மயக்கத்தை வரவைக்கும் விலையில் புதிய சொகுசு கார்... வாங்கியது யார் தெரிஞ்சா மிரண்டுருவீங்க... முழு தகவல்!

மயக்கத்தை வரவழைக்கும் விலைக் கொண்ட புதிய சொகுசு காரை பிரபல தொழிலதிபர் வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

மயக்கத்தை வர வைக்கும் விலையில் புதிய சொகுசு கார்... வாங்கியது யார் தெரிஞ்சா மிரண்டுருவீங்க... முழு தகவல்!

அதிக சொகுசு மற்றும் ஆடம்பர வாகன தயாரிப்பிற்கு பெயர்போன நிறுவனமாக ரோல்ஸ் ராய்ஸ் இருக்கின்றது. பிரிட்டிஷ் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் இந்நிறுவனத்தின் புகழ்மிக்க கார் மாடல்களில் ஒன்று கல்லினன். இந்த மாடலிலேயே அதிக சூப்பர் லக்சூரி வசதிகள் கொண்ட காராக கல்லின் பிளாக் பேட்ஜ் கார் நிறுவனம் விற்பனைச் செய்து வருகின்றது.

மயக்கத்தை வர வைக்கும் விலையில் புதிய சொகுசு கார்... வாங்கியது யார் தெரிஞ்சா மிரண்டுருவீங்க... முழு தகவல்!

முகேஷ் அம்பானியின் அன்டிலியா இல்லத்தின் முன்பு கேமிராவின் சிக்கிய புதிய ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் சொகுசு கார்

இந்த காரையே இந்தியாவின் முன்னணி பணக்காரர் ஒருவர் வாங்கியிருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த வீடியோவை சி12 விளாக் எனும் யுட்யூப் சேனல் வெளியிட்டிருக்கின்றது. இந்த காரை வாங்கிய இந்தியர் வேறு யாருமில்லைங்க, நாட்டின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானிதான் இக்காரை வாங்கியிருக்கின்றார்.

மயக்கத்தை வர வைக்கும் விலையில் புதிய சொகுசு கார்... வாங்கியது யார் தெரிஞ்சா மிரண்டுருவீங்க... முழு தகவல்!

இவரிடத்தில் ஏற்கனவே இரு ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இந்த நிலையிலேயே மூன்றாவதாக புதிய கல்லினன் பிளாக் பேட்ஜ் மாடல் காரை அவர் வாங்கியிருக்கின்றார். இதுவே இந்தியாவின் மிகவும் விலையுயர்ந்த காராகும். இக்கார் இந்திய மதிப்பில் ரூ. 10 கோடிக்கும் அதிகமான விலையில் விற்கப்பட்டு வருகின்றது.

மயக்கத்தை வர வைக்கும் விலையில் புதிய சொகுசு கார்... வாங்கியது யார் தெரிஞ்சா மிரண்டுருவீங்க... முழு தகவல்!

எனவேதான் நாட்டின் மிக விலையுயர்ந்த காராக இது மாறியிருக்கின்றது. இது ஓர் எஸ்யூவி ரக காராகும். இதன் ஆரம்ப நிலை மாடலின் விலையே ரூ. 8.2 கோடி ஆகும். ஆனால், பல்வேறு மாடிஃபிகேஷன் மற்றும் கூடுதல் சொகுசு வசதிகள் சேர்ப்பு உள்ளிட்ட காரணங்களால் அம்பானியின் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் கார் ரூ. 10 கோடிக்கும் அதிகமான மதிப்பைக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மயக்கத்தை வர வைக்கும் விலையில் புதிய சொகுசு கார்... வாங்கியது யார் தெரிஞ்சா மிரண்டுருவீங்க... முழு தகவல்!

வழக்கமான கல்லினன் கார் மாடலைக் காட்டிலும் பிளாக் பேட்ஜ் கல்லினன் பதிப்பில் அதிகளவில் கருப்பு நிற கூறுகளைக் காண முடிகின்றது. குறிப்பாக, பிரேக் காலிபர்கள், அலாய் வீல் ஆகியவற்றிலும் கருப்பு நிறத்தை மட்டுமேக் காணப்படுகின்றது. இதுபோன்ற தனித்துவமான அம்சங்களின் காரணத்தினாலயே இக்கார் வழக்கமான கல்லினனைக் காட்டிலும் ரூ. 1.25 கோடி அதிக விலையில் விற்கப்பட்டு வருகின்றது.

மயக்கத்தை வர வைக்கும் விலையில் புதிய சொகுசு கார்... வாங்கியது யார் தெரிஞ்சா மிரண்டுருவீங்க... முழு தகவல்!

அதேசமயம், இந்த மாடலில் சொகசு வசதிகளும் சற்று அதிகமாக தென்படுவது குறிப்பிடத்தகுந்தது. இக்காரில் 6.75 லிட்டர் ட்வின் டர்போசார்ஜட் பெட்ரோல் எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 600 பிஎஸ் மற்றும் 900 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இது வழக்கமான கல்லினன் காரைக் காட்டிலும் 29 பிஎஸ் மற்றும் 50 என்எம் அதிகம் ஆகும்.

மயக்கத்தை வர வைக்கும் விலையில் புதிய சொகுசு கார்... வாங்கியது யார் தெரிஞ்சா மிரண்டுருவீங்க... முழு தகவல்!

இவ்வாறு அனைத்திலும் அதிகளவு வெளிப்பாட்டையே அம்பானியின் கராஜில் புதிதாக இணைந்திருக்கும் கல்லினன் பிளாக் பேட்ஜ் கார் பெற்றிருக்கின்றது. அம்பானி குடும்பத்தினர் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் பேந்தம் 8 போன்ற மிக அதிக விலைக் கொண்ட கார்களைக் கூட பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

அம்பானி குடும்பத்தினர் ஓர் மிகப்பெரிய வாகன பிரியர்கள் ஆவர். எனவேதான் இவர்களிடத்தில் எக்கசக்க சொகுசு மற்றும் விலையுயர்ந்த கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. அந்தவகையில், பிஎம்டபிள்யூ ஐ8, ஃபெர்ராரி 812 சூப்பர் ஃபாஸ்ட், மெக்லாரன் 520எஸ் ஸ்பைடர், லம்போர்கினி அவடென்டர் எஸ் ரோட்ஸ்டர், ஃபெர்ராரி 488 ஜிடிபி, ஃபெர்ராரி போர்டோஃபினோ மற்றும் அஸ்டன் மார்டின் டிபி11 உள்ளிட்ட பல்வேறு சூப்பர் கார்களை இவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Mukesh Ambani Buys Rs.10 Crore Worthable Rolls Royce Cullinan Black Badge. Read In Tamil.
Story first published: Thursday, February 11, 2021, 18:12 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X