிமுகத்திற்கு தயாராக புதிய மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஏ45 எஸ்!! டீசர் படங்கள் வெளியீடு!

இது இயக்க ஆற்றலை 8-ஸ்பீடு இரட்டை-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனின் வாயிலாக காரின் அனைத்து சக்கரங்களுக்கும் வழங்கக்கூடியது. இவற்றின் உதவியுடன் 0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 3.9 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய இந்த ஏஎம்ஜி ஏ45 எஸ் காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 270கிமீ ஆகும்.

இந்திய அறிமுகத்திற்கு தயாராக புதிய மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஏ45 எஸ்!! டீசர் படங்கள் வெளியீடு!

அளவில் சிறியதாக இருப்பினும் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி கார்கள் வரிசையில் அதிவேகமான மாடலாக இது விளங்குகிறது. மொத்தம் 6 விதமான டிரைவிங் மோட்களுடன் புதிய ஏஎம்ஜி ஏ45 எஸ் கார் வழங்கப்பட உள்ளது. முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு சிபியூ முறையில் டெலிவிரி செய்யப்பட உள்ள இந்த புதிய மெர்சிடிஸ்-ஏஎம்ஜி காரின் விலையினை ரூ.70- 85 லட்சத்தில் எதிர்பார்க்கிறோம்.

இந்திய அறிமுகத்திற்கு தயாராக புதிய மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஏ45 எஸ்!! டீசர் படங்கள் வெளியீடு!

ஜெர்மனியில் அஃபால்டர்பாக் என்ற பகுதியில் உள்ள தொழிற்சாலையில் உருவாக்கப்பட்டு வருகின்ற ஏஎம்ஜி ஏ45 எஸ் மாடல் லிமிடெட் வெர்சனாக மிகவும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது. இதனால் நாம் எதிர்பார்க்கும் விலையை காட்டிலும் இந்த ஏஎம்ஜி மாடலின் விலை அதிகமாக நிர்ணயிக்கப்படுவதற்கும் வாய்ப்புள்ளது.

இந்திய அறிமுகத்திற்கு தயாராக புதிய மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஏ45 எஸ்!! டீசர் படங்கள் வெளியீடு!

இவை தவிர்த்த புதிய ஏஎம்ஜி எஸ் மாடல் குறித்த மற்ற விபரங்கள் அனைத்தும் விரைவில் அறிமுகத்தின் போது தான் கிடைக்க பெறும். இதற்கிடையில் சமீபத்தில் மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியாவில் சில்லறை வணிகத்தில் அதன் எதிர்கால திட்டங்கள் குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தது.

இந்திய அறிமுகத்திற்கு தயாராக புதிய மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஏ45 எஸ்!! டீசர் படங்கள் வெளியீடு!

இதன்படி கடந்த அக்.22ஆம் தேதி ‘எதிர்கால சில்லறை விற்பனை' என்ற பெயரில் புதிய ப்ளாட்ஃபாரத்தை இந்த லக்சரி கார் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. இதனை சுருக்கமாக ROTF என அழைக்கும் மெர்சிடிஸ் நிறுவனம், இதன் மூலம் இந்திய சந்தையில் தனது பிரீமியம் கார்கள் எந்த அளவில் மறுவரையறை செய்யப்பட வேண்டும் என்பதை அளவீடு செய்யவுள்ளது.

Most Read Articles

English summary
Mercedes AMG A45s Teaser.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X