2021 ஃபோர்ஸ் குர்காவின் அறிமுகம் எப்போது? மஹிந்திரா தார் வாகனத்தின் ஆதிக்கத்தை உடைக்குமா?

மஹிந்திரா தாருக்கு போட்டி மாடலான 2021 ஃபோர்ஸ் குர்காவின் அறிமுகம் குறித்த தகவல்கள் அங்கீகாரம் பெற்ற டீலர் மூலமாக தெரியவந்துள்ளது. அதனை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

2021 ஃபோர்ஸ் குர்காவின் அறிமுகம் எப்போது? மஹிந்திரா தார் வாகனத்தின் ஆதிக்கத்தை உடைக்குமா?

மஹிந்திராவை போன்று இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்களுள் ஒன்றான ஃபோர்ஸ் மோட்டார்ஸ் புதிய தலைமுறை குர்கா எஸ்யூவி வாகனத்தை கடந்த 2020 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தி இருந்தது.

2021 ஃபோர்ஸ் குர்காவின் அறிமுகம் எப்போது? மஹிந்திரா தார் வாகனத்தின் ஆதிக்கத்தை உடைக்குமா?

அதனை மஹிந்திரா தாரை போல் இதன் அறிமுகமும் 2020ஆம் ஆண்டு முடிவதற்குள்ளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்னும் அறிமுகம் குறித்த அறிவிப்பு எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

2021 ஃபோர்ஸ் குர்காவின் அறிமுகம் எப்போது? மஹிந்திரா தார் வாகனத்தின் ஆதிக்கத்தை உடைக்குமா?

இந்த நிலையில் தற்போது கோயம்புத்தூரை சேர்ந்த அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப் ஒன்றின் வாயிலாக பிஎஸ்6 ஃபோர்ஸ் குர்கா வாகனத்தின் அறிமுகம் வருகிற மே மாதத்தில் இருக்கும் என்பது தெரியவந்துள்ளது. மெர்சிடிஸின் விலையுயர்ந்த வாகனங்களுள் ஒன்றான ஜி-கிளாஸை போல் தோற்றமளிக்கும் ஃபோர்ஸ் குர்கா மாடல் புதிய தலைமுறை அப்கிரேட்களாக வெளிப்புறத்தில் சில மாற்றங்களை ஏற்றுள்ளது.

2021 ஃபோர்ஸ் குர்காவின் அறிமுகம் எப்போது? மஹிந்திரா தார் வாகனத்தின் ஆதிக்கத்தை உடைக்குமா?

இதன்படி வாகனத்தின் முன்பக்கத்தில் எல்இடி டிஆர்எல்களுடன் வட்ட வடிவிலான ஹெட்லேம்ப்கள், புதிய ஃபாக் விளக்குகள், ஒற்றை-ஸ்லாட் உடன் க்ரில் அமைப்பு மற்றும் உயரத்தில் பொருத்தப்பட்ட எல்இடி நிறுத்து விளக்குகளை பெற்றுள்ள புதிய குர்கா உடன் ஸ்னோர்கில் காற்று ஏற்பான், ரூஃப் கேரியர் மற்றும் பின்பக்க கதவில் ஸ்பேர் சக்கரம் உள்ளிட்டவற்றையும் கூடுதல் ஆக்ஸஸரீயாக பெறலாம்.

2021 ஃபோர்ஸ் குர்காவின் அறிமுகம் எப்போது? மஹிந்திரா தார் வாகனத்தின் ஆதிக்கத்தை உடைக்குமா?

இவற்றுடன் பிஎஸ்6 குர்கா வாகனம் புதிய 16 இன்ச் அலாய் சக்கரங்களையும் பெற்றுள்ளது. அதேபோல் உட்புறத்திலும், ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட வாகனத்தில் இருந்து சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதை ஸ்பை படங்களின் மூலம் பார்த்திருந்தோம்.

2021 ஃபோர்ஸ் குர்காவின் அறிமுகம் எப்போது? மஹிந்திரா தார் வாகனத்தின் ஆதிக்கத்தை உடைக்குமா?

அதாவது ஆட்டோ எக்ஸ்போவில் இரட்டை நிறத்தில் உட்புற கேபினை கொண்டிருந்த இந்த பிஎஸ்6 வாகனத்தின் கேபின் சமீபத்திய சோதனை ஓட்டங்களில் ஒற்றை கருப்பு நிறத்தில் மட்டுமே காட்சியளித்திருந்தது.

2021 ஃபோர்ஸ் குர்காவின் அறிமுகம் எப்போது? மஹிந்திரா தார் வாகனத்தின் ஆதிக்கத்தை உடைக்குமா?

முதல் இரு இருக்கை வரிசைகள் முன்புறமாக பார்த்த நிலையிலும், கடைசி வரிசையில் இரு இருக்கைகள் ஒன்றை ஒன்று நேரெதிராக பார்த்த நிலையிலும் என புதிய குர்கா 7 நபர்கள் அமரக்கூடிய வாகனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

2021 ஃபோர்ஸ் குர்காவின் அறிமுகம் எப்போது? மஹிந்திரா தார் வாகனத்தின் ஆதிக்கத்தை உடைக்குமா?

தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டமானது முன்பக்க பவர் ஜன்னல் கண்ணாடிகளை செயல்படுத்த, ரிமோட் லாக்கிங் மற்றும் மேனுவல் ஏசி போன்ற அடிப்படை வசதிகளை நிச்சயம் கொண்டிருக்கும். அதேபோல் பயணிகளின் பாதுகாப்பு அம்சங்களும் முந்தைய தலைமுறையை காட்டிலும் மேம்படுத்தப்பட்டிருக்கும் என்பது உறுதி.

2021 ஃபோர்ஸ் குர்காவின் அறிமுகம் எப்போது? மஹிந்திரா தார் வாகனத்தின் ஆதிக்கத்தை உடைக்குமா?

புதிய ஃபோர்ஸ் குர்காவில் வழங்கப்படவுள்ள என்ஜின் குறித்த விபரங்கள் எதுவும் இதுவரையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. நமக்கு தெரிந்தவரையில் பிஎஸ்6-க்கு இணக்கமான 2.6 லிட்டர் மற்றும் ஆற்றல்மிக்க 2.2 லிட்டர் என்ற இரு டீசல் என்ஜின்கள் தேர்வுகளாக 5-ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷனில் வழங்கப்படலாம்.

2021 ஃபோர்ஸ் குர்காவின் அறிமுகம் எப்போது? மஹிந்திரா தார் வாகனத்தின் ஆதிக்கத்தை உடைக்குமா?

இருப்பினும் இதில் ஆற்றல்மிக்க என்ஜின் அறிமுகத்தின் போது வழங்கப்படாது என கூறப்படுகிறது. புதிய தலைமுறை தார் வாகனத்திற்கு மட்டுமில்லாமல், விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள மாருதி சுஸுகி ஜிம்னியையும் விற்பனையில் எதிர்க்கொள்ளவுள்ள பிஎஸ்6 குர்கா வாகனத்தின் ஆரம்ப விலை ரூ.10 லட்சத்தில் நிர்ணயிக்கப்படலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, March 15, 2021, 12:06 [IST]
English summary
2021 Force Gurkha Launch By May, Reveals Authorized Dealer.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+