இப்படியொரு ஹூண்டாய் க்ரெட்டா காரை இதுவரையில் பார்த்திருக்க மாட்டீங்க!! இந்தியாவிலேயே இதுதான் முதல்முறையாம்...

மிக பெரிய, 22 இன்ச்சில் ரிம்களை கொண்ட சக்கரங்களுடன் புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா கார் ஒன்று கஸ்டமைஸ்ட் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடிஃபை க்ரெட்டா காரை பற்றிய விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இப்படியொரு ஹூண்டாய் க்ரெட்டா காரை இதுவரையில் பார்த்திருக்க மாட்டீங்க!! இந்தியாவிலேயே இதுதான் முதல்முறையாம்...

கொரோனா வைரஸ் பரவலுக்கு இடையே கடந்த 2020 மார்ச் மாதத்தில் புதிய இரண்டாம் தலைமுறை க்ரெட்டா எஸ்யூவி காரை ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது.

இப்படியொரு ஹூண்டாய் க்ரெட்டா காரை இதுவரையில் பார்த்திருக்க மாட்டீங்க!! இந்தியாவிலேயே இதுதான் முதல்முறையாம்...

வாடிக்கையாளர்களின் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுவரும் இந்த 2020 ஹூண்டாய் கார் தான் தற்போதைக்கு அதிகளவில் விற்பனையாகும் எஸ்யூவி காராக விளங்குகிறது. இதனால் புதிய க்ரெட்டா அவ்வப்போது பல்வேறு வாடிக்கையாளர்களால் மாடிஃபை செய்யப்பட்டு வருவது பெரிய அளவில் ஆச்சிரியப்படக்கூடிய விஷயம் அல்ல.

இப்படியொரு ஹூண்டாய் க்ரெட்டா காரை இதுவரையில் பார்த்திருக்க மாட்டீங்க!! இந்தியாவிலேயே இதுதான் முதல்முறையாம்...

ஆனால் நாம் இந்த செய்தியில் பார்க்கவுள்ள மாடிஃபை க்ரெட்டா பெரிதும் நம்மை ஆச்சிரியப்படுத்துகிறது. ஏனெனில் இந்த காரில் 5-ஸ்போக் டிசைனில், பெரிய அளவிலான 22 இன்ச்சில் ரிம்களுடன் ப்ளாட்டி சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இப்படியொரு ஹூண்டாய் க்ரெட்டா காரை இதுவரையில் பார்த்திருக்க மாட்டீங்க!! இந்தியாவிலேயே இதுதான் முதல்முறையாம்...

இவ்வளவு பெரியதாக, 22 இன்ச்சில் ரிம்களை கொண்ட சக்கரங்களை ஏற்றுள்ள முதல் புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா கார் இதுவே ஆகும். பஞ்சாப், லூதியானா நகரத்தை சேர்ந்த மோங்கா டயர்கள் என்ற நிறுவனத்தின் உதவியுடன் பொருத்தப்பட்டுள்ள இந்த பிளாட்டி சக்கரங்கள் க்ரோம்-ஆல் ஃபினிஷ் செய்யபட்டுள்ளன.

இப்படியொரு ஹூண்டாய் க்ரெட்டா காரை இதுவரையில் பார்த்திருக்க மாட்டீங்க!! இந்தியாவிலேயே இதுதான் முதல்முறையாம்...

மேலும், இந்த சக்கரங்களில் குறைவான-அளவுகளை கொண்ட டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த 22 இன்ச் ரிம்கள் ஹூண்டாய் நிறுவனம் க்ரெட்டாவிற்கு வழங்கும் சக்கர வளைவுகளின் விட்டத்திற்கு கணக்கச்சிதமாக பொருந்தியுள்ளது.

இப்படியொரு ஹூண்டாய் க்ரெட்டா காரை இதுவரையில் பார்த்திருக்க மாட்டீங்க!! இந்தியாவிலேயே இதுதான் முதல்முறையாம்...

அதேநேரம் இந்த சக்கரங்களினால் க்ரெட்டாவின் மொத்த பரிமாண அளவுகளும் சிறிது அதிகரிக்கப்பட்டுள்ளது போன்ற உணர்வு நமக்கு ஏற்படுகிறது. இந்த கஸ்டம் சக்கரங்களுடன் இந்த மாடிஃபை க்ரெட்டாவில் முன் சக்கரங்களில் பொருத்தப்படும் டிஸ்க் காலிபர்கள் மற்றும் பின் சக்கரங்களில் பொருத்தப்பட்டுள்ள ட்ரம் ப்ரேக்குகளின் நிறமும் நியோன் பச்சை நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

இப்படியொரு ஹூண்டாய் க்ரெட்டா காரை இதுவரையில் பார்த்திருக்க மாட்டீங்க!! இந்தியாவிலேயே இதுதான் முதல்முறையாம்...

இவை தவிர்த்து காரின் தோற்றத்தில் வேறெந்த மாற்றமும் கொண்டுவரப்பட்டுள்ளதுபோல் தெரியவில்லை. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஹூண்டாய் க்ரெட்டாவில் மூன்று விதமான என்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

இப்படியொரு ஹூண்டாய் க்ரெட்டா காரை இதுவரையில் பார்த்திருக்க மாட்டீங்க!! இந்தியாவிலேயே இதுதான் முதல்முறையாம்...

இதில் 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகளும், 1.5 லிட்டர் டர்போ-டீசல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு டார்க்-கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வும் கொடுக்கப்படுகின்றன.

இப்படியொரு ஹூண்டாய் க்ரெட்டா காரை இதுவரையில் பார்த்திருக்க மாட்டீங்க!! இந்தியாவிலேயே இதுதான் முதல்முறையாம்...

மூன்றாவது என்ஜின் தேர்வான 1.4 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் உடன் 7-ஸ்பீடு ட்யுல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இவற்றின் எக்ஸ்ஷோரூம் ரூ.9.99 லட்சத்தில் இருந்து ரூ.17.53 லட்சம் வரையில் உள்ளன.

Most Read Articles

English summary
Check Out India’s First New-Gen Hyundai Creta With 22-Inch Rims. Read In Tamil.
Story first published: Saturday, March 27, 2021, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X