2021 கியா கார்னிவலின் புதிய டீசர் படம் வெளியீடு!! விரைவில் அமெரிக்காவில் அறிமுகமாகிறது

அமெரிக்க சந்தையில் செடோனா எம்பிவி காருக்கு மாற்றாக புதிய கார்னிவல் எம்பிவி காரை கியா நிறுவனம் வருகிற பிப்ரவரி 23ஆம் தேதி அறிமுகப்படுத்தவுள்ளது. அதற்கு முன்னதாக தற்போது இந்த காரின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

2021 கியா கார்னிவலின் புதிய டீசர் படம் வெளியீடு!! விரைவில் அமெரிக்காவில் அறிமுகமாகிறது

அமெரிக்காவில் முதல் காராக கியாவின் புதிய லோகோ உடன் அறிமுகப்படுத்தப்பட உள்ள புதிய தலைமுறை கார்னிவல் கார் 7 இருக்கை, 8 இருக்கை என்ற இரு விதமான தேர்வுகளில் அங்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

2021 கியா கார்னிவலின் புதிய டீசர் படம் வெளியீடு!! விரைவில் அமெரிக்காவில் அறிமுகமாகிறது

கியாவின் தாயகமான தென் கொரியாவில் விற்பனை செய்யப்படும் அதே தோற்றத்தில் அப்படியே அமெரிக்க சந்தைக்கு செல்லவுள்ள புதிய கார்னிவலின் நீளம் புதிய கட்டமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் முந்தைய தலைமுறையை காட்டிலும் 40மிமீ அதிகரித்துள்ளது. அதேபோல் வீல்பேஸின் நீளமும் 30மிமீ அதிகரிக்கப்பட்டுள்ளது.

2021 கியா கார்னிவலின் புதிய டீசர் படம் வெளியீடு!! விரைவில் அமெரிக்காவில் அறிமுகமாகிறது

காரின் பின்பக்கத்தில் பொருட்களை வைக்கும் இடத்தின் கொள்ளளவு 2,905மிமீ ஆக வழங்கப்பட்டுள்ளது. புதிய கார்னிவலில் ஓட்டுனர் உதவி அமைப்புகளை வழங்கப்பட உள்ளதை உறுதிப்படுத்தி இருந்த கியா நிறுவனம் இந்த எம்பிவி காரில் அதிகப்பட்சமாக 290 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய வி6 என்ஜினை வழங்கியுள்ளது.

2021 கியா கார்னிவலின் புதிய டீசர் படம் வெளியீடு!! விரைவில் அமெரிக்காவில் அறிமுகமாகிறது

காரின் முன்பக்கம் கியாவின் அடையாளமான புலி மூக்கு வடிவிலான க்ரில், கூர்மையான தோற்றத்தில் எல்இடி ஹெட்லேம்ப்கள் உள்ளிட்டவற்றால் நிரம்பியுள்ளது. இவற்றுடன் சில்வர் நிற C-பில்லர், தள்ளு கூடிய வகையிலான பின்பக்க கதவுகள், நேர்த்தியான வடிவில் பின்பக்க விளக்குகள் போன்றவற்றை இதன் வெளிப்புறத்தில் பார்க்க முடிகிறது.

2021 கியா கார்னிவலின் புதிய டீசர் படம் வெளியீடு!! விரைவில் அமெரிக்காவில் அறிமுகமாகிறது

உட்புறம் 12.3 இன்ச்சில் டிஜிட்டல் இன்ஸ்டெரூமெண்டேஷன் மற்றும் 12.3 இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை சிறப்பம்சங்களாக கொண்டுள்ளது. இருக்கைகளில் கால்களுக்கான தலையணை போன்றவை அட்ஜெஸ்ட் செய்யும் வகையில் வழங்கப்பட்டுள்ளன.

2021 கியா கார்னிவலின் புதிய டீசர் படம் வெளியீடு!! விரைவில் அமெரிக்காவில் அறிமுகமாகிறது

இந்தியாவிலும் கார்னிவல் எம்பிவி காரை கியா நிறுவனம் விற்பனை செய்கிறது. ஆனால் தென் கொரிய கார்னிவலுக்கும், நமது இந்திய கார்னிவலுக்கும் அதிகளவில் வேறுபாடுகள் உள்ளன. குறிப்பாக அங்கு புதிய தலைமுறையில் கார்னிவல் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் நம் நாட்டில் இன்னமும் முந்தைய தலைமுறையில்தான் உள்ளது.

2021 கியா கார்னிவலின் புதிய டீசர் படம் வெளியீடு!! விரைவில் அமெரிக்காவில் அறிமுகமாகிறது

இந்தியாவில் விற்பனையில் உள்ள கார்னிவலில் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 200 பிஎஸ் மற்றும் 440 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது.

2021 கியா கார்னிவலின் புதிய டீசர் படம் வெளியீடு!! விரைவில் அமெரிக்காவில் அறிமுகமாகிறது

2020 ஆட்டோ எக்ஸ்போவின் மூலம் கியாவின் இரண்டாவது காராக இந்தியாவில் அறிமுகமான கார்னிவலுக்கு இப்போது வரையில் நேரடி போட்டி மாடல்கள் எதுவும் நம் நாட்டில் விற்பனையில் இல்லை. டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவின் டாப் வேரியண்ட்கள் மட்டுமே கார்னிவலுக்கு ஒரு சில பிரிவுகளில் போட்டியாக உள்ளன.

Most Read Articles

மேலும்... #கியா #kia
English summary
All-New 2021 Kia Carnival Teased Ahead Of Debut On Feb 23 In The US.
Story first published: Thursday, February 18, 2021, 13:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X