புதிய ஹூண்டாய் அல்கஸார் 7 சீட்டர் எஸ்யூவி எப்போது அறிமுகம்? - புதிய தகவல்!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய அல்கஸார் 7 சீட்டர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவது குறித்த புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.

புதிய ஹூண்டாய் அல்கஸார் 7 சீட்டர் எஸ்யூவி எப்போது அறிமுகம்? - புதிய தகவல்!

இந்தியாவில் எஸ்யூவி கார்களுக்கு பெரிய அளவில் வரவேற்பு இருந்து வருகிறது. இதனால், புதிய புதிய ரகத்திலும், இருக்கை வசதிகளிலும் எஸ்யூவி மாடல்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில், நாட்டின் இரண்டாவது பெரிய கார் நிறுவனமான ஹூண்டாய் மோட்டார் விரைவில் புதிய 7 சீட்டர் எஸ்யூவி மாடலை இந்தியாவில் களமிறக்க உள்ளது.

புதிய ஹூண்டாய் அல்கஸார் 7 சீட்டர் எஸ்யூவி எப்போது அறிமுகம்? - புதிய தகவல்!

இந்த புதிய எஸ்யூவி ஹூண்டாய் நிறுவனத்தின் சூப்பர் ஹிட் மாடலான க்ரெட்டா அடிப்படையிலான 7 சீட்டர் மாடல் என்பதால், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறி கிடக்கிறது.

புதிய ஹூண்டாய் அல்கஸார் 7 சீட்டர் எஸ்யூவி எப்போது அறிமுகம்? - புதிய தகவல்!

இந்த புதிய 7 சீட்டர் எஸ்யூவி அல்கஸார் என்ற நாமகரணத்தை வெளியிட்டது ஹூண்டாய் நிறுவனம். இதனால், இந்த எஸ்யூவி விரைவில் வருவது உறுதியானது.

புதிய ஹூண்டாய் அல்கஸார் 7 சீட்டர் எஸ்யூவி எப்போது அறிமுகம்? - புதிய தகவல்!

இந்த சூழலில், வரும் ஜூன் மாதம் புதிய ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்படும் வாய்ப்பு உள்ளதாக ஆட்டோகார் புரோ தளத்தின் செய்தி தெரிவிக்கிறது.

புதிய ஹூண்டாய் அல்கஸார் 7 சீட்டர் எஸ்யூவி எப்போது அறிமுகம்? - புதிய தகவல்!

அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் மற்றும் டாடா சஃபாரி மாடல்களுக்கு இந்த புதிய ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவி போட்டியாக இருக்கும். அத்துடன், மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவிக்கும் இது நேரடி போட்டியை தரும்.

புதிய ஹூண்டாய் அல்கஸார் 7 சீட்டர் எஸ்யூவி எப்போது அறிமுகம்? - புதிய தகவல்!

ஹூண்டாய் க்ரெட்டா அடிப்படையிலான மாடலாக இருப்பதால், முகப்பு மற்றும் சி பில்லர் வரை வடிவமைப்பில் ஒத்திருக்கும். ஆனால், மூன்றாவது வரிசையை அமைக்கும் விதமாக, கூடுதல் நீளத்துடன் டி பில்லருக்கு பின்னால் வடிவமைப்பில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும்.

புதிய ஹூண்டாய் அல்கஸார் 7 சீட்டர் எஸ்யூவி எப்போது அறிமுகம்? - புதிய தகவல்!

இந்த புதிய அல்கஸார் எஸ்யூவியில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள் இடம்பெற்றிருக்கும். தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் வசதிகளும் கொடுக்கப்பட்டு இருக்கும்.

புதிய ஹூண்டாய் அல்கஸார் 7 சீட்டர் எஸ்யூவி எப்போது அறிமுகம்? - புதிய தகவல்!

ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் கியா செல்டோஸ் கார்களில் இடம்பெற்றிருக்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள்தான் இதிலும் இடம்பெறும். மேலும், 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வும் எதிர்பார்க்கலாம். மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படும்.

புதிய ஹூண்டாய் அல்கஸார் 7 சீட்டர் எஸ்யூவி எப்போது அறிமுகம்? - புதிய தகவல்!

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியைவிட சற்று கூடுதல் விலை நிர்ணயிக்கப்படும். அதேநேரத்தில், எம்ஜி ஹெக்டர் ப்ளஸ், டாடா சஃபாரி மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி500 மாடல்களுக்கு நெருக்கடியை கொடுக்கும் விதத்தில் மிக சவாலான விலை நிர்ணயிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பு: மாதிரி படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

Most Read Articles

English summary
According to report, Hyundai is planning to launch new Alcazar 7 seater SUV by June, 2021.
Story first published: Tuesday, March 2, 2021, 12:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X