கன்னியாகுமரி எம்பி விஜய் வசந்த் வாங்கிய புத்தம் புதிய கார்... இதோட விலை எவ்வளவு தெரிஞ்சா மயக்கமே போட்ருவீங்க!

கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் அவர் பயன்படுத்தி வந்த டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) காரை மாற்றிவிட்டு விலையுயர்ந்த சொகுசு கார் ஒன்றை வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த காரின் விலை மற்றும் பிற சிறப்பம்சங்கள் பற்றிய முக்கிய விபரத்தை இந்த பதிவில் காணலாம், வாங்க.

கன்னியாகுமரி எம்பி விஜய் வசந்த் வாங்கிய புத்தம் புதிய கார்... இதோட விலை எவ்வளவு தெரிஞ்சா மயக்கமே போட்ருவீங்க!

கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் அவர் பயன்படுத்தி வந்த டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) காரை மாற்றிவிட்டு தற்போது புத்தம் புதிய ஓர் விலையுயர்ந்த சொகுசு காரை வாங்கியிருப்பதாக சமூக வலை தளங்கள் வாயிலாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை உறுதிப்படுத்தக்கூடிய அவரின் புதிய காரின் வீடியோ மற்றும் படங்களும் வெளியாகியிருக்கின்றன.

கன்னியாகுமரி எம்பி விஜய் வசந்த் வாங்கிய புத்தம் புதிய கார்... இதோட விலை எவ்வளவு தெரிஞ்சா மயக்கமே போட்ருவீங்க!

அரசியல்வாதிகள் மத்தியில் ஃபார்ச்சூனர் காருக்கு நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது. மிகவும் பிரமாண்டமான உருவம், அதிக இட வசதி மற்றும் சொகுசு வசதி என அனைத்திலும் ஃபார்ச்சூனர் கார் சிறப்பான வாகனமாக காட்சியளிக்கின்றது. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் அரசியல்வாதிகள் தொடங்கி தொழிலதிபர்கள் வரை பலரின் விருப்பமான காராக இது மாறியிருக்கின்றது.

கன்னியாகுமரி எம்பி விஜய் வசந்த் வாங்கிய புத்தம் புதிய கார்... இதோட விலை எவ்வளவு தெரிஞ்சா மயக்கமே போட்ருவீங்க!

இந்த மாதிரியான சூழ்நிலையில் கன்னியாகுமரி மக்களவை தொகுதி எம்பி-யான விஜய் வசந்த் டொயோட்டா ஃபார்ச்சூனர் காரை ஓரங்கட்டிவிட்டு புதிதாக லேண்ட் ரோவர் டிஃபென்டர் (Land Rover Defender SUV) சொகுசு கார் மாடலை வாங்கியிருக்கின்றார். இரண்டும் பிரமாண்ட தோற்றம் கொண்ட எஸ்யூவி ரக கார் மாடலே ஆகும். இருப்பினும், ஃபார்ச்சூனர் காரைக் காட்டிலும் மிக அதிக சொகுசு வசதிகளைக் கொண்டதாக டிஃபென்டர் எஸ்யூவி காட்சியளிக்கின்றது.

கன்னியாகுமரி எம்பி விஜய் வசந்த் வாங்கிய புத்தம் புதிய கார்... இதோட விலை எவ்வளவு தெரிஞ்சா மயக்கமே போட்ருவீங்க!

லேண்ட் ரோவர் நிறுவனம் புதிய தலைமுறை டிஃபென்டர் எஸ்யூவி காரை கடந்த ஆண்டுதான் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. பழைய தலைமுறையைக் காட்டிலும் பல மடங்கு அதிக சிறப்பு வசதிகளை இது கொண்டிருக்கின்ற காரணத்தினால் இது பழைய தலைமுறை டிஃபென்டர் பயன்பாட்டாளர்களையும் கவர்ந்து வருகின்றது. ஆம், பல பழைய தலைமுறை டிஃபென்டர் பயன்பாட்டாளர்கள் தற்போது புதிய தலைமுறை டிஃபென்டர் பயன்பாட்டிற்கு மாற தொடங்கியிருக்கின்றனர்.

கன்னியாகுமரி எம்பி விஜய் வசந்த் வாங்கிய புத்தம் புதிய கார்... இதோட விலை எவ்வளவு தெரிஞ்சா மயக்கமே போட்ருவீங்க!

இந்த நிலையிலேயே டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் பயன்பாட்டாளர் புதிய தலைமுறை டிஃபென்டர் பயன்பாட்டிற்கு மாறியிருப்பது தெரிய வந்திருக்கின்றது. சிறந்த தொழிலதிபர், நடிகர், தற்போது அரசியல்வாதி என பல ரோல்களை கொண்டிருக்கின்றார் விஜய் வசந்த். ஆகையால், தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் என இவரை தொடர்பவர்களின் வட்டாரம் பல மடங்கு விரிவடைந்து காணப்படுகின்றது.

கன்னியாகுமரி எம்பி விஜய் வசந்த் வாங்கிய புத்தம் புதிய கார்... இதோட விலை எவ்வளவு தெரிஞ்சா மயக்கமே போட்ருவீங்க!

source: autoghiniholic

லேண்ட் ரோவர் டிஃபென்டர் சிவப்பு நிற தேர்வை அவர் வாங்கியிருக்கின்றார். இதுதவிர, இவரிடத்தில்போர்ஷே நிறுவனத்தின் கேயன்னெ போன்ற இன்னும் சில விலையுயர்ந்த கார்களை விஜய் வசந்த் பயன்படுத்தி வருகின்றார். லேண்ட் ரோவர் நிறுவனம் புதிய தலைமுறை டிஃபென்டர் எஸ்யூவி காரை 2020 அக்டோபர் 15ம் தேதி அன்றே இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

கன்னியாகுமரி எம்பி விஜய் வசந்த் வாங்கிய புத்தம் புதிய கார்... இதோட விலை எவ்வளவு தெரிஞ்சா மயக்கமே போட்ருவீங்க!

இக்கார் இரு விதமான உடல் ஸ்டைல்களில் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. டிஃபென்டர் 90 மற்றும் டிஃபென்டர் 110 ஆகிய இரு விதமான தேர்வுகளிலும் அது விற்பனைக்குக் கிடைக்கின்றது. இவற்றிலேயே மாறுபட்ட உடல் தோற்றங்கள் வழங்கப்படுகின்றன. டிஃபென்டர் 110 வெர்ஷன் 5 கதவுகள் மற்றும் 7 இருக்கைகள் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

கன்னியாகுமரி எம்பி விஜய் வசந்த் வாங்கிய புத்தம் புதிய கார்... இதோட விலை எவ்வளவு தெரிஞ்சா மயக்கமே போட்ருவீங்க!

இதன் 90 வெர்ஷன் 3 கதவுகள் மற்றும் 5 இருக்கைகள் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கும். இதில், எந்த தேர்வை விஜய் வசந்த் தேர்வு செய்திருக்கின்றார் என்பது பற்றிய தகவல் தெரியவில்லை. இருப்பினும், இக்கார் இந்தியாவில் ரூ. 86.24 லட்சம் தொடங்கி ரூ. 1.08 கோடி வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும்.

கன்னியாகுமரி எம்பி விஜய் வசந்த் வாங்கிய புத்தம் புதிய கார்... இதோட விலை எவ்வளவு தெரிஞ்சா மயக்கமே போட்ருவீங்க!

லேண்ட் ரோவர் டிஃபென்டர் பன்முக எஞ்ஜின் தேர்வுகளிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல், 3.0 லிட்டர் டர்போ பெட்ரோல், 3.0 லிட்டர் டர்போ டீசல் ஆகிய எஞ்ஜின் தேர்வுகளில் அது விற்பனைக்குக் கிடைக்கிறது. இதில், 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் 300 பிஎஸ் பவரையும், 3.0 லிட்டர் டர்போ பெட்ரோல் 400 பிஎஸ் பவரையும், 3.0 லிட்டர் டர்போ டீசல் 300 பிஎஸ் பவரையும் வெளியேற்றும் திறன் கொண்ட மோட்டார்கள் ஆகும். இத்துடன், தானியங்கி டிரான்ஸ்மிஷன் போன்ற வசதிகளும் இக்காரில் வழங்கப்படுகின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Mp vijay vasanth bought brand new land rover defender suv
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X