இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் செடான் காருக்கு இந்த நிலைமையா!! விற்பனை பாதியாக சரிந்தது!

கடந்த 2021 அக்டோபர் மாதத்தில் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்ட செடான் கார்கள் குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் செடான் காருக்கு இந்த நிலைமையா!! விற்பனை பாதியாக சரிந்தது!

காம்பெக்ட் எஸ்யூவி மற்றும் இதனை காட்டிலும் அளவில் சற்று பெரிய நடுத்தர-அளவு எஸ்யூவி கார்களுக்கான மார்க்கெட் இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளில் பெரிய அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. எஸ்யூவி கார்களின் வளர்ச்சியினால் செடான் கார்களை அவ்வளவாக இப்போதெல்லாம் சாலையில் பார்க்க முடிவதில்லை.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் செடான் காருக்கு இந்த நிலைமையா!! விற்பனை பாதியாக சரிந்தது!

கடந்த அக்டோபர் மாதத்தில் அதிகப்பட்சமாக மாருதி சுஸுகி நிறுவனம் அதன் செடான் மாடலான டிசைரை மொத்தம் 8,077 யூனிட்கள் விற்பனை செய்துள்ளது. கடந்த மாதத்தில் இந்திய சந்தையில் அதிகம் விற்பனையான செடான் கார் என்றால் அது டிசைர் தான். இருப்பினும் 2020 டிசம்பரில் இதனை காட்டிலும் அதிகமாக சுமார் 17,675 மாருதி டிசைர் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் செடான் காருக்கு இந்த நிலைமையா!! விற்பனை பாதியாக சரிந்தது!

இந்த வகையில் இந்த இந்திய-ஜப்பானிய கூட்டு நிறுவனத்தின் செடான் காரின் விற்பனை கடந்த மாதத்தில் சுமார் 54.3 சதவீதம் குறைந்துள்ளது. மாருதி டிசைர் மட்டுமல்ல, ஹூண்டாய் வெர்னா, ஸ்கோடா சூப்பர்ப் & ஸ்கோடா ஆக்டேவியா உள்ளிட்ட மாடல்களை தவிர்த்து டாப்-10 லிஸ்ட்டில் உள்ள மற்ற அனைத்து செடான் கார்களும் எதிர்மறையான விற்பனையை கடந்த அக்டோபர் மாதத்தில் பதிவு செய்துள்ளன.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் செடான் காருக்கு இந்த நிலைமையா!! விற்பனை பாதியாக சரிந்தது!

இந்த வரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள ஹோண்டா சிட்டி செடான் கார்களின் விற்பனை 12.4% 2020 அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளது. கடந்த மாதத்தில் 3,611 சிட்டி கார்களை ஹோண்டா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. அதுவே 2020 அக்டோபரில் 4,124 சிட்டி கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் செடான் காருக்கு இந்த நிலைமையா!! விற்பனை பாதியாக சரிந்தது!

ஐந்தாம் தலைமுறை ஹோண்டா சிட்டி இந்தியாவில் கடந்த ஆண்டில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது. ஜப்பானிய ஹோண்டா நிறுவனம் நம் நாட்டில் அதிகளவில் விற்பனை செய்யும் மாடலாக உள்ள சிட்டி, இந்தியா மட்டுமல்ல, வெளிநாட்டு சந்தைகளிலும் பிரபலமானதாக உள்ளது. இந்தோனிஷியாவில் சில தினங்களுக்கு முன்பு தான் புத்தம் புதிய அப்டேட் செய்யப்பட்ட சிட்டி கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் செடான் காருக்கு இந்த நிலைமையா!! விற்பனை பாதியாக சரிந்தது!

ஹோண்டா பிராண்டில் இருந்து விற்பனை செய்யப்படும் காம்பெக்ட் செடான் மாடலான அமேஸ் கடந்த மாதத்தில் 3,009 யூனிட்கல் விற்பனை செய்யப்பட்டு இந்த லிஸ்ட்டில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. 2020 அக்டோபர் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட ஹோண்டா அமேஸ் கார்களின் எண்ணிக்கை 4,709 ஆகும். இவற்றிற்கு அடுத்த 4வது மற்றும் 5வது இடங்களில் ஹூண்டாய் தயாரிப்புகள் உள்ளன.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் செடான் காருக்கு இந்த நிலைமையா!! விற்பனை பாதியாக சரிந்தது!

ஹூண்டாயின் காம்பெக்ட் செடான் காரான அவ்ராவின் சுமார் 51.5% குறைந்துள்ளது. 2020 அக்டோபரில் 5,577 அவ்ரா கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த மாதத்தில் வெறும் 2,701 யூனிட்களே விற்கப்பட்டுள்ளது. வெர்னா நிர்வாக செடான் கார் 2,438 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 2020 அக்டோபரில் விற்கப்பட்ட வெர்னா கார்களை காட்டிலும் 12.5% அதிகமாகும்.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் செடான் காருக்கு இந்த நிலைமையா!! விற்பனை பாதியாக சரிந்தது!

6வது இடத்தில் டாடா மோட்டார்ஸின் பாதுகாப்பான செடான் காரான டிகோர் உள்ளது. 2020 அக்டோபர் உடன் ஒப்பிடுகையில் டிகோரின் விற்பனை கடந்த மாதத்தில் பெரிய அளவில் குறையவில்லை. வெறும் 8.4% தான் குறைந்துள்ளது. கடந்த மாதத்தில் 1,377 டிகோர் கார்களும், கடந்த ஆண்டு அக்டோபரில் 1,501 யூனிட்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 7வது இடத்தில் 1,069 யூனிட்களின் விற்பனை உடன் மாருதியின் சற்று விலைமிக்க செடான் மாடலான சியாஸ் உள்ளது.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் செடான் காருக்கு இந்த நிலைமையா!! விற்பனை பாதியாக சரிந்தது!

இவற்றிற்கு அடுத்துள்ள மாடல்கள் 300க்கும் குறைவான யூனிட்களே கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 8 மற்றும் 9ஆம் இடங்களில் ஸ்கோடா பிராண்டின் செடான் மாடல்களான சூப்பர்ப் & ஆக்டேவியா உள்ளன. இவை இரண்டின் விற்பனையும் 2020 அக்டோபரை காட்டிலும் கணிசமாக உயர்ந்துள்ளதாக முன்னரே கூறியிருந்தோம்.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் செடான் காருக்கு இந்த நிலைமையா!! விற்பனை பாதியாக சரிந்தது!

இதில் குறிப்பாக ஸ்கோடா ஆக்டேவியா கார்களின் விற்பனை சுமார் 606% அதிகரித்துள்ளது. இந்த டாப்-10 லிஸ்ட்டில் கடைசி இடத்தில் மற்றொரு ஸ்கோடா செடான் காரான ராபிட் உள்ளது. ஆனால் ராபிட்டின் விற்பனை சுமார் 86.8% குறைந்துள்ளது. ஏனெனில் ராபிட்டின் விற்பனை இந்தியாவில் ஒவ்வொரு பகுதியாக நிறுத்தப்பட்டு வருகிறது.

Most Read Articles
மேலும்... #விற்பனை #sales
English summary
Most Sold Sedans In Oct 2021, Top-10 List.
Story first published: Sunday, November 7, 2021, 3:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X