இணையத்தில் கசிந்த 2021 மாருதி செலிரியோவின் தோற்றம்!! இந்திய அறிமுகம் விரைவில்...

2021 மாருதி சுஸுகி செலிரியோ காரின் தோற்றம் ஆனது காப்புரிமை படங்களாக இணையத்தில் கசிந்துள்ளது. அவற்றை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

இணையத்தில் கசிந்த 2021 மாருதி செலிரியோவின் தோற்றம்!! இந்திய அறிமுகம் விரைவில்...

சுஸுகி கேரேஜ் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலமாக கிடைத்துள்ள இந்த காப்புரிமை படங்கள் மூலமாக காரின் தோற்றத்தை தெளிவாக பார்க்க முடிகிறது. இதனால் டிசைனில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்களை நம்மால் அறிய முடிகிறது.

இணையத்தில் கசிந்த 2021 மாருதி செலிரியோவின் தோற்றம்!! இந்திய அறிமுகம் விரைவில்...

பிராண்டின் ஹெர்டெக்ட் ப்ளாட்ஃபாரத்தை பயன்படுத்தி புதிய தலைமுறை செலிரியோ உருவாக்கப்பட உள்ளதாக ஏற்கனவே மாருதி சுஸுகி தெரிவித்திருந்தது. மேலும் இந்த ப்ளாட்ஃபாரத்தினால் வாகனத்தின் பாதுகாப்பு, எரிபொருள் திறன் மற்றும் ரைடிங் டைனாமிக்ஸ் மேம்படுத்தப்பட்டிருக்கும் எனவும் மாருதி தெரிவித்துள்ளது.

இணையத்தில் கசிந்த 2021 மாருதி செலிரியோவின் தோற்றம்!! இந்திய அறிமுகம் விரைவில்...

அதுமட்டுமின்றி வாகனத்தின் வீல்பேஸையும் நீளமானதாக எதிர்பார்க்கலாம். இதனால் காரின் கேபின் நன்கு விசாலமானதாக இருக்கும். குறிப்பாக பின் இருக்கை பயணிகள் நன்கு கால்களை நீட்டி அமரலாம்.

இணையத்தில் கசிந்த 2021 மாருதி செலிரியோவின் தோற்றம்!! இந்திய அறிமுகம் விரைவில்...

காரின் அகலம் சற்று அதிகரிப்பதால் மேம்படுத்தப்பட்ட க்ரவுண்ட் க்ளியரென்ஸ் உடன் செலிரியோவிற்கு ஹேட்ச்பேக்கில் இருந்து க்ராஸ்ஓவர் ரக தோற்றம் கிடைக்கலாம். மற்றப்படி 2021 செலிரியோவின் சரியான பரிமாண அளவுகள் எவ்வளவு இருக்கும் என்பது தற்போதைக்கு தெரியவில்லை.

இணையத்தில் கசிந்த 2021 மாருதி செலிரியோவின் தோற்றம்!! இந்திய அறிமுகம் விரைவில்...

பரிமாண அளவுகள் சற்று மாற்றப்படுவதை போல் இந்த அடுத்த தலைமுறை ஹேட்ச்பேக்கின் டிசைன் வெளிப்புறம் மற்றும் உட்புறம் என இரு பக்கங்களிலும் திருத்தியமைக்கப்படலாம். இந்த வகையில் ஒருங்கிணைக்கப்பட்ட எல்இடி டிஆர்எல்களுடன் புதிய ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், புதியதாக வடிவமைக்கப்பட்ட அலாய் சக்கரங்கள், புதிய எல்இடி டெயில்லேம்ப்கள், ரீடிசைனில் பம்பர்களை 2021 செலிரியோ ஏற்கவுள்ளது.

இணையத்தில் கசிந்த 2021 மாருதி செலிரியோவின் தோற்றம்!! இந்திய அறிமுகம் விரைவில்...

உட்புறத்தில் பிராண்டின் ஸ்மார்ட்ப்ளே ஸ்டூடியோ தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் புதிய செலிரியோவில் வழங்கப்பட உள்ளது. வெளிப்புறத்தை போல் புதிய தலைமுறை செலிரியோவின் உட்புறமும் புதிய உள்ளமைவு, டேஸ்போர்டு டிசைன் மற்றும் புதிய இருக்கைகளுடன் முற்றிலுமாக மாற்றியமைக்கப்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இணையத்தில் கசிந்த 2021 மாருதி செலிரியோவின் தோற்றம்!! இந்திய அறிமுகம் விரைவில்...

ஏற்கனவே கூறியதுபோல் இந்த ஹேட்ச்பேக் காரில் புதியதாக வேகன்ஆர் உள்பட மற்ற மாருதி கார்களில் வழங்கப்படுகின்ற 1.2 லிட்டர் கே12 என்ஜின் தேர்வாக வழங்கப்பட உள்ளது. அதிகப்பட்சமாக 6000 ஆர்பிஎம்-இல் 82 பிஎச்பி மற்றும் 4200 ஆர்பிஎம்-இல் 113 என்எம் டார்க் திறனை இந்த கே12 என்ஜின் வெளிப்படுத்தக்கூடியது.

இணையத்தில் கசிந்த 2021 மாருதி செலிரியோவின் தோற்றம்!! இந்திய அறிமுகம் விரைவில்...

அதேநேரம் தற்போதைய 1.0 லிட்டர் என்ஜின் உடனும் புதிய தலைமுறை செலிரியோ தொடர்ந்து விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த என்ஜின் 6000 ஆர்பிஎம்-இல் 68 பிஎச்பி மற்றும் 3500 ஆர்பிஎம்-இல் 90 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

இணையத்தில் கசிந்த 2021 மாருதி செலிரியோவின் தோற்றம்!! இந்திய அறிமுகம் விரைவில்...

இந்த இரு என்ஜின்களுடனும் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 5-ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வு கொடுக்கப்பட உள்ளது. அதேநேரம் பெட்ரோல்-சிஎன்ஜி தேர்வை தொடர்ந்து செலிரியோவில் மாருதி சுஸுகி நிறுவனம் வழங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இணையத்தில் கசிந்த 2021 மாருதி செலிரியோவின் தோற்றம்!! இந்திய அறிமுகம் விரைவில்...

தற்போது வரையில் புதிய செலிரியோ ஹேட்ச்பேக் காரின் அறிமுகத்தை மாருதி சுஸுகி நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை. நமக்கு தெரிந்த வரையில் நடப்பு 2021ஆம் ஆண்டின் இறுதியில் இரண்டாம் தலைமுறை செலிரியோவை மாருதி அறிமுகப்படுத்தலாம்.

Most Read Articles
English summary
2021 Maruti Celerio Patent Leaks Ahead Of Launch – Exteriors Detailed.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X