2021ல் இந்தியர்கள் கூகுளில் எந்த காரை அதிகம் தேடினாங்க தெரியுமா?.. ஐந்து கார்களைதான் ரொம்ப தேடி இருக்காங்க!

2021ம் ஆண்டில் இந்தியர்கள் கூகுள் தேடு பொறி வாயிலாக அதிகம் தேடிய ஐந்து கார்களின் பட்டியலை இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் இது கூடுதல் விபரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

2021ல் இந்தியர்கள் கூகுளில் எந்த காரை அதிகம் தேடி இருக்காங்க தெரியுமா? ஐந்து கார் மாடல்களைதான் ரொம்ப தேடி இருக்காங்க!

வாகனம் மீது மோகம் இல்லாத நபர்களை பார்ப்பது மிகவும் கடினம். இதற்கு நாளுக்கு நாள் இந்திய சாலைகளில் அதிகரித்து வரும் புதிய வாகனங்களின் எண்ணிக்கையே சான்று. குறிப்பாக, இந்தியர்கள் எஸ்யூவி கார்களுக்கு மிக அமோகமான வரவேற்பு நிலவி வருகின்றது. அதேநேரத்தில், ஆரம்ப நிலை மற்றும் சிறிய கார்கள் பிரிவில் விற்பனைக்குக் கிடைக்கும் செடான் மற்றும் ஹேட்ச்பேக் ரக கார்களுக்கும் நம் நாட்டில் தொடர்ச்சியாக வரவேற்பு அதிகமாக கிடைத்து வருகின்றது.

2021ல் இந்தியர்கள் கூகுளில் எந்த காரை அதிகம் தேடி இருக்காங்க தெரியுமா? ஐந்து கார் மாடல்களைதான் ரொம்ப தேடி இருக்காங்க!

இதனை உறுதிப்படுத்தும் வகையில் கூகுள் நிறுவனம் ஓர் தகவலை கூகுள் நிறுவனம் வெளியிட்டிருக்கின்றது. இந்தியர்கள் அதிக ஆர்வத்துடன் 'கூகுள் தேடு பொறி' தளத்தில் தேடிய கார்களின் பட்டியலையே வெளியிட்டிருக்கின்றது. அந்தவகையில், அது வெளியிட்டிருக்கும் ஐந்து கார்களின் பட்டியலையே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். எஸ்யூவி-க்கள் அல்லாத சிறிய மற்றும் ஆரம்ப நிலையில் விற்பனைக்குக் கிடைக்கும் கார்கள் பற்றிய தகவலாகும். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

2021ல் இந்தியர்கள் கூகுளில் எந்த காரை அதிகம் தேடி இருக்காங்க தெரியுமா? ஐந்து கார் மாடல்களைதான் ரொம்ப தேடி இருக்காங்க!

மாருதி சுசுகி டிசையர் (Maruti Suzuki Dzire):

மாருதி சுசுகி டிசையர் இந்தியாவின் மிக சிறந்த விற்பனையாகும் செடான் ரக காராக இருக்கின்றது. இக்காரை 2021ம் ஆண்டில் மட்டும் 4.5 லட்சம் பேர் மாதம் ஒன்றிற்கு கூகுளில் தேடி இருக்கின்றனர். இதன் விளைவாக இக்கார் இந்த பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்திருக்கின்றது. இந்த சப்-காம்பேக்ட் ரக காருக்கு இந்தியர்கள் ரசிகர்கள் அதிகம் என்பதை வெளிக்காட்டும் வகையில் இந்த தகவல் அமைந்திருக்கின்றது.

2021ல் இந்தியர்கள் கூகுளில் எந்த காரை அதிகம் தேடி இருக்காங்க தெரியுமா? ஐந்து கார் மாடல்களைதான் ரொம்ப தேடி இருக்காங்க!

மாருதி சுசுகி டிசையர் ரூ. 5.98 லட்சம் தொடங்கி ரூ. 9.03 லட்சம் வரையிலான விலையில் விற்கப்பட்டு வருகின்றது. கூடுதல் இட வசதி, அதிக சிறப்பம்சங்கள் மற்றும் ஸ்டைலான தோற்றம் ஆகியவற்றின் காரணமாக இக்காருக்கு இப்போதும் அதிக டிமாண்ட் நிலவி வருகின்றது. இக்காரில், 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின், மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுடன் வழங்கப்படுகின்றது.

2021ல் இந்தியர்கள் கூகுளில் எந்த காரை அதிகம் தேடி இருக்காங்க தெரியுமா? ஐந்து கார் மாடல்களைதான் ரொம்ப தேடி இருக்காங்க!

டாடா அல்ட்ராஸ் (Tata Altroz)

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு வழங்கும் அதிக பாதுகாப்பான கார் மாடல்களில் இதுவும் ஒன்றாகும். இது ஓர் பிரீமியம் தர ஹேட்ச்பேக் மாடல் ஆகும். குளோபல் என்சிஏபி அமைப்பு நடத்திய மோதல் ஆய்வில் இக்கார் ஐந்திற்கு 5 ஸ்டார்களை பெற்றது. இவ்வாகனத்தையே மாருதி டிசையர் காருக்கு அடுத்தபடியாக இந்தியாவில் அதிகப்படியானோர் தேடி இருக்கின்றனர்.

2021ல் இந்தியர்கள் கூகுளில் எந்த காரை அதிகம் தேடி இருக்காங்க தெரியுமா? ஐந்து கார் மாடல்களைதான் ரொம்ப தேடி இருக்காங்க!

டாடா அல்ட்ராஸ் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் நேட்சுரல்லி அஸ்பயர்டு பெட்ரோல் என இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இத்துடன், 1.5 லிட்டர் டீசல் எஞ்ஜின் தேர்வும் வழங்கப்படுகின்றது. இவற்றுடன், 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழக்கமான அம்சமாக வழங்கப்படுகின்றது. டாடா அல்ட்ராஸ் ஹேட்ச்பேக் ரூ. 5.89 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது.

2021ல் இந்தியர்கள் கூகுளில் எந்த காரை அதிகம் தேடி இருக்காங்க தெரியுமா? ஐந்து கார் மாடல்களைதான் ரொம்ப தேடி இருக்காங்க!

ஹோண்டா சிட்டி (Honda City)

ஹோண்டா சிட்டி இந்தியாவின் மிகவும் பிரபலமான செடான் ரக கார்களில் ஒன்றாக இருக்கின்றது. இந்த காரை 3.6 லட்சம் பேர் மாதம் ஒன்றிற்கு இந்தியர்கள் கூகுளில் தேடி இருக்கின்றனர். இதன் விளைவாக இந்த பட்டியலில் சிட்டி மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கின்றது.

2021ல் இந்தியர்கள் கூகுளில் எந்த காரை அதிகம் தேடி இருக்காங்க தெரியுமா? ஐந்து கார் மாடல்களைதான் ரொம்ப தேடி இருக்காங்க!

ஹோண்டா சிட்டி '2021 ஆம் ஆண்டுக்கான சிஎன்பி பார்வையாளர்களின் சாய்ஸ் கார் விருது' என்ற பட்டத்தை வென்றிருக்கின்றது. இந்த கார் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்ஜின் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இத்துடன், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளும் இதில் வழங்கப்படுகின்றது.

2021ல் இந்தியர்கள் கூகுளில் எந்த காரை அதிகம் தேடி இருக்காங்க தெரியுமா? ஐந்து கார் மாடல்களைதான் ரொம்ப தேடி இருக்காங்க!

டாடா டியாகோ (Tata Tiago)

டாடாவின் மற்றுமொரு தயாரிப்பும் இந்த பட்டியலில் இடம் பெற்றிருப்பது பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வாகனமும் அதிக பாதுகாப்பு திறன் கொண்டதாக இருக்கின்றது. இக்கார் ஐந்திற்கு நான்கு நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை குளோபல் என்சிஏபியின் மோதல் ஆய்வில் பெற்றது.

2021ல் இந்தியர்கள் கூகுளில் எந்த காரை அதிகம் தேடி இருக்காங்க தெரியுமா? ஐந்து கார் மாடல்களைதான் ரொம்ப தேடி இருக்காங்க!

இதைத் தொடர்ந்து இக்காருக்கு இந்தியாவில் மதிப்பு கூட தொடங்கிவிட்டது. இதன் விளைவாக இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட சிறிய கார்களின் பட்டியலில் டியாகோ நான்காவது இடத்தைப் பிடித்திருக்கின்றது. '2017 சிஎன்பி என்ட்ரி ஹேட்ச்பேக் ஆஃப் தி இயர்' விருதை டியாகோ பெற்றிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

2021ல் இந்தியர்கள் கூகுளில் எந்த காரை அதிகம் தேடி இருக்காங்க தெரியுமா? ஐந்து கார் மாடல்களைதான் ரொம்ப தேடி இருக்காங்க!

மாருதி சுசுகி ஆல்டோ 800 (Maruti Suzuki Alto 800)

மாருதி சுசுகி ஆல்டோ 800 டிரைவருடன் சேர்த்து ஐந்து பேர் அமர்ந்து பயணிக்கும் வசதிக் கொண்ட சிறிய ஹேட்ச்பேக் காராகும். இக்காரை இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் தேடி இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இக்காரில் 800 சிசி பெட்ரோல் எஞ்ஜின் தேர்வு மட்டுமே வழங்கப்படுகின்றது.

2021ல் இந்தியர்கள் கூகுளில் எந்த காரை அதிகம் தேடி இருக்காங்க தெரியுமா? ஐந்து கார் மாடல்களைதான் ரொம்ப தேடி இருக்காங்க!

மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் இரண்டு தசாப்தங்களை (இருபது ஆண்டுகளை)-க் கடந்தும் விற்பனையில் இருந்து வருகின்றது. அடுத்த ஆண்டு இதன் புதிய தலைமுறை வெர்ஷனை விற்பனைக்குக் களிமிறக்க மாருதி சுசுகி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Most searched top five entry and compact segment hatchbacks and sedans cars in google in 2021
Story first published: Friday, December 24, 2021, 19:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X