இதுக்குகூட சிபாரிசா! இந்திய அளவில் வைரலாகும் பாஜக எம்பியின் சிபாரிசு கடிதம்... எதுவும் சொல்றதுக்கு இல்ல!!

பாஜக எம்பி ஒருவர் எழுதிய சிபாரிசு கடிதம் நாடு முழுவதும் வைரலாகத் தொடங்கியுள்ளது. அப்படி என்ன கடிதம் அது என்பது பற்றிய தகவலை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

இதுக்குகூட சிபாரிசா! இந்திய அளவில் வைரலாகும் பாஜக எம்பியின் சிபாரிசு கடிதம்... எதும் சொல்றதுக்கு இல்ல!!

பாரதிய ஜனதா கட்சி (பாஜக)-யின் பாராளுமன்ற உறுப்பினர் சன்னி தியோல். இவர் பஞ்சாப் மாநிலத்தின் குர்தஸ்புர் தொகுதியின் எம்பி ஆவார். இவர் அண்மையில் எழுதிய சிபாரிசு கடிதம் ஒன்றே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது.

இதுக்குகூட சிபாரிசா! இந்திய அளவில் வைரலாகும் பாஜக எம்பியின் சிபாரிசு கடிதம்... எதும் சொல்றதுக்கு இல்ல!!

அப்படி எதற்காக அவர் சிபாரிசு கடிதம் எழுதினார் என்பது பற்றிய தகவலையே இப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம். சன்னி தியோல் மஹிந்திரா நிறுவனத்தின் கார் விற்பனையாளர் ஒருவருக்கே தனது சிபாரிசு கடிதத்தை எழுதியிருக்கின்றார்.

இதுக்குகூட சிபாரிசா! இந்திய அளவில் வைரலாகும் பாஜக எம்பியின் சிபாரிசு கடிதம்... எதும் சொல்றதுக்கு இல்ல!!

பொதுவாக, அரசியல்வாதிகள் தங்களின் சிபாரிசு கடிதத்தை பணியமர்வுக்காக அல்லது படிப்பிற்காக அல்லது அரசு துறைகளில் தங்களைச் சேர்ந்தவர்களுக்கு உடனடியாக வேலை முடிவதற்காக, இதுபோன்ற சில காரணங்களுக்காகவே தங்களின் சிபாரிசு கடிதத்தை வழங்குவர்.

இதுக்குகூட சிபாரிசா! இந்திய அளவில் வைரலாகும் பாஜக எம்பியின் சிபாரிசு கடிதம்... எதும் சொல்றதுக்கு இல்ல!!

இந்த நிலையில், சற்று மாறுதலாக சன்னி தியோல் உடனடியாக காரை வழங்கக் கோரி தனது சிபாரிசு கடிதத்தை எழுதியிருக்கின்றார். இதுகுறித்த கடிதமே தற்போது இணையத்தில் அதிக வேகத்தில் வைரலாகி வருகின்றது. மஹிந்திரா நிறுவனத்தின் பிரபலமான கார்களில் மாடல்களில் ஒன்று தார் எஸ்யூவி.

இதுக்குகூட சிபாரிசா! இந்திய அளவில் வைரலாகும் பாஜக எம்பியின் சிபாரிசு கடிதம்... எதும் சொல்றதுக்கு இல்ல!!

இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில் மிக அமோகமான வரவேற்பு நிலவி வருகின்றது. இதனால், நாட்டின் குறிப்பிட்ட சில பகுதிகளில் காத்திருப்பு காலம் சற்று மிக அதிகமாக தென்படுகின்றது. விற்பனையாளர், மாநிலம், நகரம் ஆகியவற்றைப் பொருத்து ஒரு வருடங்கள் வரை காத்திருப்பு காலம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுக்குகூட சிபாரிசா! இந்திய அளவில் வைரலாகும் பாஜக எம்பியின் சிபாரிசு கடிதம்... எதும் சொல்றதுக்கு இல்ல!!

இந்த மாதிரியான அதிக டிமாண்ட் உள்ள தார் எஸ்யூவி காரையே தனக்கு வேண்டப்பட்டவருக்கு உடனடியாக வழங்குமாறு சிபாரிசு கடிதத்தை எழுதியிருக்கின்றார் எம்பி சன்னி தியோல். இந்த கடிதம் பஞ்சாப் மாநிலத்தின் பதான்கோட் பகுதியில் செயல்பட்டு வரும் ஓர் மஹிந்திரா ஷோரூமுக்கு எழுதப்பட்டதாகும்.

இதுக்குகூட சிபாரிசா! இந்திய அளவில் வைரலாகும் பாஜக எம்பியின் சிபாரிசு கடிதம்... எதும் சொல்றதுக்கு இல்ல!!

இந்த சிபாரிசு கடிதத்தை யாருக்காக சன்னி தியோல் எழுதினார் என்பதுதான் கூடுதல் சுவாரஷ்யமானது. இக்கடிதத்தை சுஜன்பூர் எம்எல்ஏ தினேஷ் சிங் தாக்கூரின் மகள் சுர்பி தாக்கூருக்காக அவர் எழுதியிருக்கின்றார். இதுகுறித்து அவர் கடிதத்தில் எழுதியதாவது, "சுஜன்பூர் எம்எல்ஏவின் மகள் சுர்பி தாக்கூருக்கு முன்னுரிமையின் அடிப்படையில் உடனடியாக தார் எஸ்யூவி காரை வழங்க வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.

இதுக்குகூட சிபாரிசா! இந்திய அளவில் வைரலாகும் பாஜக எம்பியின் சிபாரிசு கடிதம்... எதும் சொல்றதுக்கு இல்ல!!

மேலும், "புதிய தார் எஸ்யூவி காருக்காக சுர்பி ஏற்கனவே முன்தொகையாக ரூ. 21 லட்சத்தைச் செலுத்திவிட்டதாகவும், உடனடியாக அவருக்கு காரை டெலிவரி கொடுங்கள்" என கூறப்பட்டிருக்கின்றது. தற்போது வெளியாகியிருக்கும் தகவலின்படி, சுஜான்பூர் எம்எல்ஏ தினேஷ் சிங் தாக்கூரின் மகள் சுர்பிக்கு இன்னும் சில நாட்களில் திருமணமாக இருப்பதாக கூறப்படுகின்றது.

இதுக்குகூட சிபாரிசா! இந்திய அளவில் வைரலாகும் பாஜக எம்பியின் சிபாரிசு கடிதம்... எதும் சொல்றதுக்கு இல்ல!!

இதற்காகவே புதிதாக கார் வாங்கும் திட்டம் போடப்பட்டிருக்கின்றது. இதனடிப்படையிலேயே நிறுவனத்திடம் கோரிக்கை வைக்கும் விதமாக இந்த சிபாரிசு கடிதத்தை சன்னி தியோல் எழுதியிருக்கின்றார். ஆனால், இதற்கு நிர்வாகத்திடம் என்ன பதில் கூறப்பட்டது என்பது பற்றிய தகவல் வெளிவரவில்லை.

இதுக்குகூட சிபாரிசா! இந்திய அளவில் வைரலாகும் பாஜக எம்பியின் சிபாரிசு கடிதம்... எதும் சொல்றதுக்கு இல்ல!!

இருப்பினும், பாஜக எம்பியின் சிபாரிசு கடிதம் பற்றிய தகவல் இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மஹிந்திரா தார் எஸ்யூவி இந்தியாவில் ஆறு விதமான நிற தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. நபோலி கருப்பு, ரேஜ் சிவப்பு, அக்குவாமெரைன், கேலக்ஸி கிரே, ராக்கி பீஜ் மற்றும் மிஸ்டிக் காப்பர் ஆகிய நிறங்களில் தார் எஸ்யூவி கிடைக்கிறது.

இதுக்குகூட சிபாரிசா! இந்திய அளவில் வைரலாகும் பாஜக எம்பியின் சிபாரிசு கடிதம்... எதும் சொல்றதுக்கு இல்ல!!

இதுமட்டுமின்றி இருவிதமான ரூஃப் தேர்வுகளும் இக்காரில் வழங்கப்படுகின்றது. மேலும், முன்பிருந்த பழைய தலைமுறை தார் காரைக் காட்டிலும் பல்வேறு சிறப்பு வசதிகள் புதிய தலைமுறை தார் எஸ்யூவியில் வழங்கப்பட்டிருக்கின்றன. ஆகையால், முன்பு ஆஃப்-ரோடு வாகனமாக மட்டும் காணப்பட்ட தார் தற்போது குடும்பங்களுக்கான வாகனமாகவும் மாறியிருக்கின்றது. இந்த எஸ்யூவியை 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டர்போ-டீசல் என இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளில் மஹிந்திரா வழங்குகின்றது.

இதுக்குகூட சிபாரிசா! இந்திய அளவில் வைரலாகும் பாஜக எம்பியின் சிபாரிசு கடிதம்... எதும் சொல்றதுக்கு இல்ல!!

இதில், பெட்ரோல் எஞ்ஜின் அதிகபட்சமாக 150 பிஎஸ் பவரையும், டீசல் எஞ்ஜின் அதிகபட்சமாக 130 பிஎஸ் பவரையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த எஞ்ஜின்களுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படுகிறது. தொடர்ந்து, கூடுதல் சிறப்பு வசதிகளாக எலெக்ட்ரானிக்கல்லி அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓஆர்விஎம்கள், 7 இன்சிலான தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் (இது ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே வசதிக் கொண்டது), சாவியில்லா நுழைவு என பல்வேறு சிறப்பு தொழில்நுட்பங்களுடன் இக்கார் விற்பனைக்குக் கிடைப்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Mp sunny deol writes letter for requesting to expedite delivery of thar suv to mla s daughter
Story first published: Saturday, August 14, 2021, 13:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X