6 ஏர்பேக்குகள், சன்ரூஃப்... வேற லெவலுக்கு மாறப்போகும் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி...

புதிய தலைமுறை மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி குறித்து பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனை இந்த செய்தியில் பார்க்கலாம்.

6 ஏர்பேக்குகள், சன்ரூஃப்... வேற லெவலுக்கு மாறப்போகும் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி...

இந்தியாவில் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, மிகவும் பிரபலமான சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார்களில் ஒன்று. கடந்த 2016ம் ஆண்டில் இருந்து, விட்டாரா பிரெஸ்ஸா காம்பேக்ட் எஸ்யூவியை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. தற்போது இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி கார்களில் ஒன்றாக மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா உள்ளது.

6 ஏர்பேக்குகள், சன்ரூஃப்... வேற லெவலுக்கு மாறப்போகும் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி...

டிசைனில் ஒரு சில மாற்றங்கள் மற்றும் புதிய வசதிகள் சேர்க்கப்பட்ட விட்டாரா பிரெஸ்ஸாவின் புதிய மாடலை மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்தது. இந்த புதிய மாடலில், பிஎஸ்-6 விதிகள் காரணமாக 1.3 லிட்டர் டிடிஐஎஸ் 200 டீசல் இன்ஜின் கைவிடப்பட்டது.

6 ஏர்பேக்குகள், சன்ரூஃப்... வேற லெவலுக்கு மாறப்போகும் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி...

அதற்கு பதிலாக 1.5 லிட்டர் கே15பி மைல்டு-ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் தேர்வு மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியில் வழங்கப்பட்டது. ஆனால் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் தற்போது போட்டி அதிகரித்து கொண்டே வருகிறது. நிஸான் மேக்னைட், ரெனால்ட் கைகர் உள்ளிட்ட கார்கள் புதிதாக விற்பனைக்கு வந்துள்ளன.

6 ஏர்பேக்குகள், சன்ரூஃப்... வேற லெவலுக்கு மாறப்போகும் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி...

இந்த போட்டியை சமாளிக்கும் வகையில், விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி காரின் புதிய தலைமுறை மாடலை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இந்த புதிய தலைமுறை மாடலில் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகளுடன் பெரிய டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

6 ஏர்பேக்குகள், சன்ரூஃப்... வேற லெவலுக்கு மாறப்போகும் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி...

அத்துடன் தற்போது வேகமாக பிரபலமடைந்து வரும் கனெக்டட் கார் தொழில்நுட்பம் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. அதே சமயம் பாதுகாப்பை மேலும் மேம்படுத்தும் விதமாக டாப் வேரியண்ட்களில் 6 ஏர்பேக்குகள் கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சன்ரூஃப் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் உள்ளிட்ட வசதிகளும் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

6 ஏர்பேக்குகள், சன்ரூஃப்... வேற லெவலுக்கு மாறப்போகும் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி...

இந்த வரிசையில் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் வழங்கப்படுமா? இல்லையா? என்பதை காணவும் ஆர்வமாக உள்ளது. எனினும் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் தொடர்ந்து வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. எனினும் 4 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுக்கு பதிலாக 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

6 ஏர்பேக்குகள், சன்ரூஃப்... வேற லெவலுக்கு மாறப்போகும் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி...

அதே நேரத்தில், 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதுகுறித்து டீம்-பிஎச்பி செய்தி வெளியிட்டுள்ளது. புதிய தலைமுறை விட்டாரா பிரெஸ்ஸா மட்டுமல்லாது, சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் மற்றொரு புதிய காரை விற்பனைக்கு அறிமுகம் செய்யவும் மாருதி சுஸுகி நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

6 ஏர்பேக்குகள், சன்ரூஃப்... வேற லெவலுக்கு மாறப்போகும் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி...

விட்டாரா பிரெஸ்ஸாவிற்கு கீழாக இந்த புதிய கார் நிலைநிறுத்தப்படும். இதன் மூலம் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் அதிகரித்து வரும் போட்டியை எளிமையாக சமாளிப்பதோடு, இந்த செக்மெண்ட்டில் மாருதி சுஸுகி நிறுவனம் தனது ஆதிக்கத்தை முழுமையாக நிலைநிறுத்தி கொள்ளவும் முடியும்.

Most Read Articles

English summary
New-Gen Maruti Suzuki Vitara Brezza To Get 6 Airbags: More Details Leaked Ahead Of Launch. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X