பெர்ஃபார்மென்ஸ் செடான்... பிஎம்டபிள்யூ எம்5 காம்படீசன் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?
புதிய பிஎம்டபிள்யூ எம்5 காம்படீசன் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய பிஎம்டபிள்யூ எம்5 காம்படீசன் (BMW M5 Competition) கார் இந்திய சந்தையில் இன்று (ஜூலை 1) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காருக்கு பிஎம்டபிள்யூ நிறுவனம் 1.62 கோடி ரூபாயை விலையாக நிர்ணயம் செய்துள்ளது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். செயல்திறன் மிக்க செடான் காரை எதிர்பார்ப்பவர்களுக்கு இது மிகச்சிறந்த தேர்வு.

விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில், எம்5 காம்படீசன் காரை தற்போது முன்பதிவு செய்து கொள்ள முடியும். பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்த காரை சிபியூ வழியில் இந்தியாவிற்கு கொண்டு வருகிறது. அதாவது முழுவதும் கட்டமைக்கப்பட்ட நிலையில் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும்.

பிஎம்டபிள்யூ எம்5 காம்படீசன் காரில், எம் ட்வின்பவர் டர்போ டெக்னாலஜி உடனான வி8 இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 625 ஹெச்பி பவர் மற்றும் 750 என்எம் டார்க திறனை உருவாக்க கூடியது. மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை இந்த கார் வெறும் 3.3 வினாடிகளில் எட்டி விடும்.

அதே சமயம் இந்த காரில் 8 ஸ்பீடு எம் ஸ்டெப்ட்ரானிக் டிரான்ஸ்மிஷன் வசதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் பேடில் ஷிஃப்டர் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த காரில் மொத்தம் மூன்று டிரைவிங் மோடுகள் வழங்கப்பட்டுள்ளன. ரோடு, ஸ்போர்ட் மற்றும் டிராக் ஆகியவைதான் அந்த மூன்று டிரைவிங் மோடுகள் ஆகும்.

பிஎம்டபிள்யூ எம்5 காம்படீசன் காரின் கேபினை பொறுத்தவரை, 12.3 இன்ச் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் டிஸ்ப்ளே மற்றும் மற்றொரு 12.3 இன்ச் சென்டர் டிஸ்ப்ளே ஆகியவை ஹைலைட்டாக உள்ளன. பிஎம்டபிள்யூ எம்5 காம்படீசன், செயல்திறனை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வேகமாக இயங்க கூடிய செடான் கார் ஆகும்.

எனவே உங்கள் கைகள் ஸ்டியரிங் வீலில் இருந்தாலும், பல்வேறு செயல்பாடுகளை குரல் கட்டளை மூலமாகவே கட்டுப்படுத்தலாம். இதுதவிர வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஹார்மன் கார்டன் சர்ரவுண்ட் சவுண்ட் சிஸ்டம் (பாவர்ஸ் & வில்கின்ஸ் டைமண்ட் சர்ரவுண்ட் சவுண்ட் சிஸ்டம் ஆப்ஷனல்) உள்ளிட்ட வசதிகளையும் இந்த கார் பெற்றுள்ளது.

மேலும் பிஎம்டபிள்யூ டிஸ்ப்ளே கீ, சர்ரவுண்ட் வியூ கேமரா மற்றும் ஹெட்-அப் டிஸ்ப்ளே உள்ளிட்ட வசதிகளும் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளன. அதே சமயம் இந்த காரின் முன் பகுதியில் பிஎம்டபிள்யூ நிறுவனத்திற்கே உரித்தான கிட்னி க்ரில் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 'L' வடிவ எல்இடி பகல் நேர விளக்குகள், பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் லேசர் ஹெட்லேம்ப்கள் ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன் 20 இன்ச் எம்-லைட் அலாய் வீல்கள், எல்இடி டெயில் லைட்கள் ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளன.
எம்5 காம்படீசன் காரின் வாடிக்கையாளர்கள், பிஎம்டபிள்யூ எக்ஸலன்ஸ் கிளப்பில் உறுப்பினர்கள் ஆகலாம் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய பிஎம்டபிள்யூ எம்5 காம்படீசன் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








